மணிமேகலை
- ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
- வேறுபெயர் தண்டமிழ்ச் சாத்தன், தண்டமிழ்ப் புலவன்
- காலம் 2 ஆம் நூற்றாண்டு
- இந்நூலுக்கு மணிமேகலைத் துறவு என்ற பெயரும் உண்டு
- பௌத்த காப்பியம்
- தமிழன் இரண்டாம் காப்பிய நூல்
- சமய பூசலுக்கு வித்திட்ட நூல்
- துறவுக்கு முதன்மை கொடுக்கும் நூல்
- கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலை என்ற பெண்ணின் வரலாற்றைக் கூறும் நூல்
- பெண்ணின் பெருமை பேசும் நூல் (சிலப்பதிகாரம் போன்று)
- சங்க இலக்கியம் இல்லறத்திற்கு முதன்மை கொடுத்தது திருக்குறள் இல்லறம் துறவறம் இரண்டுக்கும் முதன்மை கொடுத்தது மணிமேகலை துறவுக்கு முதன்மை கொடுத்தது.
நூல் அமைப்பு:
- காண்டப் பிரிவுகள் இல்லை
- 30 காதைகள் உள்ளன
- முதல் காதை விழாவறைக் காதை
- இறுதிக் காதை பவத்திறம் அறுக எனப் பாவை நோற்ற காதை
- முழுவதும் ஆசிரியப் பாவால் ஆனது.
- 27-வது சமயக்கணக்கர்தம் திறம் கேட்ட காதை மட்டும் இணைக் குறள்
- ஆசிரியப்பாவாலானது மற்றவை நிலை மண்டில ஆசிரியப்பாக்கள்
ஆசிரியர் குறிப்பு:
- மணிமேகலையின் ஆசிரியர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
- சாத்தன் என்பது இவரது இயற்பெயர்
- இவர் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தார்
- கூலவாணிகம் (கூலம் – தானியம்) செய்தவர்.
- இவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று வழங்கப்பெற்றார்.
- இளங்கோவடிகளும் இவரும் சமகாலத்தவராவார்.
- இவர் கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர்.
- தண்டமிழ் ஆசான் சாத்தன் தன்னூற்புலவன் என்று இளங்கோவடிகள் சாத்தனாராகப் பாராட்டியுள்ளார்.
- இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர்.
நூற்குறிப்பு:
- மணிமேகலை ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.
- மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் கூறுவதால் இந்நூலுக்கு மணிமேகலையைத் துறவு என்னும் வேறு பெயரும் உண்டு.
- இந்நூல் சொற்சுவையுமம் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும் நிறைந்தது. பௌத்த மதச் சார்புடையது.
- முப்பது காதைகளைக் கொண்டது
- முப்பது காதைகளுள் ஆபுத்திரன் நாடு அடைந்த காதை இருபத்து நான்காவது காதை.
கதை மாந்தர்:
- மணிமேகலையின் தோழி சுதமதி கண்ணகியின் தோழி தேவந்தி
- ஆதிரையின் கணவன் சாதுவன்
- மணிமேகலைக்கு முதன்முதலாக அமுதசுரபியில் பிச்சையிட்டவள் ஆதிரை
- ஆதிரையின் வரலாற்றை மணிமேகலைக்குச் சொன்னவள் காய சண்டிகை
- விருச்சிக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் காய சண்டிகை
- காய சண்டிகையின் பசிநோயைப் போக்கியவள் மணிமேகலை
- மணிமேகலையை மணிபல்லவத்தீவுக்கு அழைத்துச் சென்ற தெய்வம் மணிமேகலாத் தெய்வம்
- மணிமேகலாத் தெய்வம் மணிமேகலைக்குக் கொடுத்த வரம் மூன்று
- ஆபுத்திரனுக்கு அமுதசுரபியைக் கொடுத்தது சிந்தாதேவி
- அமுதசுரபியைக் கோமுகியில் இட்டவன் ஆபுத்திரன்
- அமுத சுரபி பற்றி மணிமேகலைக்குச் சொன்னது தீவதிலகை
இடங்கள்:
- மணிமேகலை பிறந்த ஊர் பூம்புகார்
- மணிமேகலை மறைந்த ஊர் காஞ்சிபுரம்
- மணிமேகலை சமயவாதிகளிடம் உண்மை கேட்ட ஊர் வஞ்சி மாநகரம்
- பூம்புகாரில் உள்ள சோலைகள் : இலவந்திகை, உய்யாவனம், உவவனம், கவேரவனம், சம்பாதிவனம்
- மணிமேகலை பூக்கொய்யச் சென்ற வனம் உவவனம்
- மணிபல்லவத்தில் இருந்த பீடிகை புத்தபீடிகை
- அமுத சுரபி இருந்த இடம் கோமுகி
- அமுத சுரபிக்கு வேறு பெயர் அட்சய பாத்திரம்
செய்திகள்:
- சம்புத் தீவின் தெய்வம் சம்பு
- சம்புத் தீவிற்கு நாவலந்தீவு என்ற வேறுபெயரும் உண்டு
- நாவலந்தீவு என்பது இந்தியா
- சம்பாபதி புகார் நகரத்திற்குக் காவிரி பூம்பட்டினம் என்று பெயர் அளி;த்தது.
- முதன்முதலில் இந்திரவிழா எடுத்தவன் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்
- இந்திரவிழா 28 நாட்கள் நடைபெறும்.
- மழை வேண்டி எடுக்கப்படும் விழா இந்திரா விழா
- பூம்புகாரில் இந்திரவிழா மிகச் சிறப்பாக நடந்ததாக சிலப்பதிகாரம் மணிமேகலை என்ற இரண்டு நூல்களும் கூறுகின்றன.
- மூவகைப் பத்தினிப் பெண்டிர்
1. உடன் எரி மூழ்குவர்
2. தனிஎரி மூழ்குவர்
3. கைம்மை நோன்பு நோற்பார் - உடல் அடக்க முறை ஐந்து
1. சுடுதல்
2. வாளா இடுதல்
3. தோண்டிப்புதைத்தல்
4. பள்ளத்தில் அடைத்தல்
5. தாழியில் கவிழ்தல் - தீயவை பத்து
1. கொலை 2. களவு 3. காமம்
4. பொய் 5. குறளை 6. கடுமொழி
7. பயனில் சொல் 8. வெஃகல் 9. வெகுளல்
10. பொல்லாக்காட்சி
No comments:
Post a Comment