Sunday 1 October 2023

"The Monk Who Sold His Ferrari" - Robin Sharma

உலகின் முன்னணி தலைமைப்பண்பு நிபுணர்களில் ஒருவராக அறியப்படுபவர் ராபின் ஷர்மா. 1998-ம் ஆண்டு வெளியான இவரது

"தனது பொக்கிஷத்தை விற்ற துறவி"
"The Monk Who Sold His Ferrari"

புத்தகம், இன்றளவும் தன்னிறைவான வாழ்க்கைக்கான வழிகாட்டியாகத் திகழ்கிறது

இன்றைய அவசரகதியான வாழ்க்கைமுறையில் இலக்குகளை அடைவதற்காகவும் பணத்தைத் தேடியும் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம்
இதனால், நம்மில் பெரும்பாலானோர் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக, தன்னிறைவுடன் இருக்கிறோமா என்பதை அறிந்துகொள்வதற்குகூட
முயல்வதில்லை..அப்படி ஓய்வில்லாமல் வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருப் பவர்களை மனத்தில்வைத்து அவர்களுக்கு வழிகாட்டுவதற்காக எழுதப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம்.

அதில் இருந்து சில சிறந்த கருத்துக்கள் -
#தலைமைத்துவம் என்பது ஒரு தலைப்போ அல்லது ஒரு பதவியோ அல்ல. அது தாக்கம், செல்வாக்கு மற்றும் உத்வேகம் பற்றியது.

#கடின உழைப்பு கதவுகளைத் திறந்து இந்த உலகத்தை நமக்கு காட்டுகின்றது.

#முதலில் நீங்கள் உங்களை வழிநடத்தக் கற்றுக்கொள்ளும்வரை உங்களால் மற்றவர்களை வழிநடத்த முடியாது.

# ஒவ்வொருவரும் அவர்களை சுற்றியுள்ள மக்களிடம் ஏதோவொரு வழியில் செல்வாக்கு செலுத்துகின்றனர்.

#ஆரோக்கியமாக இருப்பது என்பது உங்களை மேலும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் செயல்.

#பேஸ்புக்கில் பல நண்பர்களைக் கொண்டிருக்கும் ஒரு உலகில் நாம் வாழ்கிறோம், ஆனால் மனித உறவுகளை இழந்துவிட்டோம்.

#யாரும் தோல்வியடைய விரும்பவில்லை. எனவே நம்மில் பெரும்பாலானோர் முயற்சி கூட செய்வதில்லை.

#அதிகாலை நேரமாக எழுவது என்பது எனக்கு நானே கொடுத்துக்கொள்ளக்கூடிய பரிசுகளில் ஒன்று.

#காலநேரத்திற்கு எதிரான போராட்டமே உண்மையான போராட்டம் என்பதை தலைவர்கள் புரிந்துள்ளார்கள்.

#அனைத்தும் இருமுறை உருவாக்கப்படுகின்றது. முதலில் மனதில், பிறகு உண்மையில்.

#மிகச்சிறிய செயல்கள் என்பவை உன்னதமான எண்ணங்களை விட எப்போதும் சிறந்தவை.

#மாற்றம் என்பது தொடக்கத்தில் கடினமானதாகவும், நடுவில் குழப்பமானதாகவும், இறுதியில் சிறந்ததாகவும் உள்ளது.

#மனம் என்பது ஒரு அற்புதமா வேலைக்காரன், ஆனால் ஒரு பயங்கரமான எஜமான்.

#மகிழ்ச்சி என்பது ஒரு பயணம், அது இலக்ல்ல.

No comments:

Post a Comment