786 என்பது வருடம் இல்லை.குரான் இறங்கிய காலகட்டத்தில் எண்கள் இல்லை.எழுத்துக்கள் தான் எண்களாக கருதப்பட்டன
உதாரணம் அ என்றால் 10 இ என்றால் 15 க என்றால் 3.
இப்போ ஓரு பொருளுடைய விலை 28 என்றால் அதனை அ இ க என்று விலை பேசுவார்கள்.குரான் இறங்குவதற்கு முன்பிருந்தே இந்த எழுத்துக்களை கொண்டு எண்களை கூறுவது வழக்கமாக இருந்தது.
அதற்கு அப்ஜ்த் abjad numerals என்று அழைக்கிறார்கள்
அலிஃ என்றால் 1
பெ என்றால் 2
அட்டவணை பார்த்தால் உங்களுக்கே புரியும்.
"பிஸ்மில்லாஹ் இர்ரஹ்மான் ரஹீம்" என்பது 19 எழுத்துக்களை கொண்ட ஓரு வாக்கியம்
அந்த ஓரு வாக்கியத்திற்கு abjad முறையில் எண்களை கொடுத்து கூட்டினால் வரும் கூட்டு தொகை 786.
பிஸ்மில்லாஹ் இர்ரஹ்மான் ரஹீம் = இறைவனின் பெயரால் = In the name of God
எல்லா நேரமும் இறைவனின் நினைவு இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் அதனை சுருக்கி 786 என்று எழுதுகிறார்கள்.எண்ணம் தான் இங்கு முக்கியம் எண் என்பது முக்கியம் அல்ல.இஸ்லாமில் எப்போதும் எல்லா வற்றையும் தெரிந்தும் புரிந்தும் தான் செயல்படுத்த வேண்டும். ஓருவர் 786 என்று எழுதினால் "இறைவனின் பெயரால்" ஆரம்பிக்கிறேன் என்னும் மன நிலை இருக்க வேண்டும்.இல்லை என்றால் 786 என்பது ஓரு சாதாரண எண் மட்டுமே.
786 எண் யாரையும் காப்பது இல்லை. "இறைவனின் பெயரால்" ஆரம்பிக்கிறேன் என்று என்னும் அந்த எண்ணமே அவசியம்.
Note: 786 ஐ விட குரானில் 19 என்ற ஓரு எண் குரான் இறைவிடமிருந்து தான் இறங்கியது என்பதற்கு ஓரு மிக பெரிய கணித கட்டமைப்பை கொண்டுள்ளது
19 அரேபிய எழுத்துக்கள்
19 அரேபிய எழுத்துக்களுக்கு இணையான 19 ஆங்கில வார்த்தைகள்
No comments:
Post a Comment