Saturday, 31 December 2022

குண்டலகேசி

  


குண்டலகேசி

  • ஆசிரியர் நாதகுத்தனார்
  • காலம் 7 ஆம் நூற்றாண்டு
  • பௌத்த காப்பியம்
  • சுருண்ட தலைமுடியை உடையவள் என்று பொருள்
  • குண்டலகேசி விருத்தம் அகல கவி என்ற வேறு பெயர்களும் உண்டு.
  • நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை
  • கிடைத்தவை 224 பாடல்கள்
  • குண்டல கேசியின் வரலாற்றை நீலகேசி கூறுகிறது
  • குண்டல கேசியின் இயற்பெயர் பத்திரை
  • இராசகிருக நாட்டு மந்திரியின் மகள்
  • குண்டலகேசியின் கணவன் காளன் இவன் ஒரு கள்வன்
  • குண்டலகேசி சாரிபுத்தரிடம் தோற்றுப் புத்தமதம் தழுவினாள்
  • கலைஞரால் ‘மந்திரி குமாரி’ என்று திரைப்படமாக்கப்பட்டது.

APANA VAYU MUDRA

Apana Vayu Mudra can save a person a 'Heart attack. Hence this mudra is called the sanjeevani mudra, one that gives life to a dying person. This mudra gives instant results and the pain is reduced immediately.


 


SELF LOVE








 

Friday, 30 December 2022

CHOLA DYNASTY


ஆர்க்கியோமெட்டலர்ஜிஸ்ட் சாரதா சீனிவாசன், “கலை மற்றும் கட்டிடக்கலையில் சாதனைகளின் அளவு மற்றும் எழுத்து மற்றும் கல்வெட்டு பதிவுகளின் எண்ணிக்கை அடிப்படையில், சோழர்கள் தென்னிந்திய வரலாற்றில் மிகப்பெரிய பேரரசுகளில் ஒன்றாக வருவார்கள்” என்று கூறுகிறார். மேலும், “நிர்வாகம், சமூக வாழ்க்கை மற்றும் பொருள் கலாச்சாரம் பற்றிய நுணுக்கமான விவரங்களைத் தரும் கல்வெட்டுகள் ஏராளமாக உள்ளன… கி.பி 1010 இல் முதலாம் ராஜராஜனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிரகதீஸ்வரர் கோயிலில் மட்டும் கிட்டத்தட்ட நூறு கல்வெட்டுகள் உள்ளன,” என்றும் அவர் கூறுகிறார்

உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக நீண்ட பேரரசுகளில் சோழர்களும் ஒருவர் என்று கூறப்படுகிறது. ஒன்பதாம் மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளில் அவர்களின் ஆட்சியின் உச்சக்கட்டத்தில், சோழர்களின் கீழ் துங்கபத்ரா நதியின் தெற்கே உள்ள முழுப் பகுதியும் ஒரே அலகாகக் கொண்டுவரப்பட்டது. தென்னிந்தியாவில் இருந்து வடக்கே படையெடுத்து, பின்னர் கிழக்கு இந்தியாவிலும் படையெடுப்பை நடத்திய ஒரே வம்சமாக சோழர்கள் இருக்கலாம், வட இந்தியாவில் ராஜேந்திர சோழன் பாடலிபுத்திரத்தின் பால மன்னனை தோற்கடித்ததாக அறியப்படுகிறது. இந்திய துணைக் கண்டத்திற்கு வெளியே பெரும் வணிக மற்றும் பிராந்திய லட்சியங்களைக் கொண்ட முதல் பேரரசு சோழ வம்சமாகும். “இலங்கை, மாலத்தீவு, சீனா, ஜாவா/சுமத்ரா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளுக்குப் பயணங்கள், வெற்றிகள் அல்லது வர்த்தகம் போன்றவற்றின் தனித்தன்மையான கடல்வழிப் போக்கு சோழர்களின் கல்வெட்டுகளால் மட்டுமல்ல, தமிழ் வணிகச் சங்கங்களுக்கான கல்வெட்டுகள் (தாய்லாந்து போன்றவை), பாடல்கள் மூலம் சீன தொடர்புகள் மற்றும் குவான்சோவில் உள்ள சோழர்களால் ஈர்க்கப்பட்ட சிவன் கோவில் வரையிலான வெளிநாட்டு ஆதாரங்களிலும் வெளிப்படுகிறது,” என்கிறார் சீனிவாசன்.

சோழர்களின் பெருமை பற்றிய பேச்சு அரசியல் சாயமும் கொண்டது. இந்தியா காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த நேரத்தில் சோழர்களின் பயணங்கள் மற்றும் பிராந்திய விரிவாக்கம் பற்றி அதிகம் கண்டுபிடிக்கப்பட்டது. கடல்சார் வர்த்தகத்தில் ஈடுபட்டு, தென்கிழக்கு ஆசியாவின் பெரும்பகுதிகளில் தங்களுடைய இருப்பை உணரவைக்கும் ஒரு அற்புதமான வம்சத்தின் கதை, இந்திய துணைக்கண்டத்திற்கு சொந்த வரலாறு இல்லை என்ற பிரிட்டிஷ் கூற்றுகளுக்கு எதிராக போட்டியிடும் வகையில் அமைந்துள்ளது.


VAYU MUDRA



 

வளையாபதி

  


வளையாபதி

  • ஆசிரியர் பெயர் தெரியவில்லை
  • சமணக் காப்பியம்
  • விருத்தப்பாவால் ஆனது
  • முழுமையாகக் கிடைக்கவில்லை
  • கிடைத்தவை 72 பாக்கள்
  • மூல நூல் வைசிக புராணம் 35 வது சுருக்கம்
  • நவகோடி நாராயணன் பற்றிய நூல்
  • மடலேறுதல் பற்றிக் கூறும் காப்பிய நூல்
  • ஒட்டக் கூத்தர் கவியழகு வேண்டி வளையாபதியை நினைத்தார் என்று தக்கயாகப்
  • பரணியின் உரையாசிரியர் கூறுகிறார்.சிறப்பு
  • இலக்கண இலக்கிய உரையாசிரியர்களால் மிகவும் போற்றப்பட்ட நூல்

WEDDING RING JOKES




 


BODY LANGUAGE DOs & DON'TS



 



Thursday, 29 December 2022

PRODUCTIVE DAY

 USE A HANDWRITTEN TO-DO LIST

The motor feedback provides sensory information to your brain, making you 40% more likely to complete it.

START PLANNING THE NIGHT BEFORE

It helps reduce stress and aniety so that you sleep better, and will help you wake up feeling motivated and ready to get started

DEVELOP A MORNING ROUTINE

Focus on things you enjoy and will be excited to get up for, and avoid anything you'll dread.

TRACK WORK AND WELLNESS IN ONE PLACE

Wellness has a direct impact on your energy level. Organize things like meal planning and hydration tracking alongside your to-do list.

START WITH 3 EASY WINS

Start your to-do list with a simple, 5-minute tasks, Checking them off will give you a hit of hormones and create momentum.

IDENTIFY THE THING

If there's a task you are dreading or procrastinating put it fourth on your list right after the 3 Easy Wins so that you benefit from that momentum.

DON'T FORGET THE MOTIVATION

Humans love rewards and they provide feel-good hormones, so make sure your to-do list also idenfies how you'll reward yourself throughout the day.

DESIGNATE SPACE FOR NOTES + IDEAS

It's natural for good ideas to come right when you're in the flow, which can be distracting. Have a designated space to write them down quickly.

DOCUMENT YOUR PROGRESS

Being able to reflect back on your productivity or growth over time can be one of the best motivators of all.

STAY HYDRATED

The other 9 tips on this list are pointless if you are dehydrated, which causes a decrease in energy, focus, and motivation.

Stay positive and be happy

சீவக சிந்தாமணி

 


 சீவக சிந்தாமணி
  • ஆசிரியர் திருத்தக்க தேவர்
  • காலம் 9 ஆம் நூற்றாண்டு. கருத்து வேறுபாடு உண்டு.
  • திருத்தக்க தேவர் நிலையாமை குறித்து எழுதிய நூல் நரிவிருத்தம்
  • விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம்
  • சமணக் காப்பியம்
  • மணநூல், காமநூல்,முக்தி நூல் என்ற வேறு பெயர்களும் உண்டு.
  • வட மொழியில் உள்ள கத்திய சிந்தாமணி, சத்திர சூளாமணி என்ற இரு நூலையும் தழுவி எழுதப்பட்டது சீவக சிந்தாமணி
  • காண்டப் பிரிவு இல்லை
  • 13 இலம்பகங்களையும் 3145 பாடல்களையும் கொண்டது.
  • முதல் இலம்பகம் நாமகள் இலம்பகம்
  • இறுதி இலம்பகம் முக்தி இலம்பகம்
  • காப்பியத் தலைவன் சீவகன்
  • சீவகன் சிந்தாமணியுடன் ஒப்பிடப்பட்டுள்ளான்.
  • சிந்தாமணி என்பது கேட்டதைக் கொடுக்கும்
  • தேவலோகத்தில் உள்ள ஒரு மணி (ரத்தினம்)
  • சீவகனின் தந்தையான சச்சந்தனைக் கொன்றவன் கட்டியங்காரன்
  • சீவகன் பிறந்த இடம் சுடுகாடு
  • சீவகனை எடுத்து வளர்த்தவன் கந்துக்கடன் என்னும் வணிகன்
  • சீவகனுக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர் அச்சணந்தி
  • திருத்தக்கதேவர் சோழர்குலத்தில் பிறந்தவர் இவர்.
  • இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர்
  • இவர் பாடிய மற்றொரு நூல் நரி விருத்தம் ஆகும்.

நூல் குறிப்பு:

  • ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சீவகசிந்தாமணி
  • இந்நூலின் கதைத் தலைவன் சீவகன்
  • அவன் பெயரை இணைதத்துச் சீவகசிந்தாமணி எனப் பெயர் பெற்றது என்பர்.
  • இந்நூலுக்கு மணநூல் என்னும் வேறு பெயரும் உண்டு.

சிறப்பு:

  • அனைத்துச் சமயத்தவரும் விரும்பிக்கற்ற சமணக் காப்பியம்
  • சைவனான குலோத்துங்க மன்னன் விரும்பிக்கற்ற காப்பியம்
  • நூல் முழுமைக்கும் சைவரான நச்சினார்க்கினியர் உரை எழுதினார்.
  • இவர் இருமுறை உரை எழுதினார் என்பர்
  • சைவரான உ.வே.சா. அவர்கள் முதன் முதலில் பதிப்பித்தார்.
  • அவர் பதிப்பித்த முதல் நாலும் சீவகசிந்தாமணியே ஆகும்.
  • கிறித்துவரான ஜி.யு.போப் இதனை இலியட் ஒடிசியுடன் ஒப்பிட்டுள்ளார்.

Wednesday, 28 December 2022

வழிபாட்டு முறைகள்

பூஜை முறைகள் 

முதலில் தெய்வத்தை வரவேற்றல் ( ஆவாஹனம் )

தெய்வத்தை அமரச் செய்தல் (  ஆசனம் )

பாத பூஜை ( பாத்யம் )

வில்வம், சந்தானம், அரிசி, மலர் போன்றவை ஆரம்பித்தல் ( அர்க்கியம் )

நீராடுதல்  ( அபிஷேகம் )

பூணூல் அணிவித்தல் ( உபவீதம் )

மலர்களால் அர்ச்சித்தல் ( அர்ச்சனை )

தூபம் காட்டுதல்

தீபம் காட்டுதல் 

உணவு படைத்த்தால் ( நைவேத்யம் )

கற்பூரம் காட்டுதல் ( நீராஜனம் )

தங்கம் போன்றவற்றை சமர்ப்பணம் செய்தல் ( ஸ்வர்ண புஷ்பம் )

தெய்வத்தை வழிபட்டு வழியனுப்புதல் ( விசர்ஜனம் )

ஐம்பெருங்காப்பியங்கள் மணிமேகலை

 


மணிமேகலை
  • ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
  • வேறுபெயர் தண்டமிழ்ச் சாத்தன், தண்டமிழ்ப் புலவன்
  • காலம் 2 ஆம் நூற்றாண்டு
  • இந்நூலுக்கு மணிமேகலைத் துறவு என்ற பெயரும் உண்டு
  • பௌத்த காப்பியம்
  • தமிழன் இரண்டாம் காப்பிய நூல்
  • சமய பூசலுக்கு வித்திட்ட நூல்
  • துறவுக்கு முதன்மை கொடுக்கும் நூல்
  • கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலை என்ற பெண்ணின் வரலாற்றைக் கூறும் நூல்
  • பெண்ணின் பெருமை பேசும் நூல் (சிலப்பதிகாரம் போன்று)
  • சங்க இலக்கியம் இல்லறத்திற்கு முதன்மை கொடுத்தது திருக்குறள் இல்லறம் துறவறம் இரண்டுக்கும் முதன்மை கொடுத்தது மணிமேகலை துறவுக்கு முதன்மை கொடுத்தது.

நூல் அமைப்பு:

  • காண்டப் பிரிவுகள் இல்லை
  • 30 காதைகள் உள்ளன
  • முதல் காதை விழாவறைக் காதை
  • இறுதிக் காதை பவத்திறம் அறுக எனப் பாவை நோற்ற காதை
  • முழுவதும் ஆசிரியப் பாவால் ஆனது.
  • 27-வது சமயக்கணக்கர்தம் திறம் கேட்ட காதை மட்டும் இணைக் குறள்
  • ஆசிரியப்பாவாலானது மற்றவை நிலை மண்டில ஆசிரியப்பாக்கள்

ஆசிரியர் குறிப்பு:

  • மணிமேகலையின் ஆசிரியர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
  • சாத்தன் என்பது இவரது இயற்பெயர்
  • இவர் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தார்
  • கூலவாணிகம் (கூலம் – தானியம்) செய்தவர்.
  • இவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று வழங்கப்பெற்றார்.
  • இளங்கோவடிகளும் இவரும் சமகாலத்தவராவார்.
  • இவர் கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர்.
  • தண்டமிழ் ஆசான் சாத்தன் தன்னூற்புலவன் என்று இளங்கோவடிகள் சாத்தனாராகப் பாராட்டியுள்ளார்.
  • இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர்.

நூற்குறிப்பு:

  • மணிமேகலை ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.
  • மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் கூறுவதால் இந்நூலுக்கு மணிமேகலையைத் துறவு என்னும் வேறு பெயரும் உண்டு.
  • இந்நூல் சொற்சுவையுமம் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும் நிறைந்தது. பௌத்த மதச் சார்புடையது.
  • முப்பது காதைகளைக் கொண்டது
  • முப்பது காதைகளுள் ஆபுத்திரன் நாடு அடைந்த காதை இருபத்து நான்காவது காதை.

கதை மாந்தர்:

  • மணிமேகலையின் தோழி சுதமதி கண்ணகியின் தோழி தேவந்தி
  • ஆதிரையின் கணவன் சாதுவன்
  • மணிமேகலைக்கு முதன்முதலாக அமுதசுரபியில் பிச்சையிட்டவள் ஆதிரை
  • ஆதிரையின் வரலாற்றை மணிமேகலைக்குச் சொன்னவள் காய சண்டிகை
  • விருச்சிக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் காய சண்டிகை
  • காய சண்டிகையின் பசிநோயைப் போக்கியவள் மணிமேகலை
  • மணிமேகலையை மணிபல்லவத்தீவுக்கு அழைத்துச் சென்ற தெய்வம் மணிமேகலாத் தெய்வம்
  • மணிமேகலாத் தெய்வம் மணிமேகலைக்குக் கொடுத்த வரம் மூன்று
  • ஆபுத்திரனுக்கு அமுதசுரபியைக் கொடுத்தது சிந்தாதேவி
  • அமுதசுரபியைக் கோமுகியில் இட்டவன் ஆபுத்திரன்
  • அமுத சுரபி பற்றி மணிமேகலைக்குச் சொன்னது தீவதிலகை

இடங்கள்:

  • மணிமேகலை பிறந்த ஊர் பூம்புகார்
  • மணிமேகலை மறைந்த ஊர் காஞ்சிபுரம்
  • மணிமேகலை சமயவாதிகளிடம் உண்மை கேட்ட ஊர் வஞ்சி மாநகரம்
  • பூம்புகாரில் உள்ள சோலைகள் : இலவந்திகை, உய்யாவனம், உவவனம், கவேரவனம், சம்பாதிவனம்
  • மணிமேகலை பூக்கொய்யச் சென்ற வனம் உவவனம்
  • மணிபல்லவத்தில் இருந்த பீடிகை புத்தபீடிகை
  • அமுத சுரபி இருந்த இடம் கோமுகி
  • அமுத சுரபிக்கு வேறு பெயர் அட்சய பாத்திரம்

செய்திகள்:

  • சம்புத் தீவின் தெய்வம் சம்பு
  • சம்புத் தீவிற்கு நாவலந்தீவு என்ற வேறுபெயரும் உண்டு
  • நாவலந்தீவு என்பது இந்தியா
  • சம்பாபதி புகார் நகரத்திற்குக் காவிரி பூம்பட்டினம் என்று பெயர் அளி;த்தது.
  • முதன்முதலில் இந்திரவிழா எடுத்தவன் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்
  • இந்திரவிழா 28 நாட்கள் நடைபெறும்.
  • மழை வேண்டி எடுக்கப்படும் விழா இந்திரா விழா
  • பூம்புகாரில் இந்திரவிழா மிகச் சிறப்பாக நடந்ததாக சிலப்பதிகாரம் மணிமேகலை என்ற இரண்டு நூல்களும் கூறுகின்றன.
  • மூவகைப் பத்தினிப் பெண்டிர்
    1. உடன் எரி மூழ்குவர்
    2. தனிஎரி மூழ்குவர்
    3. கைம்மை நோன்பு நோற்பார்
  •  உடல் அடக்க முறை ஐந்து
    1. சுடுதல்
    2. வாளா இடுதல்
    3. தோண்டிப்புதைத்தல்
    4. பள்ளத்தில் அடைத்தல்
    5. தாழியில் கவிழ்தல்
  • தீயவை பத்து
    1. கொலை 2. களவு 3. காமம்
    4. பொய் 5. குறளை 6. கடுமொழி
    7. பயனில் சொல் 8. வெஃகல் 9. வெகுளல்
    10. பொல்லாக்காட்சி

PRANA MUDRA


 

Tuesday, 27 December 2022

PLANNING FOR 2023 .....6

 

6-Reward, Relax, and Recharge


Relaxing with a favorite activity can help to recharge your batteries. Whether taking a hot bath, reading a good book, or watching your favorite movie, taking some time for yourself can help you feel refreshed and ready to tackle whatever comes your way.

Repeat After Me

Finally, I am going to celebrate the small wins as well as the big and I’m going to make it my mission to set time to relax and recharge to avoid burnout. I’m not going to deprive myself of the things I love and, hopefully, create some balance in 2023.

“The magic in new beginnings is truly the most powerful of them all.” 

Josiyah Martin

SURYA MUDRA


 Surya mudra :— it is a energy booster

1:- It cures the digestive problems.

2:— it reduces weight

3:— it enhances the digestive power , and good for gas, constipation, and other digestive problems.

4:—good for thyroid

5:—reduce bad cholesterol,

6:— good for cold, cough

7:— good for winter.

8:— reduces liver problems.

Note :— practice regular 10 to 15 minutes

If you have High blood pressure, and any chronic issues avoid it.

BITTER TRUTHS


 



ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம்

 


சிலப்பதிகாரம்

நூற் குறிப்பு:

  • சிலம்பு +அதிகாரம் = சிலப்பதிகாரம்
  • கண்ணகியின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் கொண்டது. ஆதலின் சிலப்பதிகாரமாயிற்று.
  • சிலப்பதிகாரம் எனும் செந்தமிழ்க் காப்பியம் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம்,
  • வஞ்சிக் காண்டம் எனும் முப்பெருங்கண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது.
  • புகார்க்காண்டம் பத்து காதைகளையும், மதுரைக் காண்டம் பதின்மூன்று
  • காதைகளையும் வஞ்சிக் காண்டம் ஏழு காதைகளையும் கொண்டுள்ளது.
  • இது உரையிடப்பட்ட பாட்டுடைச் செய்யுள் எனவும் வழங்கப்பெறும்.
  • முதற் காப்பியம், இரட்டைக் காப்பியம், முத்தமிழ் காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம் எனச் சிலப்பதிகாரத்தைப் போற்றி புகழ்வோர்.
  • ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மையானது சிலப்பதிகாரம்
  • ஆசிரியர் இளங்கோவடிகள்
  • இளங்கோவடிகள் துறவு பூண்டு அமர்ந்த இடம் குடவாயிற் கோட்டம் என்ற ஊர்.
  • குடவாயிற் கோட்டம் சேர நாட்டு ஊர்
  • மூன்று காண்டம் முப்பது காதை
  • காதை – கதை பொதிந்துள்ள பாட்டு
  • புகார் காண்டம்: மங்கல வாழ்த்துப் பாடல் முதல் நாடுகாண் காதை வரை உள்ள 10 காதைகள்
  • மதுரைக் காண்டம்: காடுகாண் காதை முதல் கட்டுரைக் காதை வரை உள்ள 13 காதைகள்
  • வஞ்சிக் காண்டம்: குன்றக் குரவை முதல் வரந்தருகாதை உள்ள 13 காதைகள்
  • சிலப்பதிகாரம் ஆசிரியப் பாவாலும் கொச்சகக் கலிப்பாவாலும் ஆனது.

ஆசிரியர் குறிப்பு:

  • இளங்கோவடிகள் சேர மரபினர்
  • இளங்கோவடிகளின் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், தாய் நற்சோனை
  • இவரது தமையன் சேரன் செங்குட்டுவன்
  • இளையவரான இளங்கோவே நாடாள்வார் என்று கணியன் கூறிய கருத்தைப் பொய்ப்பிக்கும் பொருட்டு இளங்கோ இளமையிலேயே துறவு பூண்டு குணவாயிற் கோட்டத்தில் தங்கினார்.
  • அரசியல் வேறுபாடு கருதாதவர், சமய வேறுபாடற்ற துறவி.
  • இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.

சிலம்பின் புகழ்:

  • “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர்
    மணியாரம் படைத்த தமிழ்நாடு” – பாரதியார்
    “சிலப்பதிகாரச் செய்யுளைக் கருதியும் … தமிழ்ச்
    சாதியை அமரத்தன்மை வாய்ந்தது என்று உறுதி
    கொண்டிருந்தேன்” – பாரதியார்
  • “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
    வள்ளுவனைப் போல் இளங்கோவனைப் போல்
    பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை” – பாரதியார்
  • “தமிழ் கூறும் நல் உலகம்” என்று மூன்று நாடுகளையும் ஒருங்கே காணும் தன்மை தொல்காப்பியத்தில் உண்டு. ஆனால் சங்க இலக்கியத்தில் இல்லை.
    “முதன்முதலாகத் தமிழ் மக்கள் எல்லோரையும் ஒருங்கே காணும் நெறியில் நின்று நூல் செய்தவர் இளங்கோவடிகள் – மு.வரதராசனார்.
  • நாட்டுப்புறப் பாடல்களுக்குச் சிறப்புத் தந்து முதலில் பாடியவர் இளங்கோவடிகள்
  • நாட்டுப்புறப் பாடல்களுக்குச் சிறப்புத் தந்து இணங்கோவடிகளை அடுத்துப் பாடியவர் மாணிக்கவாசகர்;
  • சைவ வைணவ நெறிகளையும் பாடிய சமணநூல் சிலப்பதிகாரம்
  • முதல் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், நாடகக் காப்பியம்
  • முதல் தேசியக் காப்பியம் சிலப்பதிகாரம்
  • இரண்டாவது தமிழ் தேசிய காப்பியம் பெரிய புராணம்
  • பாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட நூல் சிலப்பதிகாரம்
  • சிலப்பதிகாரத்திற்குச் சிறந்த உரை எழுதியவர் அடியார்க்கு நல்லார்.

முக்கிய கதை மாந்தர்கள்:

  • தலைவன் கோவலன்
  • தலைவி கண்ணகி (சங்க காலத்துக் கடையெழு வள்ளல்களில் ஒருவனான பேகனின் மனைவி பெயரும் கண்ணகி)
  • ஆடல் மங்கை மாதவி
  • கோவலன் தந்தை மாசாத்துவான்
  • கண்ணகியின் தந்தை மாநாய்கன்
  • மாதவியின் தாய் சித்திராபதி
  • கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள் மணிமேகலை
    கண்ணகியின் தோழி தேவந்தி (இவள் ஓர் அந்தணப் பெண் இவள் கணவன் பாசண்ட சாத்தன்)
  • மாதவியின் தோழி வயந்தமாலை
  • பெண் சமணத்துறவி கவுந்தியடிகள்
  • ஆண் பௌத்தத் துறவி அறவண அடிகள்

செய்திகள்:

  • சிலம்பின் குறிக்கோள் மூன்று
  • கோவலன் – மாதவி பிரிவுக்குக் காரணம் ஊழ்
  • கோவலன் மதுரை சென்றதுக்குக் காரணம் ஊழ்
  • கோவலன் கொலையுண்டதற்குக் காரணம் ஊழ்
  • மதுரை எரிந்ததற்குக் காரணம் ஊழ் என்று இளங்கோவடிகள் கருதுகிறார்.
  • இளங்கோவடிகளுக்குக் கண்ணகியின் வரலாற்றைக் கூறியவர் சீத்தலைச் சாத்தனார்.
  • கண்ணகியின் வரலாற்றைச் சீத்தலைச் சாத்தனார் எழுத வேண்டும் என்று சொன்னவர் இளங்கோவடிகள்
  • கண்ணகியின் வரலாற்றை எழுதத் தகுதியுடையவர் இளங்கோவடிகளே என்று சொல்லி அவரே எழுத வேண்டும் என்று சொன்னவர் சீத்தலைச் சாத்தனார்.
  • இளங்கோவடிகள் தம் நூலைச் சீத்தலைச் சாத்தனார் முன் அரங்கேற்றினார்.