Friday, 12 June 2026

உப்புமா ஜோக்

 இப்படி உருட்டி உருட்டி வாழ்க்கையை சிறப்பாக்கி கொள்ளனும்!

திருமணம் ஆகி முதல் நாள் மனைவி சமையலை கணவன் சாப்பிட்ட பின் !

கணவன் : ஏய் சத்தியமா சொல்லுடி.... இதான் முதல் தடவை சமைக்கிறாயா...😳❤

மனைவி : ஏ லூசு நம்புடா Promise ah...😏

கணவன் : அப்புறம் எப்பிட்றி இவ்ளோ செம டேஸ்டா பண்ற நம்பவே முடில...பொய் சொல்லாத...😒

மனைவி : ஏய் ஆமாண்டா...ரியலா இதுக்கு முன்னாடி சமைக்க வில்லை ஆனா எவ்ளோ வீடியோ பாக்குறோம்...அப்புறம் எதிர்வீட்டுல புதுசா கல்யாணமாகி வந்தாங்கள்ல அந்த அக்கா நேற்று கூட இதை சமைத்தாங்க ..அதை பாத்துதான்

நானும் பண்ணேன்...😏

கணவன் : ஏய் எவ்ளோ வீடியோ பாத்தாலும் இதுலாம் முதல் தடவை சமைக்கும் போது யாருக்கும் இவ்ளோ சூப்பரா சமைக்க வராதுடி..😌ஆனாலும் நீ சூப்பர்டி இதே மாதிரி இன்னொரு தடவை...😬 ஏன் தினமும் இதை பண்ணிக் கொடுத்தாலும் மூன்று வேளை சாப்பிடுவேன்!

மனைவி : அய்யய்யோ என்னால முடியாதுப்பா...இதை மூனு தடவை சமைத்தால் நான் டயர்டா ஆகி விடுவேன்!😑

கணவன் : அதுலாம் ஒன்னும் டயர்டா ஆகாதுடி... சரி இதே மாதிரி ராத்திரிக்கு சமைத்து விடு😬

மனைவி : சரி வெளியே போய்ட்டு வரும்போது மறக்காம ரவை வாங்கிட்டு வாங்க! உங்களுக்கு உப்புமா பிடிக்காது என்று எங்க அம்மா கால் கிலோ தான் கொடுத்து அனுப்பினாங்க !

( அட சண்டாளன்! இந்த உப்புமாவுக்கு தான் இவ்வளவு அக்கப் போரா! முடியலைடா ! முடியலை! )

No comments:

Post a Comment