Tuesday, 4 August 2026

தகுதி உள்ள குடும்ப தலைவிகளுக்கு மட்டுமே உரிமைத் தொகை 1000 ரூபாய் வழங்கப்படும்!


குடும்ப தலைவி - ஹலோ சார் !! நான் MBA , BBA முடிச்சு இருக்கேன் ! இந்த தகுதி போதுமா சார் !!

அரசு அதிகாரி - உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதாம்மா ?

குடும்ப தலைவி - ஒரு வாட்டி ஆச்சு சார் !!

அரசு அதிகாரி - சரிம்மா !! வீட்டில் என்ன சமையல் இன்னைக்கு !!

குடும்ப தலைவி - தெரியலை சார் !! அவர் கிட்ட கேட்டா தான் தெரியும் ! வாரத்தில் ஆறு நாளும் அவர் சமையல் தான் !

அரசு அதிகாரி - அப்ப ஒரு நாள் நீங்க சமைப்பீங்களா !!

குடும்ப தலைவி - இல்லை சார் !! அன்னைக்கு அவருக்கு ரெஸ்ட் !! ஹோட்டலில் சாப்பிடுவோம் !! எல்லா நாளும் அவர் சாப்பாட்டை சாப்பிட்டா நாக்கு செத்திடும் இல்ல !!

அரசு அதிகாரி - அப்ப துணி துவைப்பதற்கு ஆள் வைத்து இருக்கீங்களாம்மா !!

குடும்ப தலைவி - இல்லை சார் !! செலவு மிச்சம் பண்ணனும் இல்ல !! அவர் துணியெல்லாம் வாஷிங் மெஷினில் துவைத்து விடுவார் !! என் துணியை மட்டும் அவர் கையிலே துவைத்து விடுவார் ! எல்லாம் விலை உயர்ந்தது இல்லை !!

அரசு அதிகாரி - அப்ப நீங்க ஒரு வேலையும் செய்வது இல்லை என்று சொல்லுங்க ,1000 ரூபாய் உங்க கணவருக்குத்தான் கொடுப்போம் !

No comments:

Post a Comment