செவ்வாழையில் எண்ணிலடங்காத சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. தினந்தோறும் இரவு வேளைகளில் செவ்வாழைப்பழம் சாப்பிட பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
தினமும் இரவு உணவிற்கு பிறகு ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரணசக்தி உண்டாகும்.
தொடர்ந்து 48 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும். ஆண்மை குறைவு பிரச்சனைகள் நீங்கும்.
செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்கள் உருவாவது, இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்கிறது.
மலச்சிக்கல் இருப்பவர்கள், மூல நோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் விரைவில் நோயில் இருந்து விடுபடலாம்.
வயது முதிர்வால் ஏற்படும் கண்பார்வை குறை உள்ளவர்கள் 21 நாட்கள் தினமும் செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வந்தால் கண் நன்றாக தெரியும்.
பல் வலி, பல்லசைவு போன்ற பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும்.
சர்க்கரை நோயாளிகள் மருத்துவ ஆலோசனையின் படி செவ்வாழையை சாப்பிடலாம், ஏனெனில் ரத்த சர்க்கரையின் அளவை சீராக்கும் தன்மை செவ்வாழைக்கு உண்டு.
காலையில் முதல் உணவாக ஒரு செவ்வாழைப்பழத்தை உமிழ்நீருடன் கூழாக மென்று சாப்பிட்டால் ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகளில் 60 சதவிகிதம் கிடைத்துவிடும்.
நம் உடலும் அதன் மொத்த சத்துக்களை கிரகித்துக் கொள்வதால் ஏராளமான நன்மைகளை பெறலாம்.
பொதுவாக எடையைக் குறைக்க நினைப்போர் கலோரிகள் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை எடுக்கக்கூடாது. செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு. எனவே எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் ஒரு செவ்வாழையை காலையில் உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம் எடுக்காமல் இருக்கும்.
உடல் பருமனைக் குறைக்க,இரவில் உட்கொள்வதை விட காலையில் உட்கொள்வது நல்லது.
No comments:
Post a Comment