Showing posts with label நிறைவு. Show all posts
Showing posts with label நிறைவு. Show all posts

Wednesday, 30 July 2014

நிறைவு ....5

திருப்தி இரண்டு வகையானது 

ஒன்று உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் உண்மையான திருப்தி; 

மற்றொன்று உதட்டளவில் இருந்து வரும் போலியான திருப்தி.

உணவு, உறக்கம், சுகம், புகழ், செல்வம், அந்தஸ்து, கௌரவம், சகல சுகபோகங்கள், பிள்ளைச் செல்வங்கள், அசையாத சொத்துக்கள் எனக்கு போதுமான அளவு கிடைத்து விட்டது; நான் திருப்தியாக இருக்கிறேன் என்று சொன்னால் அது போலியான திருப்தி.

 கடுமையான முயற்சிகளின் மூலம் செயற்கரிய செயலைச் சாதித்து காட்டிய பின்பு ஏற்படுகிற சந்தோஷமும், திருப்தியும் தான் உண்மையான திருப்தி ஆகும். இதில் தான் முழுமையான மகிழ்ச்சியும், ஆனந்தமும் அடங்கியுள்ளன.


 கடுமையான உழைப்பின் மூலம் ஒரு சாதனையைச் சாதித்துக் காட்டுவது தான் பெருமைக்கும் சிறப்புக்கும் உயர்வுக்கும் புகழுக்கும் காரணமாகிறது.

Thursday, 24 July 2014

நிறைவு ....3


 நிறை உணர்வு 


உருவெடுத்த காரணமும் காரியமும் முடிவும் 
உலகினிலே எழுபத்து ஐந்தாண்டு வாழ்ந்து 
திருவருளே அவ்வப்போ உணர்த்த உணர்ந்திட்டேன் 
செய்த வினைப் பதிவுகளைத் தூய்மை செய்துகொண்டேன் 
கருத்தொடராய்ப் பின் பிறவி இல்லை இனியில்லை 
கர்மவினை மிச்சமில்லை இச்சையில்லை எதிலும் 
அருள் நிறைந்த பெருஞ்சோதி அரவணைத்துக் கொள்ளும் 
அந்தப் பெரு நன்னாளை எதிர்பார்த்து உள்ளேன்.




---வேதாத்திரி மகரிஷி.

Friday, 18 July 2014

நிறைவு ....2

 மனநிறைவு 



பிறரிடம் குறைபாட்டையே எடுத்து அலசிப் பார்ப்பதை விடுத்து குறைவில்லாது நிறைவையே பார்க்கப் பயிற்சி கொடுத்துக் கொள்ள வேண்டும். 

எல்லாம் வல்ல இறைவன் அருளால் அமைந்தது எத்தனை எத்தனையோ ஆயிரம் ஆயிரம்... நலன்கள். இதையெல்லாம் எண்ணி எண்ணி மகிழலாமே ! ஏதேனும் ஒரு குறைபாட்டை நாமாக கற்பித்துக் கொண்டு அது இல்லையே என்று துன்பப்படுவதை விட்டுவிட வேண்டும். 

 இந்த முறையில் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நிமிடமும் இந்தக் குறைபாடு களைந்து நிறைவை ஏற்படுத்திக்கொண்டு மனநிறைவாக வாழ்வதற்கு இறை உணர்வும், உயிர் உணர்வும் வேண்டும், அந்த உயிர் உணர்வைப் பெறுவதற்கு, இறை உணர்வை பெறுவதற்கு தவம் இருக்கிறது. 

 அற உணர்வை பெறுவதற்கு நல்ல செயல்கள் செய்யச் செய்ய தானாகவே அது மலர்ந்துவிடும். அந்த முறையில் எப்பொழுதும் யாருக்கு என்ன நன்மை செய்யலாம் என்று அதைச் செய்யத் தயாராகும் முறையில் நீங்கள் வந்துவிட்டீர்களானால், அதுவே தான் எல்லாம் வல்ல இறைவனுக்குச் செய்ய வேண்டிய தொண்டு.

நேரடியாக நீங்கள் இறைவனுக்குச் செய்ய வேண்டும் என்றால் இறைவன் ஒவ்வொரு உள்ளத்திலும் இருந்து கொண்டு எங்கு தேவையோ அதை அங்க போய் உதவி செய்து முடிக்கிற அளவுக்கு உதவி செய்ய வேண்டும். 

 வாழ்க்கையில் மனநிறைவும் மகிழ்ச்சியும் பெறுவதற்கு இதற்கு ஈடான மார்க்கம் பிறிதொன்றும் இல்லை.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

Monday, 14 July 2014

நிறைவு....1


  1. போதுமான‌ வருமானம்
  2. நண்பர்கள், உறவினர்களின் ஒத்துழைப்பு
  3. மனித நேயம்
  4. பொழுதுபோக்கு
  5. ரசனை
  6. ஆரோக்கியம்
  7. மனப்பக்குவம்
  8. சேமிப்பு
  9. கூட்டு முயற்சி
  10. குழந்தைகள்