Friday, 12 June 2026

உப்புமா ஜோக்

நம்ம குமாரு பெண் பார்க்க போய் இருந்தான்! டயட் கண்ட்ரோல்ல இருந்ததால் லைட்டா டிஃபன் செய்ய சொல்லி இருந்தான்!

பெண்ணை குமாருக்கு ரொம்ப பிடித்து இருந்தது. டிஃபன் வந்தது. கல்யாண பெண் சமைத்தது என்று ஆசையாக சொன்னார்கள்!

நம்ம ஆளும் சூப்பர் ! சூப்பர்! அட என்ன ருசி என்று சப்புகொட்டி சாப்பிட்டு முடித்தான்!.

திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்து முதல் நாள் ஆஃபீஸ், ப்ரேக் பாஸ்ட் எடுத்து வைக்க சொன்னான்!

நிச்சயதார்த்தம் அன்று அவள் சமைத்த அதே உணவு! அதே ருசி என்று பாராட்டி சாப்பிட்டான்!

ஆபீஸ் சென்றவன் மதியம் லஞ்ச் பாக்ஸ் திறக்க காலையில் சாப்பிட்ட அதே உணவு! மகிழ்ச்சியுடன் சாப்பிட்டான்.

வேலை முடிந்து வீட்டுக்கு வந்தான் இரவும் அதே உணவு! சற்று சோர்ந்து போனான்! சரி மீதம் ஆகி இருக்கும் என்று நினைத்து சாப்பிட்டு உறங்கி போனான்!

காலையில் பசியில் எழுந்த அவனுக்கு ஒரே அதிர்ச்சி அதே உணவு!

வேறென்ன " உப்புமா " தான் !

கோபத்துடன் மனைவியை பார்த்து என்னடி இது என்று கேட்க!

மனைவி சிரித்து கொண்டே உங்களுக்கு பிடித்த உணவு அதான் செய்தேன் என்றாள்!

அடியே பிடிக்கும் அதற்கு தினமும் மூன்று வேளையும் உப்புமா! என்றால்!

இல்லைங்க பெண் பார்க்க வரும்போது என் அம்மா செஞ்ச உப்புமாவை நீங்கள் ரொம்ப ரசித்து பாராட்டி சாப்பிட்டீர்கள் அதான் அந்த ஒரு டிஷ் மட்டும் சமைக்க கற்றுக்கொண்டேன் என்றான்.

நம்ம குமாரு இப்ப மயங்கி விழுந்தான்

No comments:

Post a Comment