Tuesday, 25 November 2025

மனைவி அமைதியாக இருந்தால்.....

 மனைவி அமைதியாக இருந்தால் கணவனுக்கு வயிற்றில் புளி கரைக்கும்!

கணவன் : இன்னிக்கு என்ன அமைதியா இருக்கா? என்னடி ஆச்சு உனக்கு?

மனைவி : இன்னும் என்ன ஆகணும்?

கணவன் : இல்ல கம்முன்னே இருக்கியே அதான் கேட்டேன்..

மனைவி : ஏன் அதுக்கு கூட உரிமை இல்லையா இந்த வீட்டுல?

கணவன் : ஐயோ நான் எதுவும் கேட்கலை சாமி ! ஆளை விடு...

மனைவி : ஆமா எப்படி கேட்பீங்க? உங்களுக்கு நான் யாரு? என்கிட்ட எதுக்கு கேட்க போறீங்க?

கணவன் : ஐயோ பைத்தியமா இவ 🙄😒 மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிற!

No comments:

Post a Comment