இந்த அழகிய பூ நாகலிங்க பூ என்றழைக்கப்படுவதின் காரணம் இந்த பூவின் உள்ளில் இருக்கும் சிவ பெருமானின் லிங்கம் போன்ற உருவம், அதனை சுற்றி இருக்கும் பீடம், அதன் தலை மேல் உயர்ந்து நெடிந்து இருக்கும் பல தலை நாகம் (பாம்பு) போன்ற அமைப்பு இவற்றால் தான் இதை நாகலிங்க பூ என்று சொல்வார்கள்.
இந்த லிங்கம், பீடம் போன்றவை மஞ்சள் நிறத்திலும், மேலிருக்கும் நாகம் போன்ற அமைப்பு சிவப்பு நிறத்திலும் இதன் ஐந்து இதழ்கள் சிவப்பு நிறத்திலும் இருக்கும்.
நல்ல மணம் வீசும் இந்த அழகிய மலர்களை பலரும் வாங்கி சிவன் கோயில்களில் கொடுப்பார்கள். தெய்வீக தன்மை நிறைந்ததாக கருதப்படுகிறது இந்த அழகிய மலர்.
இந்த பூக்கள் இம்மரத்தின் கிளைகள், வள்ளி கம்பு போல் இருக்கும் பாகங்கள், மரம் இவற்றில் இருந்து உண்டாகிறது. மரம் நீண்டு வானுயர்ந்து இருக்கும்.
மற்ற மரங்களை போல் தடி பகுதி இல்லாமல் சிக்குப்பிடித்த நூல் கண்டு சுற்றியதைப்போல் இருக்கும்.
நல்ல மணம் வீசும் இம்மலர் பல நோய்களுக்கு மருந்தாக உபயோகிக்கபடுகிறது. இதன் பூவின் சாறு எடுத்து தடவி வந்தால் வெள்ளை தழும்புகள்,(leucoderma) வெண்குஷ்டம், வெண் புள்ளிகள் இவை மறைந்து விடும். இதன் பூ, பட்டை இவை ரத்த கொதிப்பு, கான்சர், வலி இவற்றிற்கு நல்ல நிவாரணி. இதைத்தவிர பல் வலி, வீக்கம்,மலேரியா, வயிற்று வலி, ஜலதோஷம் இவற்றிர்க்கும் இதை மருந்தாக உபயோகிக்கிறார்கள்.
No comments:
Post a Comment