எழுத்தாளர் சுஜாதா-
வரும் காலங்கள் எப்படி இருக்குமென பல
ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியிருப்பார்..
அவற்றில் சில --
* செல் போன்கள் இரட்டிப்பாகும்-
* போக்குவரத்து அதிகரித்து நகரங்களில் அனைவரும்
மாஸ்க் அணிவோம்-
* பெண்கள் வருஷம் மூன்று தினம் புடவை கட்டுவார்கள்.-
* ஆண்கள் அதிக அளவில் தலை முடியை இழப்பார்கள்-
* தமிழ்நாட்டில் அ.தி.மு.க அல்லது தி.மு.க கூட்டணி ஆட்சி
நடக்கும்.-
* அலுவலகத்தில் செய்வது அத்தனையும் செல்போனில்
செய்ய முடியும். (work from home)-
* கவிதைத் தொகுப்புகளில் காதல் குறையும்-
வாரப் பத்திரிகைகளில் தொடர்கதைகளும் சிறுகதைகளும்
அறவே நீக்கப்பட்டு, முழுக்க முழுக்கப் பெண்கள் படங்களாக,
ஒரிரண்டு வாக்கியங்களுடன் வெளிவரும்.-
* தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் வெளிநாட்டில் அதிகம்
இருப்பார்கள்.-
* அரசியல் மேடைகளில் மட்டும் தமிழ் உணர்வு
மிச்சமிருக்கும்-
*முடிவெட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டி வரும்-
* எதிர்காலத்தில் data, voice எல்லாமே இலவசமாகக்
கிடைக்கும் என்பார்.-
என நூற்றாண்டின் இறுதியில் உதிர்த்திருந்தாலும் இப்போதும்
பல விஷயங்கள் பொருந்திப்போகிறது.
No comments:
Post a Comment