சார்! எனக்கு ஒரு ஃபேஸ் புக் கொடுங்க!
ஏம்பா அங்க என்னாப்பா கஸ்டமரோட கலாட்டா? அவரு என்னா கேக்கறரோ அத்த கொடுத்தனுப்ப வேண்டியதுதானே?
ஐயா.. அவரண்ட நீங்களே பேசிக்கங்க
வாங்க சார். சொல்லுங்க என்னா வேணும்?
ஒரு புக் வேணும்பா.
கரெக்டாதான் வந்துருக்கீங்க. புஸ்தகக் கடைதான் இது. என்னா புக் வேணும்?
அப்பிடி கேளுங்க.
ஒரு ஃபேஸ் புக் குடுங்க.
( கடைப் பையன்” க்கும் மாட்னீங்களா😆)
சார் ஃபேஸ் புக் உங்க ஃபோன்லயே இருக்குமே. நீங்க அங்கயே வாங்கிக்கலாம் சார்.
இல்லீங்க அத்த கேட்டா இன் ஸ்டால் இன் ஸ்டால்ன்னுது.
அதான் புக் ஸ்டாலுக்கு வந்தேன்
( கடைப் பையன்” அப்பிடி போடு அறுவாள”😝)
சார், இன்ஸ்டால்னா அதை உங்க ஃபோன்ல உள்ள போடற வழி. நீங்க அத அமுத்தினீங்கன்னா தானா ஃபேஸ் புக் வந்துரும்.
அப்பிடீங்களா. ஆனா அதுக்கு நம்ப ஃபோனுக்குள்ளாற வர்ர வழி எப்பிடி தெரியும். வேற எங்கனா போயிருச்சின்னா. அதான் நாம நேரா வாங்கிட்டு போறது பெட்டர் இல்ல!
( க. பை” இதுதாண்டா மூளை😂)
சார் உங்க ஃபோன் குடுங்க நானே போட்டுத்தர்ரேன்.
அதெல்லாம் வேண்டாம் சார்.புக்க குடுங்க நானே போட்டுக்கறேன்.
அப்பிடீங்கறீங்களா? சரி ஒண்ணு செய்யுங்க
நம்ம கடையில அந்த புக் ஸ்டாக் இல்ல. பக்கத்துக் கடையில கேளுங்க.
( க. பை. “ அட அடுத்த கடை ஆள பழி வாங்க சரியான வழிதான்😅)
No comments:
Post a Comment