Monday 28 November 2022

மாறாதது உண்மை மாத்திரமே

விழிப்பு,கனவு,உறக்கம் என்ற மூன்று நிலைகளும் சகல ஜீவராசிகளுக்கும் பொதுவானது!விழிப்பில் மற்ற இரண்டு நிலைகளும் நிஜமில்லை! கனவில் உறக்கமும்,விழிப்பும் இல்லை.உறக்கத்தில் விழிப்பும் கனவும் இல்லை! அந்தந்த நிலையில் அவை மாத்திரமே உண்மை என்பது நம் அனைவருக்கும் உள்ள பொது அனுபவம். இவை மூன்றில் எது உண்மையான நிலை?

ஒரு முறை ஜனக மகாராஜா கனவில் தன்னை ஒரு பிச்சைகாரனாக கண்டார்.... மூன்று நாள் தொடர்ந்த பட்டினியால் மிகவும் பசியாகவும் சோர்வாகவும் காணப்பட்டார்.ஒரு பெண் அவருக்கு சிறிது அன்னத்தை அளித்தாள். அதை எடுத்துக்கொண்டு நடந்தவர் தளர்ச்சியால் தட்டை கிழே தவறவிட்டார்.உடன் அருகிலிருந்த நாய் ஒரு அந்த அன்னத்தை உண்ண தொடங்கியது. பசியின் கடுமையாலும் ஆற்றாமையின் உச்சத்தில் கூக்குரலிட்டு அழ தொடங்கிவிட்டார்.திடீரென கனவு கலைந்து எழுந்து விட்டார்.

தனது விழிப்பு நிலையில் தன்னை ஒரு மகாராஜாவாக கண்டார்.இருப்பினும் கனவில் ஏற்பட்ட அனுபவத்தை அவரால் எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.தன்னை ஒரு முழு பிச்சைகாரனாகவும் தனக்கு ஏற்பட்ட பசியில் கொடுமையும் உண்மையாகவே இருந்த உணர்வே!தற்சமயம் ராஜாவாக இருப்பது உண்மையே!இதில் தனது உண்மைநிலை என்ன? என்பதை கண்டறிய தனது குருவை நாடினார்.

அதற்கு அந்த ஞானி," ஜனகனே! விழிப்பு,கனவு,உறக்கம் மூன்றும் மாறும் தன்மையுடையவையே! இம்மூன்றில் அனுபவிப்பவன் ஒருபோதும் மாறுவதில்லை! காலம்,அனுபவம் போன்றவை எப்போதும் மாற்றத்திற்கு உரியவையே! மாறாதது அனுவவிப்பன் மாத்திரமே! மாறாதது உண்மை மாத்திரமே! என்று உணர்! என்றார்.

No comments:

Post a Comment