விண்வெளி ஆராய்ச்சியாளர்களையே குலை நடுங்கவைக்கும் படியான ஒரு பேராபத்து வீனஸ் கிரகத்திற்கு (Venus) பின்னால் ஒளிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நீங்களொரு வாகன ஓட்டியாக இருந்தால், ப்ளைன்ட் ஸ்பாட்ஸ் (Blind Spots) என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதை ஏற்கனவே அறிந்து இருக்கலாம்.
அறியாதோர்களுக்கு 'ப்ளைன்ட் ஸ்பாட்ஸ்' என்றால் - ஒரு காரையோ அல்லது ஒரு பேரூந்தையோ இயக்கும் ஓட்டுனரால், அவர் பயணிக்கும் சாலையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை பார்க்கவே முடியாது. அது தான் ப்ளைன்ட் ஸ்பாட்ஸ் எனப்படுகிறது.
இதே போன்ற ப்ளைன்ட் ஸ்பாட்கள் சாலைகளில் மட்டுமல்ல, விண்வெளியில் கூட உள்ளது. அப்படியான "ஒரு இருட்டுக்கு" பின்னால் ஒளிந்து கிடந்த.. வேட்டைக்காக காத்திருந்த ஒரு பேராபத்தை, விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்!
முதலில் சிலியில் (Chile) உள்ள செரோ டோலோலோ இன்டர்-அமெரிக்கன் ஆய்வகத்தில் (Cerro Tololo Inter-American Observatory) உள்ள அட்வான்ஸ்டு ஸ்பேஸ் டெலஸ்க்கோப்பிற்கு ஒரு பெரிய நன்றியை சொல்லி விடுவோம். ஏனென்றால், அந்த விண்வெளி தொலைநோக்கி வழியாகத்தான் வீனஸ் கிரகத்திற்கு பின்னால்.. மிகப்பெரிய மற்றும் மிகவும அபாயகரமான நியர்-எர்த் ஆப்ஜெக்ட் (Near-Earth Object) ஒன்று பதுங்கி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அறியாதோர்களுக்கு நியர்-எர்த் ஆப்ஜெக்ட் என்றால், நமது சூரிய குடும்பத்தில் பூமிக்கு அருகாமையில் உள்ள எந்தவொரு விண்வெளி பொருளுமே (அதாவது விண்கல், விண்வெளி பாறை, சிறுகோள் போன்றவைகள்) நியர்-எர்த் ஆப்ஜெக்ட் என்று பட்டியலிடப்படும். அப்படியாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த விண்வெளி பொருளை நியர்-எர்த் ஆப்ஜெக்ட் என்று பட்டியலிடப்படும்.
அப்படியாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த விண்வெளி பொருளை நியர்-எர்த் ஆப்ஜெக்ட் என்று கூறுவதை விட பூமிக்கான "ஒரு எமன்" என்றே கூறலாம்!
ஏனென்றால்.. கடந்த 8 ஆண்டுகளில் இப்படி ஒன்றை பார்த்ததே இல்லை! வீனஸ் கிரகத்திற்கு பின்னால் ஒளிந்துள்ள இந்த நியர்-எர்த் ஆப்ஜெக்ட் ஆனது கடந்த எட்டு ஆண்டுகளில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் அபாயகரமான விண்கற்களில் ஒன்றாகும்! விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இது மனித நாகரீகத்தை அழிக்கும் வல்லமை கொண்ட ஒரு விண்கல் ஆகும். அதாவது பூமியின் கதையை முடிக்கும் அளவு வல்லமை கொண்ட ஒரு சிறுகோள் ஆகும்! வீனஸ் கிரகத்திற்கு பின்னால் ஒளிந்தபடியே சூரியனை சுற்றிவரும் இந்த விண்கல்லிற்கு 2022 AP7 என்றும் பெயரிடப்பட்டுள்ளது; இது இன்று இல்லை என்றாலும் கூட, என்றாவது ஒரு நாள் பூமியை நோக்கி வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது!
சரியாக 2029 ஆம் ஆண்டு.. ஏப்ரல் 13 ஆம் தேதி அன்று? தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 2022 AP7 என்கிற விண்கல்லை விட ஆபத்தான நியர்-எர்த் ஆப்ஜெக்ட் ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டால் - ஆம் இருக்கிறது. அதன் பெயர் 99942 Apophis ஆகும். இந்த சிறுகோளின் அளவு சுமார் 370 மீட்டர் ஆகும்; இதுவும் கூட மிகவும் ஆபத்தான நியர்-எர்த் ஆப்ஜெக்ட் என்கிற பட்டியலில் உள்ளது. கடந்த டிசம்பர் 2004 ஆம் ஆண்டில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த விண்கல், வருகிற 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி அன்று பூமியை தாக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது! இந்த சிறுகோள் பூமியுடன் மோதுவதற்கான நிகழ்தகவு (Probability) 2.7% வரை உள்ளது என்றாலும் கூட நாம் பெரிதாக அச்சப்பட வேண்டியது இல்லை. ஏனென்றால் 370 மீட்டர் அகலம் உள்ள ஒரு விண்கல்லால் ஒட்டுமொத்த பூமியையும் அழித்துவிட முடியாது!
ஆக ஒரு விண்கல் எவ்வளவு பெரிதாக இருந்தால் அது பூமியை அழிக்கக்கூடும்? விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஒரு விண்கல் மோதல் வழியாக நமது கிரகத்தில் உள்ள மொத்த உயிர்களும், முற்றிலுமாக அழிந்து போகிறது என்றால்.. அந்த விண்கல் ஆனது சுமார் 96 கிமீ அகலத்தில் இருக்க வேண்டும்! சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் விழுந்த ஒரு விண்கல் தான் டைனோசர் இனத்தை அழித்தது என்று நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். அந்த விண்கல்லின் அகலம் எவ்வளவு என்று தெரியுமா? - 10 கிலோ மீட்டர் மட்டுமே ஆகும்! ஆனாலும் கூட அது விழுந்த இடத்தில் - 180 கிலோமீட்டர் விட்டம் மற்றும் 20 கிலோமீட்டர் ஆழம் கொண்ட ஒரு பள்ளம் உருவாகி உள்ளது (Chicxulub crater). இப்போது நீங்களே கணக்கு போட்டு பார்த்துகொள்ளுங்கள். 96 கிமீ அகலம் கொண்ட ஒரு விண்கல் ஆனது - வேகமாக வந்து - பூமி மீது மோதினால் என்ன நடக்கும் என்று!? Photo Courtesy: NASA / Wikipedia
No comments:
Post a Comment