நேபாளத்தில் ஓடும் ஒரு முக்கிய நதியான கண்டகி, நாராயணீ என்ற இரு பெயர்களால் அழைக்கப்படும் நதியாகும். இந்த நதி கங்கை நதியிலிருந்து கிழக்கு பக்கமாக பிரிந்து பெரும்பாலும் நேபாளத்தில் ஓடுவது.
சாளக்கிராமங்கள் இந்த நதியின் தான் கற்களிலிருந்து உருவாகின்றன. இவற்றின் உள்ளே மஹாவிஷ்ணுவின் பல அம்சங்கள் இயற்கையாக தோன்றி இருக்கும். இந்த நதியில் இருக்கும் ஒருவித பாக்டீரியாக்கள் இவற்றுள் புகுந்து அரித்து இதுபோன்ற உருவங்களை உண்டாக்கும. பார்ப்பதற்கு பெரிய கருப்பு கூழாங்கல் போல வெளித்தோற்றத்தில் இருந்தாலும், அவற்றை இரண்டாக திறந்தால் அந்த உருவங்களை காணலாம்.
சிவனை சைவர்கள் லிங்க வடிவில் வழிபடுவதுபோல வைணவர்கள் திருமாலை சாளக்கிராமக் கற்களில் வழிபடுகின்றனர்.இந்தப் புனிதக் கற்கள் நேபாளத்தின் முக்திநாத் பகுதியில் கண்டகி ஆற்றங்கரைகளில் காணப்படுகின்றன. இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. இவை நெடுங்காலமாக கோவில்கள், மடங்கள், வீடுகளில் வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது.
No comments:
Post a Comment