காந்தார நாட்டு மன்னன் சுபலன் இவரின் கடைசி மகன் சகுனி.துரியோதனனின் தாய் காந்தாரியின் தம்பி ஆவார் சகுனி.காந்தாரியின் முதல் கணவருக்கு நீண்ட ஆயுள் இல்லை என்பதால் காந்தாரியை ஒரு ஆட்டுக்கடாவுக்கு மணம் செய்வித்தும்,பிறகு அந்த ஆட்டை பலியிட்டதால், நுணுக்கமாய் அன்றைய சோதிடப்படி பார்த்தால் காந்தாரி ஒரு விதவை..
பீஷ்மரின் உத்தரவில் ஆட்டுக்கிடாய் விவாகாரம் மறைக்கப்பட்டு திருதராஷ்டிரரை மணம் முடிக்கிறார் காந்தாரி ..பிறகு விவரம் அறிந்த பிதாமகர் என்னை சுவலன் ஏமாற்றிவிட்டான்,ஒரு விதவையையா? என் வீட்டுக்கு மருமகளாக கொண்டு வந்தேன்.உலகுக்கு தெரிந்தால் நகைப்புக்கு இடமாகுமே,சுவலன் குடும்பத்தை அழித்து அந்த ரகசியத்தை வெளிவராமல் செய்துவிடுகிறேன்" என்று சுவலனையும அவன் மகன்களையும் பிடித்து சிறையில் அடைத்தார் பிதாமகர் பீஷ்மர்..
ஒருகுடும்பத்தையே கொள்வது அதர்மம் என்பதை அறிந்த பீஷ்மர் தினமும் ஒரு கைபிடி அரிசி மட்டும் உண்ணக்கொடுத்தார்."நாட்கள் செல்லச் செல்ல,நிலைமை மோசமாகியது,சகோதரர்களுக்குள் உணவுக்காக சண்டை வந்தது,சுவலன் ஒரு யோசனை சொன்னான் "நம்மில் யாராவது புத்திசாலியானவன் ஒருவன் மட்டும் உணவை உண்டு பிழைத்து இந்த அநியாயத்தைச் செய்த பீஷ்மரை பழிவாங்கட்டும்" இந்த யோசனைக்கு அனைவரும் உடன்பட்டனர்...
வயதில் இளையவனான சகுனிதான் உணவை சாப்பிட தேர்ந்தெடுக்கப்பட்டான். குடும்பத்தில் சகுனியின் முன் பட்டினி கிடந்து ஒவ்வொருவராக மடிந்தனர். இறக்கும் முன் சுவலன் சகுனியின் கால்களில் ஒரு காலின் கணுக்காலை அடித்து உடைத்தான், "இனி நீ நடக்கும் போதெல்லாம் நொண்டுவாய், ஒவ்வோரு முறை நொண்டும் போதும் கௌரவர் செய்த அநீதியை நினைவில் கொள், அவர்களை மன்னிக்காதே" என்றார்.
சகுனிக்கு தாயத்தின் மீது ஒரு சபலம் உண்டு என்று சுவலனுக்கு தெரியும், சாகும் தறுவாயில் தன் மகனிடம் "நான் இறந்த பிறகு என் கை விரல் எலும்புகளை எடுத்து தாயக்கட்டையை உண்டாக்கு, அதில் என் ஆத்திரம் முழுவதும் நிறைந்து இருக்கும் நீ எப்படி தாயக்கட்டையை போட்டாலும் நீ விரும்பிய படியே எண்ணிக்கை விழும் நீயே எப்போதும் வெற்றி பெறுவாய்" என்றார்.
சிறிது காலத்தில் சுவலனும், அவனது பிள்ளைகளும் இறந்து போயினர். சகுனி மட்டும் தப்பிப் பிழைத்து கௌரவர்களுடன் பீஷ்மரின் கவனிப்பில், பாதுகாப்பில் வாழ்ந்தான். கௌரவர்களின் நண்பனாகக் காட்டிக்கொண்டான், ஆனால் பீஷ்மர் தன் குடும்பத்தை அழித்தது போல பீஷ்மரின் குடும்ப வீழ்ச்சிக்காக திட்டமிட்டு நிறைவேற்றினான்..
இறுதியில் சகதேவனால் குருச்சேத்திரப் போரில் கொல்லப்பட்டார். சகுனியின் மகன் உல்லூகன் அபிமன்யுவால் கொல்லப்பட்டான்...
No comments:
Post a Comment