Thursday, 11 June 2026

29000 POSTS

 இந்த பதிவு ஞானவயல் வலைப்பூவின் 29000மாவதாகும்.

மாலா உலக சமுதாய சேவா சங்கத்தின் திருச்சி மண்டல தலைவியாக 2011ம் ஆண்டு இறுதியில் பொறுப்பேற்றபோது ஸ்ரீராமால் ஆரம்பிக்கப்பட்டு 14 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

ஞானவயல் வலைப்பூவின் நோக்கம் மாலாவின் தினசரி சேவைகளை ஒரு டயரி போல பதிவு செய்வது.

ஆரம்பத்தில் பல பதிவுகள் மாலாவின் தினசரி செயல்பாடுகளை சொன்னாலும், நெருங்கிய உறவினர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப திசை மாறிப் போய்விட்டது.


நான் உலக சமுதாய சேவா சங்கத்தின் கல்விப்பிரிவில் கூடுதல் இயக்குனராக பணியாற்றி வந்தேன். மாலா மறைவிற்குப் பிறகு அவள் ஏற்ற மண்டலத் தலைவராக சென்ற மாதம் முதல் பொறுப்பேற்று மாலா விரும்பிய செயல்களை சிறப்பாக செய்ய வேண்டும் என செயல்பட்டு வருகின்றேன்.

ஞானவயல் பக்கங்களை படித்தவர்களின் முதல் மில்லியன் இலக்கினை எட்டுவதற்கு கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் 2 மாதங்கள் ஆனது. ஆனால் இரண்டாவது மில்லியன் page views அடைய நூறு நாட்களுக்கும் குறைவே ஆகியுள்ளது. கிட்டத்தட்ட 65 நாடுகளிலிருந்து ஞானவயலினைப் படிக்கின்றார்கள். அனைவருக்கும் நன்றி. மாலா மிகவும் விரும்பிய செயல்பாடு - அவளும், நானும் திட்டமிட்டு உருவாக்கவுள்ள சேவை மையம் பற்றி பிறகு தெரிவிக்கின்றேன்.


No comments:

Post a Comment