Wednesday 7 December 2022

தமிழ் இலக்கிய வகை

ஒரு மொழியில் காலம்தோறும் பல்வேறு இலக்கியங்கள் தோன்றி வளர்ந்து வருகின்றன. இவ்வாறு, ஒரு மொழியில் காணப்படும் இலக்கியங்களை அவற்றின் அமைப்பு, உள்அடக்கம் அல்லது பொருள், யாப்பு முதலியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்துவர். அவற்றை இலக்கிய வகைகள் எனலாம்.

தமிழ் மொழியிலும் பல்வேறு இலக்கியங்கள் காணப்படுகின்றன. அவற்றைப் பொதுவாகப் பின்வருமாறு வகைப்படுத்திக் காட்டலாம்.

TVU-Co1231d1

பேரிலக்கியம் - சிற்றிலக்கியம் வேறுபாடு

வ.எண்
பேரிலக்கியம்
சிற்றிலக்கியம்
1)
பாட்டுடைத் தலைவனின் வாழ்க்கையை முழுமையாகக் கூறும்.

ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் கூறும்.
2)
பாடல்களின் எண்ணிக்கை அல்லது பாடல்களின் நீளம் மிகுதி.
பாடல் எண்ணிக்கை குறைவு. ஆகவே குறுகிய அளவு உடையது.
3)
அறம் , பொருள் , இன்பம் , வீடு ஆகிய நான்கு பொருள் பற்றியது.
ஏதேனும் ஒரு பொருள் பற்றியது.

No comments:

Post a Comment