Showing posts with label HUSBAND. Show all posts
Showing posts with label HUSBAND. Show all posts

Sunday, 14 December 2025

கணவன் மனைவி அலப்பறைகள்

  

கணவன் : உன் பெயர் என்ன.?

மனைவி : என்ன, தெரியாத மாதிரி கேட்கறீங்க?

கணவன் : பரவால சொல்லு..

மனைவி : தங்கம்.....ஏன்?

கணவன் : இனி என்னால உன்ன என் கூட வச்சுக்க முடியாது...

மனைவி : ஏங்க திடீர்னு இப்படி சொல்றீங்க..?

கணவன் : கவர்மென்ட் அரை கிலோ தங்கம் வச்சுக்கத்தான் பர்மிஷன் கொடுத்து இருக்காங்க.... நீ 68 கிலோ இருக்கயே..

மனைவி : ஆமாங்க நானும் உங்கள என் கூட இனி வச்சுக்க முடியாது போல

கணவன் : என்னடி ஒடம்பு எப்புடி இருக்கு.....?

மனைவி : ஆமாங்க, உங்க பெயரு மணி! அதுவும் கருப்பா வேற இருக்கீங்க... கவர்மென்ட் தான் black money இருந்தா புடிச்சு குடுக்க சொல்லிருக்காங்களே, என்ன புடுச்சி குடுத்தரலாமா????

கணவன் : !!!

மனைவி : யார்கிட்ட...?

கேட்டாம்பாரு ஒரு கேள்வி

 ...

உருகி உருகி பிரார்த்திக்கும் முருகேசுக்கு, கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது.

முருகேசு: கடவுளே.. நான் உங்க கிட்டே ஒரு விளக்கம் கேட்கலாமா.?

கடவுள் : தாராளமாகக் கேள் மகனே..

முருகேசு : பொறுமையாக, கோபப்படாமல் பதில் சொல்வீர்களா..?

கடவுள் : கண்டிப்பாக..

முருகேசு : இன்றைய தினம், ஏன் எனக்கு இப்படி ஒரு மோசமான நாளைக் கொடுத்தீங்க..?

கடவுள் : என்னப்பா சொல்ற நீ..?

முருகேசு : எப்பவும் சரியா எழுந்திருக்கிற நான் இன்னைக்கு எழுந்திரிச்சதே லேட்...

கடவுள் : ஆமாம்.. அவசரத்துல என்னைக் கூட கும்பிடாம ஆபீஸ்க்கு புறப்பட்டுட்ட..

முருகேசு : கிளம்பினதே லேட்.. இதுல என் பைக் வேற பஞ்சர் ஆகியிருந்தது..

கடவுள் : ஆமாம்.. எனக்குத் தெரியும்.

முருகேசு : சரி, பஸ்ல போலாம்னு பஸ்ஸை பிடிச்சா வழியில ஏதோ ஆக்சிடெண்ட் போல.. ஒரே டிராஃபிக் ஜாம். ஆபீஸ்க்கு நான் ஒரு மணிநேரம் லேட்.

கடவுள் : ஆமாம்.. தெரியுமே..

முருகேசு : மதியம் சாப்பிட கொஞ்சம் லேட் ஆயிருச்சு. அதுக்குள்ளே கேண்டீன்ல சாப்பாடு காலியாயிருச்சு. கடைசில பசிக்கு ஏதோ கிடைச்சதை அரைகுறையா சாப்பிட்டுட்டு வந்தேன்.

கடவுள் : ஆமாம், அதுவும் தெரியும்.

வங்கியில் பர்சனல் லோன் அப்ளை பண்ணியிருந்தேன். அது விஷயமா ஒருத்தர்கிட்டே இருந்து நான் ஃபோனை எதிர்பார்த்திருந்தேன். சாயந்திரம் வீட்டுக்கு திரும்பும்போது அவர்கிட்டேயிருந்து எனக்கு கால் வந்தது. பேட்டரியில சார்ஜ் இல்லாம மொபைல் அந்த நேரம் பார்த்து ஆஃப் ஆயிடிச்சு.

கடவுள் : ஆமாம், தெரியும்.

முருகேசு : அதை பிடிச்சி.. இதை பிடிச்சி.. முட்டி மோதி வீட்டுக்கு வந்து, கொஞ்ச நேரம் ரூம்ல ஏ.சி.யில உட்கார்ந்து. டி.வி.யை பார்த்து ரிலாக்ஸ் பண்ணலாம்னா ஏ.சி. ரிப்பேர் போல. வேலையே செய்யல..

இன்று எனக்கு எதுவுமே சரியில்லையே..! ஒரு நாள் உங்களைக் கும்பிட மறந்ததுக்கு இவ்ளோ கஷ்டங்களா கடவுளே..?

(கடவுள் பலமாக சிரிக்கிறார். சில வினாடிகள் கழித்து பேச ஆரம்பிக்கிறார்)

கடவுள் : இன்னைக்கு உன் கர்மாவின்படி மிகவும் மோசமான நாள். நீ காலை அசந்து தூங்கிகிட்டிருக்கும் போதே மரணதேவன் உன்னை நோக்கி வந்துவிட்டான். அவன் கூட வாக்குவாதம் பண்ணி உன்னை காப்பாற்ற வேண்டி உன்னை கொஞ்சம் அதிக நேரம் தூங்க வெச்சேன்.

முருகேசு : (அதிர்ச்சியுடன்) ஓ....!

கடவுள் : உன் பைக்கை பஞ்சராக்கினேன். ஏன்னா, நீ ஆபீஸ் போகும்போது.. நீ போற ரூட்ல பிரேக் பிடிக்காம தாறுமாறா ஓடுற வேன் ஒன்னு உன் மேல இடிக்கிறதா இருந்தது. அந்த வேன் ஆக்சிடெண்ட்டாகி தான் டிராபிக் ஆச்சு. நீ பைக்ல போயிருந்தா அந்த வேன் மரணதேவன் கணக்குப்படி உன் மேல இடிச்சிருக்கும்..

முருகேசு : (அடக்கத்துடன்) ஓ..

கடவுள் : மதியம் உனக்கு சாப்பாடு கிடைக்காம போனதுக்கு காரணம், கடைசியா மிச்சமிருந்த குழம்புல எலிக்கு வெச்சிருந்த எலி பாஷாணம் எப்படியோ தவறி விழுந்துடிச்சு.. யாரும் அதைக் கவனிக்கல. அதை நீ சாப்பிட்டிருந்தா என்னாயிருக்கும்..?

முருகேசு : (கண்கலங்கியபடி) ம்ம்..

கடவுள் : சாயந்திரம் உன் அலைபேசி சுவிச் ஆப் ஆனதுக்குக் காரணம், அந்த நபர் உனக்கு தவறான வாக்குறுதிகள் கொடுத்து இக்கட்டில் மாட்டிவிட இருந்தார். எனவே அதிலிருந்து காப்பாற்ற வேண்டி, உன் ஃபோனை..

முருகேசு : ம்ம்...

கடவுள் : அப்புறம், அந்த ஏ.சி. மெஷின் எர்த் கோளாறு ஏற்பட்டு அதில் முறையற்ற முறையில் கரண்ட் வந்து கொண்டிருந்தது. ஒருவேளை முகம் கழுவிக்கொண்டு ஈர கைகளுடன் எப்போதும் போல நீ சுவிட்சை தொட்டிருந்தால், அந்தக் கணமே தூக்கி எறியப்பட்டிருப்பாய். ஆகையால் அதை செயலிழக்கச் செய்தேன். என்னை வணங்க மறந்ததால் அன்று முழுதும் நீ சோதனையை சந்தித்தாய் என்று என்னை தவறாக நினைத்துகொண்டாய். ஆனால் அனுதினமும் நீ என்னை வணங்கி வந்த காரணத்தால் நீ என்னை மறந்த அன்றும் கூட நான் உன்னை காக்க மறக்கவில்லை.

முருகேசு : இத்தனை ஆபத்துலேர்ந்து என்னை காப்பாத்துனீங்களே..!

ஆனா என் கல்யாணத்தன்னிக்கு எங்க போயிருந்தீங்க ??


கேட்டாம்பாரு_ஒரு_கேள்வி...

கடவுள் குடுத்தாரு பாரு ஒரு பதில்:

மவனே நீ சாமி கும்பிட ஆரம்பிச்சதே, கல்யாணத்துக்கப்பறம் தானே...


Saturday, 6 December 2025

கணவன் மனைவி சண்டையை நிறுத்துவது எப்படி

 


கணவன் மனைவி சண்டையை நிறுத்துவது எப்படி??

நாம் பேசும் விதத்தில் தான் எல்லாம் உள்ளது:

நிகழ்வு 1:

திடீரென கணவன் சொன்ன ஒரு வார்த்தையில் சண்டை நீண்டு கொண்டு போனது....

கணவன்:

உனக்கு வாய் இருக்கிறதாலே எப்படி வேணும்னாலும் பேசலாமா..???? ஏன் காசுல சாப்டுட்டு என்னையே குறை சொல்றியா,திமிரு புடிச்சவளே…

மனைவி:

நான் ஒன்னும் சும்மா உங்க காசுல சாப்பாடு சாப்பிட்டு சும்மா இல்ல,வீடு வேலை பாக்குறேன் ,சமைக்குறேன்,உங்க துணி, கடைக்கு போறதுன்னு எல்லாம் நான் தான். என்னவோ நீங்க மட்டும் தான் எல்லாம் பண்ற மாதிரியும் நான் என்னவோ சந்தோசமா பார்க்,சினிமான்னு போற போல பேசறீங்க, அப்பவே உங்களை எங்க அம்மா சொன்னாங்க ,அத்தை சொன்னாங்கன்னு நான் தான் கேட்கல, உங்களை கல்யாணம் பண்ணிட்டு நான் படுற பாடுஇருக்கே…

இப்படியே சண்டை நீயா நானானு போய்ட்டு இருக்கும்…முடிவு இல்லாம.

********************************************

நிகழ்வு 2:

திடீரென கணவன் சொன்ன ஒரு வார்த்தையில் சண்டையே நின்றுவிட்டது....

கணவன்:

நீ அழகா இருக்கிறதாலே எப்படி வேணும்னாலும், பேசலாமா..????

மனைவி ஒன்றும் பேசாமல்.... சமையலறைக்குள் சென்று சூடான தேநீரும்.!!!

சுவையான பக்கோடாவும்... கொடுத்தாள்.!!!

நீதி:

நாம் நோயுடன் போராடவேண்டும்.!!!

நோயாளியுடன் அல்ல..!!

Monday, 9 June 2025

HUSBAND - WIFE

கணவன் மனைவிக்கு இடையே எந்த மாதிரியான புரிதல் கட்டாயம் இருக்கவேண்டும்?

• எந்த குடும்பத்தில் மனைவி சொல்ல வருவதை முன்கூட்டியே அறிந்து வைத்திருக்கும் புரிதல் வாழ்க்கையை செம்மையாக்கும்.

• மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். எல்லோருக்கும் நல்ல மனைவி அமைய வாய்ப்புகள் குறைவு.

• ஆனால் நல்ல மனைவி அமைந்து விட்டால் அவருக்கு வாழ்க்கையில் வேறு எதுவுமே வேண்டாம்.

• வீட்டில் ஒருவேளை சாப்பிட்டாலும் சந்தோஷமாக சாப்பிட்டு தூங்கினால் போதும்.

• மிகப்பெரிய பணக்காரர்கள் இந்தக் கொடுப்பினை அவர்களுக்கு கிடைக்காது.

• இதை பணம் கொடுத்து வாங்க முடியாது ஆயிரம் தான் இருந்தாலும் மனைவி.. மனைவி தான்.

• உங்க தமணைவியார் 'என்ன சமைப்பது' என்று கேட்டாள். "உனக்கு எது சுலபமானதோ அதை செய்" என்று சொல்ல வேண்டும்!!

• அந்த தினங்களில் (3 முதல் 5 தினங்கள்) அவர்களை தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும்!!

• வாரம் ஒருமுறை சமையல் (ஞாயிறு) ஆண்கள் பொறுப்பு. காலை முதல் இரவு வரை. பாத்திரம் கழுவுதல் உட்பட.செய்ய வேண்டும்!!

• உடல் நிலை சரியில்லாமல் போனால் லீவ் போட்டு விட்டு அருகில் இருக்க வேண்டும்!!

• வீட்டில் நிதி மந்திரி மனைவி தான். இருக்க வேண்டும் அப்போது தான் சரியாக செலவுகளை குறைத்து சேமிப்பு அதிகாக இருக்கும்!!!

• வீட்டை அழகுபடுத்த அவளால் மட்டுமே முடியும். அதனால் அவளை "Housewife" என்று சொல்லாமல் "Home Maker" என்றே சொல்ல வேண்டும்!!

• தாம்பத்தியத்தில் #நிலவில் நீயும் நித்திரையில் நானும் என்று இருக்கக் கூடாது..

Wednesday, 23 April 2025

ஒவ்வொரு கணவரும் தெரிந்து கொள்ள வேண்டியது

 ஒவ்வொரு கணவரும்

தெரிந்து கொள்ள வேண்டியது!

ஒரு கணவனாக எப்போது தோல்வியடைகிறீர்கள்.

1.🤜 உங்கள் பெற்றோருக்கும் உடன்பிறந்தவர்களுக்கும் உங்கள் மனைவிக்கு எதிரான தகவல்களை வழங்கினால், நீங்கள் ஒரு கணவராகத் தோல்வியடைகிறீர்கள்.

2.🤜 உங்கள் பெற்றோரும் உடன்பிறந்தவர்களும் உங்கள் மனைவியை ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் துன்பப்படுத்துவதை பார்த்து அமைதியாக இருந்தால், நீங்கள் ஒரு கணவராகத் தோல்வியடைகிறீர்கள்.

3. 🤜சந்தேகம் கொண்டு உங்கள் மனைவியை துன்புறுத்தினால், நீங்கள் ஒரு கணவராகத் தோல்வியடைகிறீர்கள். சந்தேகம் உறவை கொல்லும் கொடிய பேய்.

4. உங்கள் மனைவியை எந்த சூழ்நிலையிலும் பாதுகாக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது என்று தெரியாவிட்டால், நீங்கள் ஒரு கணவராகத் தோல்வியடைகிறீர்கள்.

5. உங்கள் இருவரையும் ஒன்றிணைக்கும் ஒரே விஷயம் குழந்தைகள் மட்டுமே. அவர்களுக்காக தான் உன்னை பொறுத்துக்கொள்கிறேன் என்று அடிக்கடி சொன்னால், நீங்கள் ஒரு கணவராகத் தோல்வியடைகிறீர்கள்.

6. உங்கள் குழந்தைகளுக்கு அன்பைக் காட்ட ஒரு வழி அவர்களின் தாய் மீது அன்பைக் காட்டுவது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளத் தவறினால், நீங்கள் ஒரு கணவராகத் தோல்வியடைகிறீர்கள்.

7. உங்கள் மனைவிக்கு எதிரான பொய்களை நம்பி, உங்கள் மனைவியை நம்பாமல் வெளியாட்களை நம்பினால், ஒரு கணவனாக நீங்கள் ஒரு முழுமையான தோல்வியாளர். என் நண்பனே, உங்களை விழுங்கக்கூடிய நெருப்புடன் நீங்கள் விளையாடுகிறீர்கள். உஷார்.

8. நண்பனே, நீங்கள் உங்களை விரும்பிய பெண்ணை மன ரீதியிலாக விரக்தியடையச் செய்தால், உங்களுக்கு என்ன நடக்கும் என்பதை சாத்தான் கூட கணிக்க முடியாது.

9. வாழ்க்கையில் ஒரு நல்ல பெண்ணின் அமைதியை தவறாக எடை போடாதீர்கள். ஏனென்றால் நீங்கள் ஒரு நல்ல பெண்ணை கோபமடைய செய்தால் உங்கள் வாழ்க்கை துன்பத்தில் முடியும்.

10. உண்மை சொல்லட்டுமா, ஒரு பெண் உங்களை காயப்படுத்த துணிந்துவிட்டால், அது உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லையும் தாக்குவதை நீங்கள் உணர்வீர்கள். மரண வலி அது.

என்னுடன் வாக்குவாதம் செய்யாதீர்கள். பெண்கள் நல்லவர்களே, ஆனால் அவர்களுக்குள் ஒரு சைக்கோ பகுதி உள்ளது, அது செயல்படுத்தப்படும்போது, சாத்தான் கூட உங்களுக்காக பரிதாபப்படுவான்.

11. நண்பர்களே, திருமணம் ஒவ்வொரு ஆணுக்குமானது இல்லை. ஒரு பெண்ணை நேசிக்க, மதிக்க, பாதுகாக்க, மதிக்க, வழங்க மற்றும் துணையாக இருக்க முடியாவிட்டால், தயவுசெய்து தனிமையில் இருங்கள். திருமணத்திற்குள் வராதீர்கள்.

திருமணம் என்பது பொறுப்புள்ளவர்களுக்கானது, பொறுமையுள்ளவர்களுக்கானது. இது புரியாமல் பிடிவாதமாக இருந்து நரகத்தில் வாழும் பல ஆண்களை உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும்.

புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது.. வாழ்த்துக்கள்.

Thursday, 3 April 2025

10 வகையான கணவர்கள்

உங்கள் கணவர் இதில் எந்த வகை..

1: பேச்சிலர் கணவர்

மனைவியைக் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக காரியங்களைச் செய்பவர். மனைவியை விட தன் நண்பர்களுடன் அதிகம் பழகுவார். திருமண வாழ்க்கைக்கு முக்கித்துவம் தராதவர்.

2: அமிலக் கணவர்

எப்பொழுதும் அமிலம் போல் கொதித்துக்கொண்டே இருப்பவர். எப்போதும் கோபமாக இருப்பவர். வன்முறை மனநிலை, ஆதிக்க மனப்பான்மை உள்ளவர். ஆபத்தானவர்.

3: அடிமை கணவர்

ராஜாவைப் போல தான் நடத்தப்பட வேண்டும் என நினைப்பவர், ஆனால் மனைவியை அடிமையாக நடத்துகிறவர். பழைய பஞ்சாங்கத்தில் ஊறி போனவர்.

4: சராசரி கணவர்

பெரும்பாலான பெண்ணுக்கும் அமையும் கணவர் இவர். மனைவியை விட தோழிகளை அதிகம் நேசிப்பவர். அவர்கள் மேல் ஆர்வம் காட்டுபவர். பெண் தோழிகளுக்கு செலவு செய்வது பிடிக்கும் மேலும் பெண் நண்பர்களும் இவர்களுக்கு அதிகம்.

5: உலர் கணவர்

மிகவும் உலர்ந்த மனநிலை மற்றும் கஞ்சத்தனம் மிக்கவர். மனைவியின் உணர்ச்சிகளைக் கருத்தில் கொள்ளாதவர். உறவை சுவாரஸ்யமாக்குவதில்லை. ஊடல் இல்லை. நகைச்சுவை உணர்வு சுத்தமாக இல்லாதவர்.

6: சந்தர்ப்ப கணவர்

மனைவியை பிரச்சனை தீர்பவராகப் பயன்படுத்துகிறார், அவரிடமிருந்து ஏதாவது தேவைப்படும்போது மட்டுமே மனைவியை நேசிப்பார். புத்திசாலி மனைவியின் பலவீனங்களை அறிந்தவர். மனைவியிடமிருந்து வேண்டியதை பெற மனைவின் பலவீனங்களை பயன்படுத்துவார்.

7: ஒட்டுண்ணி கணவன்.

சோம்பேறி மற்றும் பணத்திற்காக மனைவியை மட்டுமே நேசிப்பவர். மனைவியின் பணத்தை காதலிகளுக்காக பயன்படுத்துபவர். எந்த ஆக்கபூர்வமான முன்முயற்சியும் இல்லை மற்றும் வீட்டுப் பொறுப்புகளில் கூட மனைவிக்கு உதவுவதில்லை.

8: குழந்தை கணவர்

பொறுப்பற்ற மற்றும் குழந்தைத்தனமானவர். அவரது தாய், உடன் பிறந்தவர்கள் அல்லது உறவினர்களை கேட்காமல் சொந்தமாக முடிவுகளை எடுக்க தெரியாது; மனைவியை உறவினர்களுடன் ஒப்பிட்டு, ஏதாவது தவறு நடந்தால் எப்போதும் உறவினர்களிடமோ, தாயிடமோ, உடன் பிறந்தவர்களிடமோ ஓடிவிடுவார்.

9: வருகை பதிவேடு கணவர்:

பெரும்பாலும் வீட்டில் இருப்பதில்லை, பார்வையாளர் போல வருவார், போவார். குடும்பத்திற்கு அனைத்து பொருள்களையும் வழங்குவார். ஆனால் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்காதவர்.

10: அக்கறையுள்ள கணவர்

அக்கறையும் அன்பும் கொண்டவர். உங்கள் உணர்ச்சிகளை சரியாக கையாள்பவர். குடும்பத்திற்கு நேரத்தை ஒதுக்குபவர். குடும்ப உறுப்பினர்களுக்கு சரியான வழிகாட்டியாக இருப்பவர். மிகவும் பொறுப்பான மற்றும் மனைவியை துணையாகவும், உதவியாளராகவும் கருதுபவர்.


Tuesday, 7 January 2025

கணவர்கள்

 10 வகையான கணவர்கள்: உங்கள் கணவர் இதில் எந்த வகை..



1: பேச்சிலர் கணவர்

மனைவியைக் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக காரியங்களைச் செய்பவர். மனைவியை விட தன் நண்பர்களுடன் அதிகம் பழகுவார். திருமண வாழ்க்கைக்கு முக்கித்துவம் தராதவர்.

2: அமிலக் கணவர்

எப்பொழுதும் அமிலம் போல் கொதித்துக்கொண்டே இருப்பவர். எப்போதும் கோபமாக இருப்பவர். வன்முறை மனநிலை, ஆதிக்க மனப்பான்மை உள்ளவர். ஆபத்தானவர்.

3: அடிமை கணவர்

ராஜாவைப் போல தான் நடத்தப்பட வேண்டும் என நினைப்பவர், ஆனால் மனைவியை அடிமையாக நடத்துகிறவர். பழைய பஞ்சாங்கத்தில் ஊறி போனவர்.

4: சராசரி கணவர்

பெரும்பாலான பெண்ணுக்கும் அமையும் கணவர் இவர். மனைவியை விட தோழிகளை அதிகம் நேசிப்பவர். அவர்கள் மேல் ஆர்வம் காட்டுபவர். பெண் தோழிகளுக்கு செலவு செய்வது பிடிக்கும் மேலும் பெண் நண்பர்களும் இவர்களுக்கு அதிகம்.

5: உலர் கணவர்

மிகவும் உலர்ந்த மனநிலை மற்றும் கஞ்சத்தனம் மிக்கவர். மனைவியின் உணர்ச்சிகளைக் கருத்தில் கொள்ளாதவர். உறவை சுவாரஸ்யமாக்குவதில்லை. ஊடல் இல்லை. நகைச்சுவை உணர்வு சுத்தமாக இல்லாதவர்.

6: சந்தர்ப்ப கணவர்

மனைவியை பிரச்சனை தீர்பவராகப் பயன்படுத்துகிறார், அவரிடமிருந்து ஏதாவது தேவைப்படும்போது மட்டுமே மனைவியை நேசிப்பார். புத்திசாலி மனைவியின் பலவீனங்களை அறிந்தவர். மனைவியிடமிருந்து வேண்டியதை பெற மனைவின் பலவீனங்களை பயன்படுத்துவார்.

7: ஒட்டுண்ணி கணவன்.

சோம்பேறி மற்றும் பணத்திற்காக மனைவியை மட்டுமே நேசிப்பவர். மனைவியின் பணத்தை காதலிகளுக்காக பயன்படுத்துபவர். எந்த ஆக்கபூர்வமான முன்முயற்சியும் இல்லை மற்றும் வீட்டுப் பொறுப்புகளில் கூட மனைவிக்கு உதவுவதில்லை.

8: குழந்தை கணவர்

பொறுப்பற்ற மற்றும் குழந்தைத்தனமானவர். அவரது தாய், உடன் பிறந்தவர்கள் அல்லது உறவினர்களை கேட்காமல் சொந்தமாக முடிவுகளை எடுக்க தெரியாது; மனைவியை உறவினர்களுடன் ஒப்பிட்டு, ஏதாவது தவறு நடந்தால் எப்போதும் உறவினர்களிடமோ, தாயிடமோ, உடன் பிறந்தவர்களிடமோ ஓடிவிடுவார்.



9: வருகை பதிவேடு கணவர்:

பெரும்பாலும் வீட்டில் இருப்பதில்லை, பார்வையாளர் போல வருவார், போவார். குடும்பத்திற்கு அனைத்து பொருள்களையும் வழங்குவார். ஆனால் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்காதவர்.

10: அக்கறையுள்ள கணவர்

அக்கறையும் அன்பும் கொண்டவர். உங்கள் உணர்ச்சிகளை சரியாக கையாள்பவர். குடும்பத்திற்கு நேரத்தை ஒதுக்குபவர். குடும்ப உறுப்பினர்களுக்கு சரியான வழிகாட்டியாக இருப்பவர். மிகவும் பொறுப்பான மற்றும் மனைவியை துணையாகவும், உதவியாளராகவும் கருதுபவர்.

இப்போது உங்களுக்குத் தெரியும்,

உங்கள் கணவர் எந்த வகை என்று ...