Friday, 12 June 2026

மொக்க ஜோக்ஸ்

 ஒவ்வொரு மனைவியும் யூடியூபில் தவறாமல் தினமும் பார்ப்பது பிரியாணி எப்படி செய்வது!!!!

ஆனா போங்க எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி செய்வது அந்த ரவை உப்புமா தாங்க!!!

என்ன கொடுமை சார் !!! இது !!


கணக்கு புத்தகம் ஏன் ரொம்ப சோகமா இருக்கு தெரியுமா?

தெரியலையே!

ஏன்னா! அதுக்கு நிறைய “பிராப்ளம்ஸ்” இருக்கு இல்ல, அதனால தான்.

😊 😄😊 😄😊

மறைக்காம என்கிட்டே சொல்லுங்க ...என் வீட்டு வாசல்லே எதுக்கு பூவா ,தலையா போட்டு பார்த்துக்கிட்டு இருக்கீங்க ?''

''உங்க பொண்ணு தலையிலே ரோஜாப்பூ இன்னைக்கி இருக்குமான்னு எங்களுக்குள் ஒரு பந்தயம் ...அதான் ...!''

😊 😄😊 😄😊

ஆயில் புல்லிங் செய்யும் போது

அழகாய் தெரிகிறாள் மனைவி ...

வாயை மூடிக் கொண்டிருப்பதால் !

No comments:

Post a Comment