Sunday, 3 December 2023

படித்ததில் பிடித்தது


  1. அலைபேசி : என்னைப் பொருத்தவரை ₹15,000 மேல் விலையுள்ள அலைபேசி ஆடம்பரம் தான். 95% பேர் போன் பேசவும் , போட்டோ எடுக்கவும், பொழுதுபோக்கவும் ,வகுப்புகள் / மீட்டிங் க்கு தான் பயன்படுத்தறாங்க. அது எல்லா போனும் பண்ணும் . அதுக்கு எதுக்கு ஐம்பதாயிரம் ,லட்சம் கொடுத்து போன் வாங்கறாங்க னே தெரியல.வேகமா வேலை செய்யும் னு சொன்னா கொஞ்சம் மெதுவாக கோரா செயலி திறந்தா என்ன குறைச்சு போகும்?( அந்த மாதிரி அலைபேசி வைத்து இருப்போர் காரணம் தெரிவிக்க வேண்டுகிறேன்)
  2. ஆடைகள் : ₹2000க்கு மேல் எதுக்கு செலவு பண்ணணும் . மனசாட்சி இல்லாமல் ₹4000க்கு டீ சர்ட் எடுக்கிறாங்க மை லார்ட். நான் ₹4000 க்கு எனக்கு தேவையான ஆடைகள் அனைத்தும் ,4–8 செட் எடுத்துக்குவேன். என்னதான் தரம் ,திடம் என்றாலும் இன்னைக்கு இருக்க fast fashion உலகில் எத்தனை பேர் அது கிழியும் வரை போடுறாங்க ? Loss of money
  3. திருமணம் : எங்க ஊரில் ஒரு பழமொழி'' ஒரு நாள் கூத்துக்கு தலையை செரச்ச மாதிரி'' என்று. தலையை செரச்சா கூட 3 மாதத்தில் முடி திரும்ப வளரும் . ஆனால் திருமணம் செய்ய சொத்தை அழிக்க வேண்டும் என்ற நிலை இன்று . அநியாயத்துக்கு மணமக்கள் ஆடை அலங்காரத்திற்கே இலட்சங்கள் இல் செலவு . அதிலும் சாப்பாட்டுக்கு ,எப்படியும் வந்து சாப்பிடுபவர்கள் "சோறு வேகல ,சாறு கொதிக்கல " என்று தான் பேசுவாங்க . மணமக்கள் , அவர்களின் குடும்பம் ( பெற்றோர், உடன்பிறந்த சகோதரர்கள்) தவிர வேறு யாருக்கும் அத்திருமணம் special memory கிடையாது . அதிகபட்சம் 4 நாள் பேசுபொருள் . அவ்வளவுதான்.
  4. திரைப்பட டிக்கெட்: படம் நல்லா இருந்தால் 2024 தீபாவளிக்கு இல்லையா 2024 நியூ இயர்/ பொங்கலுக்கு விஜய்/ சன் / Zeeதமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். அதுக்கு போய் ₹1500,2000 கொடுத்து என்ன ஆகப்போகுது. திரையரங்கில் தான் பார்ப்பேன் என்றாலும் ₹200/300 டிக்கெட் வாங்கி பார்த்தால் படம் நல்லா தெரியாதா ?
  5. அழகுசாதன பொருட்கள் : ஒரு நகப்பூச்சு பாட்டில் ₹300 க்கு விக்குது . அதையும் வாங்கி பயன்படுத்தறாங்க . இதுபோல் பல .இதே போல் முகப்பூச்சுகள்,உதட்டுச்சாயம் etc, விலை ஆயிரங்களில் . அந்த பணத்தில் உடலை நன்கு பேணி,சத்தான ஆகாரங்கள் எடுத்தால் தானாக தோற்றம் அழகாகும். அதைப் போட்டு மேலும் தோல் இருக்கிறதும் கெட்டு போகிறது தான் மிச்சம்.


No comments:

Post a Comment