Friday 25 November 2022

விண்கல் மழை - வெறும் கண்களால் கண்டு ரசிக்க முடியும்!

இந்த ஆண்டின் பிரகாசமான விண்கல் மழையானது தற்போது வானத்தில் பொழிந்துகொண்டிருக்கிறது. இந்த அபூர்வ விண்கல் மழையை தமிழ்நாட்டிலிருந்தும் நம்மால் வெறும் கண்களால் கண்டு ரசிக்க முடியும். இதனை 'ஜெமினிட் விண்கல் மழை' என்று விஞ்ஞானிகள் அழைப்பார்கள்.


பொதுவாக ஆண்டு தோறும் பூமி மீது விண்கற்கள் சிறிய அளவில் விழுவதால் நம்மால் வானத்தில் இதனை பார்க்க முடியும். ஆனால் இது எப்போதாவது ஒருமுறைதான் நிகழும்.

ஆனால் இந்த 'ஜெமினிட் விண்கல் மழை' ஒரு மாதம் முழுவதும் நீடிக்கும் என்பதுதான் இது தனிச்சிறப்பு. மேலும் மற்ற விண்கற்கள் விழுவது வெள்ளையாக தெரியும். இந்த விண்கற்கள் சிவப்பு, பச்சை நிறத்திலும் தெரியும்.

ஜெமினிட் விண்கல் மழை 

இந்த பூமியே விண்கற்கள் மோதலால்தான் உருவானது. அப்படி இருக்கையில் மேலே சொன்னது போல தினந்தோறும் பூமியின் மீது விண்கற்கள் தொடர்ந்து விழுந்துகொண்டே இருக்கின்றன. சரி இந்த விண்கற்கள் எங்கிருந்து வருகிறது தெரியுமா? பொதுவாக இப்படியான விண்கற்கள் வால்நட்சத்திரங்களிலிருந்துதான் பூமிக்கு வருகிறது. அதாவது, வால் நட்சத்திரங்கள் சென்ற பாதையில் அது விட்டுச் சென்ற தூசி துகள்கள் இருக்கும். விண்வெளியில் காற்று இல்லாததால் இந்த துகள்கள் எங்கேயும் போகாது. இந்நிலையில் பூமி இந்த துகள்கள் இருக்கும் பாதை அருகே போகும்போது அந்த துகள்கள் புவியீர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு விண்கல் மழையாக பூமியில் விழும்.

எங்கிருந்து பார்க்கலாம் 

இது டிசம்பர் 13-14 இரவில் அதிக அளவில் பொழியும். ஒரு மணி நேரத்திற்கு சுமார் 150 விண்கற்கள் பூமியை நோக்கி வரும். இது பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக இருக்கும். இதனை தமிழ்நாட்டில் எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கலாம். ஆனால் ஒளி மாசு குறைவாக உள்ள இடத்தில் இருந்து பார்த்தால் இதன் அழகை முழுமையாக ரசிக்கலாம். சென்னைக்கு அருகில் எனில் ஏலகிரியில் ஒளி மாசு குறைவு. அதேபோல வாணியம்பாடி ஆலங்காயம் அருகே உள்ள காவலூரில் வைணு பாப்பு விண்வெளி ஆய்வகம் இருக்கிறது. இங்கும் ஒளி மாசு குறைவுதான். இந்த இடங்களிலிருந்து பார்த்தால் விண்கல் மழையை முழுமையாக ரசிக்க முடியும்" என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.







No comments:

Post a Comment