Thursday, 11 June 2026

இந்திய பெற்றோருக்கும் வெளிநாட்டு பெற்றோருக்கும் என்ன வித்தியாசம்

 



அம்மா, நான் வெளியே போய்ட்டு வரேன்.

வெளிநாட்டு பெற்றோர்: சரி, பத்திரமா போயிட்டு் வா.

இந்திய பெற்றோர்: ஆறு மணிக்கெல்லாம் வீட்டுல இருக்கணும். எங்கயாவது ஊர் சுத்திட்டு லேட்டா வந்த கதவை திறக்க மாட்டேன் பாத்துக்க.


உடம்பு திடீர்ன்னு சரியில்லாம போய்ட்டு ஏன்னு தெரியல.

வெளிநாட்டு பெற்றோர்: இந்த மருந்தை சாப்பிடு சரியாகிடும்.

இந்திய பெற்றோர்: எப்போ பாரு அந்த போனையே நோண்டிக்கிட்டிருந்தா இப்படி தான் ஆகும். காசாயம் குடிச்சா எல்லாம் சரியாகிடும்.


மோட்டிவேஷன் பண்ணுவது.

வெளிநாட்டு பெற்றோர்: உன்னால கண்டிப்பா முடியும்.

இந்திய பெற்றோர் :

பக்கத்து வீட்டு பையனை பாரு சென்டம் வாங்கியிருக்கான். நீயும் தான் இருக்கியே.


க்ரஸிடம் பேசும் போது.

வெளிநாட்டு பெற்றோர்: நீ பேசு நாங்க தொந்தரவு பண்ணலை.

இந்திய பெற்றோர்: உனக்கு பாடத்துல ஏதாவது சந்தேகம்னா அண்ணன்கிட்ட கூச்சப்படாம கேட்டு தெரிஞ்சிக்கமா(சோலி முடிஞ்சிது)


காதலை பற்றி சொல்லும் போது.

வெளிநாட்டு பெற்றோர்: உனக்கு பிடிச்சிருந்தா சரி.

இந்திய பெற்றோர்: ஐய்யோ! என்ற மானம் போச்சு, மரியாதை போச்சு.


நான் சொந்தமா தொழில் தொடங்க போறேன்.

வெளிநாட்டு பெற்றோர்: நாங்க உனக்கு சப்போர்ட் பண்றோம்.

இந்திய பெற்றோர்: அதெல்லாம் வேண்டாம். போயி ஏதாவது கம்பெனியில வேலைக்கு சேர்.


தண்டனை கொடுப்பது.

வெளிநாட்டு பெற்றோர்:

இந்த மாசம் உனக்கு பாக்கெட் மணி கிடையாது.

இந்திய பெற்றோர்: இன்னைக்கு தொடப்ப கட்டை பிஞ்சி போக போகுது.


மோட்டிவேஷன் சாங்.

வெளிநாடு: பிளிவர்.

இந்தியர்கள்: நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பாக்குது.


வெளிநாடு வெர்ஷன்: கேம் ஓவர்.

இந்தியா வெர்ஷன்: சோலி முடிஞ்சிது.


கோரோனா அலப்பறைகள்.

வெளிநாட்டு பெற்றோர்:

சானிடைச்சர், பேஸ் மாஸ்க் போட்டுக்கிட்டு வெளியே போகணும்.

இந்திய பெற்றோர்:

கபசுர குடி நீீர் குடிச்சிட்டு வெளியே போகணும்.




No comments:

Post a Comment