Tuesday, 29 July 2025
QUOTE OF THE DAY
Keep the mind cool, active and meditated. It'll stay in a peaceful mode and your outlook towards others should be more positive and restful, you'll stay strong in willpower, courage, confidence without any confusion to perform better always.
குடும்ப வாழ்க்கை - குறள்
மனைவி மக்களோடு குடும்பத்தை நடத்திச் செல்லும் ஒருவர் சமூகத்தில் உள்ள தன் சொந்தங்கள், நண்பர்கள்,ஏழைகள் என்ற மூன்று பிரிவினருக்கும் உதவியாக இருப்பார். இது மட்டும் அல்ல துறவிகள், அன்றாடம் பசியோடு இருப்பவர்களுக்கும் குடும்பத்தலைவரே துணை.
ஒரு குடும்பத்தலைவர் சுற்றம் குடும்பம் இவர்களைக்கவனித்த பின்தான் தன்னைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.பழி பாவங்களுக்குப் பயந்து , தன்னிடம் உள்ளதை அடுத்தவர்களுக்கும் பங்கிட்டு வாழ்வதுதான் இல்வாழ்க்கை.
ஒருவர் தான் துறவுபூணுவதால் கிடைக்கும் நன்மையை மனைவி மக்களோடு இல்வாழ்க்கை வாழ்ந்தே அடைந்து விடலாம். ஏனென்றால் குடும்பம் நடத்தும் ஒருவர் துறவு வாழ்க்கை மேற்கொள்பவரை விட பொறுப்பும், சகிப்புத் தன்மையும் உடையவராக இருப்பார்.
அதனால் மானுட தர்மம் என்று சொல்வதே இல்வாழ்வுதான். ஆனால் அதற்காக துறவிகளை அவமதிக்காமல் இருப்பது நல்லது என ஆலோசனை கூறும் வள்ளுவர்
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்”
என்கிறார். அதாவது, உலகத்தில் வாழவேண்டிய முறைப்படி குடும்ப வாழ்க்கை நடத்தும் ஒருவர் வானத்தில் இருக்கும் தெய்வத்துக்குச் சமம் என்பதே இதன் பொருளாகும்
குடும்பத்தின்நிதிநிலைமை
கடந்த 10 ஆண்டுகளில், ஒரு குடும்பத்தின்நிதிநிலைமை சீரழிவதற்கு பத்து முக்கிய காரணம்:-
1. குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் ஸ்மார்ட்போன் உள்ளது.
2. சமூக அழுத்தத்தின் கீழ் விடுமுறைகள்.
3. ஸ்டேட்டஸ் சிம்பலாக கார் வாங்குவது.
4. வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவைத் தவிர்ப்பது மற்றும் வார இறுதி நாட்களில் தேவையில்லாமல் வெளியே சாப்பிடுவது.
5. சலூன்கள், பார்லர்கள் மற்றும் ஆடைகளுக்கு பிராண்ட் கான்ஷியஸ். சீரழிந்த வாழ்க்கைமுறை மருத்துவச் செலவுகளை அதிகரிக்கிறது.
6. ஒன்றாக நேரத்தைச் செலவழிப்பதை விட அதிகப் பணத்தைச் செலவழிப்பதன் மூலம் பிறந்தநாள் மற்றும் ஆண்டுவிழாவை சிறப்பாக்க முயற்சித்தல்.
7. பிரமாண்ட திருமணங்கள் மற்றும் குடும்ப விழாக்கள்.
8. மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பயிற்சிகள்.. கல்வி... போன்றவற்றின் வணிகமயமாக்கல்.
9. நீங்கள் இதுவரை சம்பாதிக்காததை... கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம்...
10. வீடு மற்றும் அலுவலகத்தின் உட்புறங்களில் டன் கணக்கில் பணம் செலவழித்து அதன் மூலம் பராமரிப்புச் செலவு அதிகரிக்கிறது.
நமது தேவைகளையும் வருமானத்தையும் புரிந்து கொள்ளாமல் மற்றவர்களின் வாழ்க்கை முறையை நகலெடுக்கிறோம். இது குறைக்கப்படாவிட்டால், அது பல வருடங்கள் கடந்து செல்லும் (பழக்கங்கள் மாறாததால்) அதிக மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கும்.
பணி/குடும்ப வாழ்க்கை
பணியை நேசி, ஆனால் உனது அலுவலகத்தை அதிகம் நேசிக்காதே!
ஏனெனில் உனது அலுவலகம் உன்னை நேசிக்காது என்பது பணியாளர்களுக்கு தெரியாது!
அலுவலகத்தை விட்டு அலுவலக நேரம் முடிந்தவுடன் வெளியேறி விடவும்.
▪️வேலை ஒருபோதும் முடிவதில்லை: வேலை எப்போதும் முடியாது. அதனால், வேலை முடிந்தவுடன் வீட்டிற்கு சென்று குடும்பத்துடன் நேரம் செலவிடுவது முக்கியம்.
▪️குடும்பம் முக்கியம்: அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் முக்கியம் என்றாலும், குடும்பம் அதைவிட முக்கியம்.
▪️வாழ்க்கையின் முக்கியத்துவம்: வாழ்க்கையில் வீழ்ந்து தவிக்கும் போது, உங்களுடைய அதிகாரியோ, நீங்கள் உதவி செய்யும் பொதுமக்களோ உங்களை கைகொடுத்து உதவ மாட்டார்கள். ஆனால் உனது குடும்பம் மற்றும் நண்பர்கள் உளக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
▪️வாழ்க்கை என்பது வேலை மட்டுமல்ல: வாழ்க்கை என்பது உனது பணியோ, அலுவலகமோ, பொதுமக்களோ கிடையாது. வாழ்க்கை என்பது அதற்கு மேல் உங்களுக்கு மற்ற நேரங்களில் சமூக பழக்க வழக்கங்களும், கேளிக்கைகளும், புத்துணர்வு பெறுதலும், உடற்பயிற்சியும் கண்டிப்பான தேவை.
▪️வேலை நேரத்தை மதிக்கவும்: ஒருவர் அலுவலகத்தில் நீண்ட நேரம் பணியாற்றி எல்லோரையும்விட தாமதமாக செல்லும் கடின உழைப்பாளி என்றால், அவர் முட்டாளாக இருக்கக் கூடும். காரணம், அவர் வேலையை சிறப்பாக கையாளும் தன்மை அற்றவர் எனக் கருதப்படுவார். உரிய காலக்கெடுவிற்குள் பணியை முடிக்கத் தெரியாதவர்.
▪️இயந்திரத்தை போல் வாழாதீர்கள்: இயந்திரத்தைப் போல் கடின உழைப்பு செய்யாமல், வாழ்க்கையை சுகமாகவும், சமநிலையுடனும் வாழுங்கள்.
▪️அதிகாரியின் பொறுப்பு: உன் அதிகாரி நீண்ட நேரம் வேலை கொடுத்து தாமதமாக வீட்டிற்கு அனுப்பினால், அவர் வேலை வாங்கத் தெரியாதவர். மேலும், உங்களது வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கிவிடுவார். இதை அந்த அதிகாரிக்கு உணரச் செய்யுங்கள்.
உரிய நேரத்தில் அலுவலகத்தை விட்டு செல்பவர்:
▪️திறமைசாலி
▪️நல்ல சமூக வாழ்க்கையில் உள்ளவர்
▪️நல்ல குடும்ப வாழ்க்கை நடத்துபவர்
தாமதமாக அலுவலகத்தை விட்டு செல்பவர்:
▪️திறமையற்றவர், தகுதியற்றவர்
▪️சமூக வாழ்க்கையற்றவர்
▪️குறைந்த குடும்ப வாழ்க்கை அனுபவிப்பவர
ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள்
பிள்ளைகள் அனைவரையும் திருமணம் முடித்துக் கொடுத்த பணியிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் கீழ்கண்ட பத்து கட்டளைகளை பின்பற்றினால் வாழ்வின் கடைசி பக்கங்கள் மிகவும் சுவாரசியமாகவும் இனிமையாகவும் இருக்கும்
1- எந்த நிலையிலும் உங்கள் வாழ்வின் கடைசி பகுதியில் உங்க பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ நினைக்காதீர்கள். (உங்கள் சுதந்திரம் அனைத்தும் பறிபோகும்)
2- உங்க பேரக்குழந்தைகளின் மேல் உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை மறக்கவேண்டாம். குழந்தை வளர்ப்பில் மகனுக்கோ மகளுக்கோ எவ்வித அறிவுரையும் சொல்லாதீர்கள்.
உங்கள் அறிவுரை மற்றும் அனுபவங்களை அவர்கள் மதிக்க மாட்டார்கள். (மதிக்கத்தெரியாது)
3- விலகியே இருங்கள் உறவுகள் இனிமையா இருக்கும். என் பிள்ளை என்பிள்ளை என பதறாதீர்கள். சிறகு முளைத்த பறவைகள் அவர்கள் என்பதை நினைத்து அமைதியா இருங்கள்.
4- *பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை . கையில் பணம் இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும், உரிமையும் உங்களுக்கு நிச்சயம் இருக்காது. சேமிப்பு மற்றும் உங்கள் சுய சம்பாத்ய சொத்துக்களை உயிருடன் இருக்கும் வரை யாருக்கும் பகிரவேண்டாம். முழுவதும் பகிர்ந்தால் நீங்கள் நிற்க வேண்டியது நடுத்தெருவில்தான்.*
5 - காலம் முழுதும் அவர்கள் உயர்வுக்காக பாடுபட்டு பல இழப்புகளை சந்தித்து இருப்பீர்கள் அவற்றை சொல்லி காட்டவேண்டாம் உங்கள் கடமையை செய்தீர்கள் அவ்வளவே.
6 -கூட்டு குடும்ப வாழ்வு சிதைந்துபோன தலைமுறையில் வாழ்கிறோம் என்பதை மறவாதீர்கள் தேவைபட்டால் வருடம் ஒருமுறை சென்று பேரன் பேத்திகளுடன் சந்தோஷமா இருந்து வாருங்க .அங்கே அதிகம் தங்க வேண்டாம்.
7- எந்த நேரத்திலும் உங்கள் மருமகள் முன் உங்கள் மனைவியை - கணவனை விட்டுக்கொடுத்து பேசாதீர்கள் உங்கள் இருவரில் ஒருவரை யார் குறைத்து பேசினாலும் எதிர்குரல் கொடுங்க. பிள்ளைகள் வீட்டிற்கு சென்றால், கூடவே உங்களுக்குத் தேவையான மருந்து மாத்திரை, எண்ணெய், பவுடர், சீப்பு, சோப், போன்றவற்றை எடுத்து செல்லுங்கள்.
8- அவர்களின் ஆடம்பர வாழ்வை விமர்சிக்கவேண்டாம். சேமிப்பின் அவசியம் பற்றி சொல்லி அவமானபடவேண்டாம்.
அவர்கள் வாழ்வது உங்க வாழ்க்கை போல் போராட்ட வாழ்க்கை இல்லை நவீன கார்போரேட் வாழ்க்கை நீங்கள் 1000 ரூ பெரிதாக நினைத்தவர்கள் அவர்கள் லட்சங்களை புரட்டி பார்ப்பவர்கள் எனவே சூரியனுக்கு டார்ச் அடிக்காதீர்கள்.
9- அதிக பாசம் ஆசை வைத்தால் அது மோசம். அவர்கள் குழந்தையை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள் உங்க அறிவுரைகளை தவிருங்கள்.
10-உங்களை விட அறிவிலும் திறமை யிலும் அவர்கள் சிறந்தவர்கள் என்பதை ஏற்று கொள்ளுங்கள். அல்லது நீங்கள் முட்டாள்களாகவே நடியுங்கள். அப்பொழுதுதான் பிழைப்பீர்கள்.
*அதிக அறிவுரைகள் இக்கால சந்ததியினருக்கு அறவே பிடிக்காது*. நீங்கள நன்கு படித்திருந்தாலும் நல்ல பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் அவர்கள் முன் தற்குரிகளே. தலையாட்டும் பொம்மைகளே.
பகிர்வு!
படித்ததில் பிடித்தது.
வாழ்க்கை எத்தனை அழகானது
வாழ்க்கை எத்தனை அழகானது என்பதைக் குடும்பம் தான் நமக்குக் காட்டுகிறது இல்லறம் எத்தனை இன்பமானது என்பதைத் தாம்பத்தியம் நமக்கு உணர்த்துகிறது.
முதலில் வாழ்வை ரசிக்கின்ற பண்பு வேண்டும் ஏனெனில் ரசனை தான் நம் வாழ்விற்குச் சுவையூட்டுகிறது.
குடும்பத்தின் மகிழ்ச்சி நம் கையில் தான் இருக்கிறது இந்த உண்மையைச் சிலர் உணர்வதே இல்லை அற்ப விஷயங்களுக்கெல்லாம் சண்டை போட்டு வீட்டையே சிலர் போர்க்களமாக்கி விடுவார்கள்.
அப்படியே நாளும், பொழுதும் போராடிக் கொண்டிருப்பதில் என்ன மகிழ்ச்சி.
தேவையற்ற வாக்குவாதங்களும், விட்டுக் கொடுக்காத பிடிவாதங்களும் வீட்டை நரகமாக்கி விடும் அன்பான வார்த்தைகளே இல்லத்தை சொர்க்கமாக்கும்.
கனிவாகப் பேசும் கணவன் மனைவி இடையே சண்டைகள் வருவதில்லை அவர்களின் வார்த்தைகள் ஒருபோதும் காயப்படுத்துவதில்லை.
ஒருவரை ஒருவர் மதிக்கின்ற குடும்பத்தில் தான் சமத்துவம் இருக்கும், சந்தோஷம் பெருகும் அப்படிப்பட்ட குடும்பங்களில் பிறக்கின்ற பிள்ளைகள் நல்ல பண்புகளுடன் வளர்வார்கள்.
கணவனாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி இனிமையான வார்த்தைகளையே பேசுங்கள்.
வெளியிடங்களில் மற்றும் அலுவலகத்தில் எல்லாரிடமும் சிரித்துச் சிரித்துப் பேசி விட்டு வீட்டிற்குள் நுழையும் போது முகத்தில் இறுக்கத்தையும் பேச்சில் கடுகடுப்பையும் காட்டாதீர்கள் அது உங்கள் வாழ்விற்கு நீங்களே செய்கின்ற துரோகம்.
குடும்பம் என்றால் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரத்தான் செய்யும் அப்போது பதற்றம் அடைய வேண்டாம் இருவரும் அமர்ந்து நிதானமாகப் பேசுங்கள் பிரச்சினைகள் காணாமல் போய்விடும்.
அதை விட்டு விட்டு மூன்றாம் நபரிடம் உங்கள் வீட்டுப் பிரச்சினைகளைப் பேசாதீர்கள் உங்களைச் சுற்றி இருப்பவர்கள் தங்கள் காதுகளைத் தீட்டிக் கொண்டு ஆவலாய்க் கேட்பார்கள் உங்கள் குடும்பத்தை இரண்டு துண்டாக்க என்னென்ன யோசனைகள் தர முடியுமோ அதையெல்லாம் தருவார்கள் அப்படி தான் பல குடும்பங்கள் சிக்கிச் சின்னாபின்னமாகி சிதைந்து போகின்றன.
ஜாக்கிரதையாக இருங்கள் உங்கள் குடும்பத்தை அதிகதிகமாக நேசியுங்கள் அது தான் மிகப் பெரிய பலம்.
குடும்பத்தை நேசிக்கின்றவர்களால் தான் உலகத்தை நேசிக்க முடியும் உலகத்தை நேசிப்பவர்களால் தான் நல்ல உறவுகளை உருவாக்க முடியும்.
'குடும்ப நண்பர்கள்' என்று கண்டவர்களையும் சேர்த்துக் கொள்ளாதீர்கள் முன், பின் அறியாதவர்களை வீட்டிற்கு வரவழைக்காதீர்கள் பேசுவதை மட்டுமே வைத்து யாரையும் நல்லவர்கள் என்று நம்பிவிடாதீர்கள் அப்படிப்பட்டவர்களால் கணவன்,மனைவி உறவில் விரிசல் ஏற்பட்டு பல குடும்பங்கள் தரைமட்டமாகிப் போயிருக்கின்றன.
உங்கள் குடும்பத்தின் நிம்மதிக்குக் கேடு விளைவிக்கக்கூடிய எந்த விஷயத்தையும் அனுமதிக்காதீர்கள்.
குடும்ப வாழ்வைக் கொண்டாடுங்கள் தாம்பத்திய சுகத்தை இணைந்து அனுபவியுங்கள் ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவராய் இருங்கள் உங்கள் இல்லறம் செழிக்கும் வாழ்வில் இன்பங்கள் தழைக்கும்......













