Tuesday 22 November 2022

தமிழர் பெருமை

தமிழ் பேசும் மக்கள் உலகில் சுமார் 100 மில்லியன்.

சுமேரியன், அராபிக், மாயன், மீசோ, பெர்சியன், துருக்கி இம்மொழிகள் உருவாக்கத்தில் தமிழும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.
சுமேரியன் மொழி குறியீடுகள் (Script) தமிழ் சுமேரியன் இரண்டிற்குமுள்ள உறவை வெளிப்படுத்துகிறது.
தமிழ் உலகின் 7 புராண மொழிகளுள் ஒன்று (செம்மொழி).
தமிழ் திராவிட மொழிகளுக்கெல்லாம் மூலம்.
வெளிநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட திராவிட மொழி தமிழ் (இலங்கை, சிங்கப்பூர் )
பண்டைய தமிழ் இனத்தில் சாதிகள் இல்லை.
தொல்காப்பியம் 3000 வருட பழமையான நூல்.
உலக மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டது திருக்குறள்.
ஜென், புத்த மதங்களை பல்லவ பேரரசு உருவாக்கியது.
ஆசிய சண்டை கலையின் தந்தை எனப்படுவது “கலரி”
தமிழ் – பிராமி எழுத்து வரிவடிவங்கள் எகிப்தில் கண்டறியப்பட்டுள்ளன.
வேட்டி, சேலை பாரம்பரிய உடைபற்றி சிலப்பதிகாரம் பேசுகிறது.
தமிழரின் பழமையான நாட்டியகலை பரத நாட்டியம்.
இன்றும் நல்ல நிலையில் இயங்கி வரும் கரிகாற்சோழன் கட்டிய கல்லணை தமிழனின் தொழிற்நுட்பத்திற்கு சான்று.
ஜல்லிக்கட்டு 2000 வருடத்திற்கு முன்பு இருந்து வரும் தமிழரின் வீர விளையாட்டு.
தமிழ் அளவைகளுள் ஒன்றுமையான கணக்கீடு உண்டு.
தஞ்சாவூர் கோயில் துல்லியமான அளவீடுகளுக்கு கட்டடக்கலைக்கும் ஒரு சான்று.
சித்த மருத்துவம் தமிழரின் பழமையான மருத்துவம்.
நியூசிலாந்தில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மணி உள்ளது. (1200AD)
பண்டைய தமிழரிடம் வலிமையான கடற்படை இருந்திருக்கிறது,
நீண்ட கடற்பயணமும், வெளிநாட்டு வாணிபமும் பழந்தமிழர் மேற்கொண்டிருந்தனர்.
வணிகம், மருத்துவம், விவசாயம், போர்பயிற்சி இவைகளில் வேரோடியது தமிழ் கலாச்சாரம்.

No comments:

Post a Comment