Friday 4 November 2022

பலே பாட்டி ! ஏமாந்த எமன் !

தள்ளாத வயதுடைய பாட்டி ஒருத்தி காட்டின் வழியாக விறகுக்கட்டை சுமந்தபடி காலாற நடந்து வந்து கொண்டிருந்தாள் .

உச்சி வெயிலின் தாக்கத்தால் நாக்கு வறண்டது,கரடு முரடான பாதையில்  கால்கள் தளர்ந்தன .மேற்கொண்டு ஒரு அடி கூட நகர முடியாததால் விறகுக்கட்டை கீழே போட்டுவிட்டு அங்கேயே உட்கார்ந்து விட்டாள்.


வெறுப்படைந்த பாட்டி புலம்ப ஆரம்பித்தாள்.”கடவுளே ஏம்பா என்னிய இப்படி சோதிக்கிற ,அய்யா எமதர்ம ராசா இந்த கட்டைய இப்பவே எடுத்துட்டு போயிட்டியன்னா நல்லா இருப்பே” .
உடனே எமன் பாட்டி முன் தோன்றினான் .பாட்டியின் கழுத்தில் பாசக்கயிறை வீசினான் .

”பாட்டி கெளம்பு” .


பாட்டி “அய்யா நீதான் எம தர்ம ராசாவா”


“நானேதான் “எமன்


“சரி இப்போ எதுக்கு இந்த கயிற என்கழுத்துல வீசுன ”

குழப்பமடைந்த எமன் “என்ன பாட்டி சொல்ற நீதானே உன்னோட உயிரை எடுக்க சொல்லி என்னிய கூப்பிட்ட ”

நான் உயிரை எடுக்க சொன்னேனா ? இந்த விறகு கட்டைவீடு வரைக்கும் எடுத்து வர சொல்லித்தான் உன்னை கூப்பிட்டேன் “குண்டை தூக்கி போட்டாள் பாட்டி

“என்ன பாட்டி குழப்புகிறாய்”“நான் குழப்பல ராசா நீதான் குழம்பிட்டே ..நீ உண்மையிலே தர்ம ராசாவா இருந்தா இந்த விறகு கட்டை  என்னோட வீட்டுல கொண்டு சேர்த்திடு ”

வேறு வழி இல்லாத எமன் விறகுக்கட்டுடன் பாட்டி வீட்டை நோக்கி நடந்தான்

No comments:

Post a Comment