Showing posts with label chennai. Show all posts
Showing posts with label chennai. Show all posts
Monday, 14 December 2015
Wednesday, 9 December 2015
சென்னை மழை....4
கடவுளை அறிந்தவர்
பல்லவி
பல்லவி
அவரே கடவுளை அறிந்தவராவர்
அனைவரும் மதித்திடத் தகுந்தவராவர் (அவரே)
அநுபல்லவி
துன்பப் படுவோர் துயரம் சகியோர்
துடிதுடித் தோடி துணைசெயப் புகுவார்
இன்பம் தனக்கென எதையும் வேண்டார்
யாவரும் சுகப்பட சேவைகள் பூண்டார் (அவரே)
சரணங்கள்
பசியால் வாடின எவரையும் பார்த்துப்
பட்டினி தமக்கெனப் பரிதபித் தார்த்து
விசையாய் முடிந்ததை விருப்புடன் கொடுப்பார்
வீண்உபசாரம் விளம்புதல் விடுப்பார் (அவரே)
நோயால் வருந்திடும் யாரையும் கண்டு
நோன்பெனச் செய்வார் எல்லாத் தொண்டும்
தாயாம் எனவே தம்சுகம் எதையும்
தள்ளிவைத் தருகினில் தானிருந் துதவும். (அவரே)
Labels:
chennai
Tuesday, 8 December 2015
சென்னை மழை....3
விதைச் சோளம்
ஆடி முடிஞ்சிரிச்சு
ஆவணியும் கழிஞ்சிரிச்சு
சொக்கிகொளம் கோடாங்கி
சொன்ன கெடு முடிஞ்சிருச்சு.
காடு காஞ்சிரிச்சு
கத்தாழை கருகிடிச்சி
எலந்த முள்ளெல்லாம்
எலையோட உதிஞ்சிருச்சு
.
வெக்க பொறுக்காம
றெக்க வெந்த குருவியெல்லாம்
வெண்காடு விட்டு
வெகுதூரம் போயிடிச்சி.
பொட்டு மழை பெய்யலையே
புழுதி அடங்கலையே
உச்சி நனையலையே
உள்காடு உழுகலையே
வெதப்புக்கு விதியிருக்கோ
வெறகாக விதி இருக்கோ
கட்டி வெச்ச வெங்கலப்ப
கண்ணீர் வடிச்சிருச்சு
காத்துல ஈரமில்ல
கள்ளியில பாலுமில்ல
எறும்பு குளிச்சேற
இரு சொட்டுத் தண்ணியில்ல
தெய்வமெல்லாம் கும்பிட்டு
தெசைஎல்லாம் தெண்டனிட்டு
நீட்டிப் படுக்கையிலே
நெத்தியில ஒத்த மழை
துட்டுள்ள ஆள தேடி
சொந்தமெல்லாம் வாரதுபோல்
சீமைக்குப் போயிருந்த
மேகமெல்லாம் திரும்புதையா!
வாருமையா வாருமையா
வருண பகவானே!
தீருமையா தீருமையா
தென்னாட்டுப் பஞ்சமெல்லாம்
ஒத்த ஏறு நான் உழுக
தொத்தப்பசு வச்சுரிக்கேன்
இன்னும் ஒரு மாட்டுக்கு
எவனப் போய் நான் கேட்பேன்.
ஊரெல்லாம் தேடி
ஏர்மாடு இல்லாட்டி
இருக்கவே இருக்கா என்
இடுப்பொடிஞ்ச பொண்டாட்டி
காசு பெருத்தவளே
கார வீட்டுக் கருப்பாயி
தண்ணிவிட்டு எண்ணயின்னு
தாளிக்கத் தெரிஞ்சவளே!
சலவைக்குப் போட்டா
சாயம் குலையுமின்னு
சீல தொவைக்காத
சிக்கனத்து மாதரசி
கால்மூட்ட வெதச் சோளம்
கடனாகத் தந்தவளே
கால் மூட்ட கடனுக்கு
முழு மூட்ட அளக்கறண்டி
ஊத்துதடி ஊத்துதடி
ஊசிமழை ஊத்துதடி
சாத்துதடி சாத்துதடி
சடசட சடையா சாத்துதடி
முந்தா நாள் வந்த மழை
மூச்சு முட்டப் பெய்யுதடி
தெச ஏதும் தெரியாம
தெர போட்டுக் கொட்டுதடி
கூர ஒழுகுதடி
குச்சிவீடு நனையுதடி
ஈரம் பரவுதடி
ஈரக் கொலை நடுங்குதடி
வெள்ளம் சுத்தி நின்னு
வீட்ட இழுக்குதடி
ஆஸ்தியில சரிபாதி
அடிச்சிக்கிட்டுப் போகுதடி
குடிகெடுத்த காத்து வந்து
கூர பிரிக்குதடி
மழைத் தண்ணி ஊறி
மண்சுவரு சரியுதடி.
நாடு நடுங்குதையா
நல்லமழை போதுமையா
வெத வெதக்க வேணும்
வெயில் கொண்டு வாருமையா.
மழையும் வெறிக்க
மசமசன்னு வெயிலடிக்க
மூலையில வச்சிருந்த
மூட்டையைப் போய் நான் பிரிக்க
வெதச் சோளம் நனஞ்சிருச்சே
வெட்டியா பூத்திருச்சே
மொளைக்காத படிக்கு
மொளைகட்டிப் போயிடிச்சே
ஏர் புடிக்கும் சாதிக்கு
இதேதான் தலையெழுத்தா?
விதிமுடிஞ்ச ஆளுக்கே
வெவசாயம் எழுதிருக்கா?
காஞ்சு கெடக்குதேன்னு
கடவுளுக்கு மனு செஞ்சா
பேஞ்சுக் கெடுத் திருச்சே
பெருமாளே என்ன பண்ண?
ஆவணியும் கழிஞ்சிரிச்சு
சொக்கிகொளம் கோடாங்கி
சொன்ன கெடு முடிஞ்சிருச்சு.
காடு காஞ்சிரிச்சு
கத்தாழை கருகிடிச்சி
எலந்த முள்ளெல்லாம்
எலையோட உதிஞ்சிருச்சு
.
வெக்க பொறுக்காம
றெக்க வெந்த குருவியெல்லாம்
வெண்காடு விட்டு
வெகுதூரம் போயிடிச்சி.
பொட்டு மழை பெய்யலையே
புழுதி அடங்கலையே
உச்சி நனையலையே
உள்காடு உழுகலையே
வெதப்புக்கு விதியிருக்கோ
வெறகாக விதி இருக்கோ
கட்டி வெச்ச வெங்கலப்ப
கண்ணீர் வடிச்சிருச்சு
காத்துல ஈரமில்ல
கள்ளியில பாலுமில்ல
எறும்பு குளிச்சேற
இரு சொட்டுத் தண்ணியில்ல
தெய்வமெல்லாம் கும்பிட்டு
தெசைஎல்லாம் தெண்டனிட்டு
நீட்டிப் படுக்கையிலே
நெத்தியில ஒத்த மழை
துட்டுள்ள ஆள தேடி
சொந்தமெல்லாம் வாரதுபோல்
சீமைக்குப் போயிருந்த
மேகமெல்லாம் திரும்புதையா!
வாருமையா வாருமையா
வருண பகவானே!
தீருமையா தீருமையா
தென்னாட்டுப் பஞ்சமெல்லாம்
ஒத்த ஏறு நான் உழுக
தொத்தப்பசு வச்சுரிக்கேன்
இன்னும் ஒரு மாட்டுக்கு
எவனப் போய் நான் கேட்பேன்.
ஊரெல்லாம் தேடி
ஏர்மாடு இல்லாட்டி
இருக்கவே இருக்கா என்
இடுப்பொடிஞ்ச பொண்டாட்டி
காசு பெருத்தவளே
கார வீட்டுக் கருப்பாயி
தண்ணிவிட்டு எண்ணயின்னு
தாளிக்கத் தெரிஞ்சவளே!
சலவைக்குப் போட்டா
சாயம் குலையுமின்னு
சீல தொவைக்காத
சிக்கனத்து மாதரசி
கால்மூட்ட வெதச் சோளம்
கடனாகத் தந்தவளே
கால் மூட்ட கடனுக்கு
முழு மூட்ட அளக்கறண்டி
ஊத்துதடி ஊத்துதடி
ஊசிமழை ஊத்துதடி
சாத்துதடி சாத்துதடி
சடசட சடையா சாத்துதடி
முந்தா நாள் வந்த மழை
மூச்சு முட்டப் பெய்யுதடி
தெச ஏதும் தெரியாம
தெர போட்டுக் கொட்டுதடி
கூர ஒழுகுதடி
குச்சிவீடு நனையுதடி
ஈரம் பரவுதடி
ஈரக் கொலை நடுங்குதடி
வெள்ளம் சுத்தி நின்னு
வீட்ட இழுக்குதடி
ஆஸ்தியில சரிபாதி
அடிச்சிக்கிட்டுப் போகுதடி
குடிகெடுத்த காத்து வந்து
கூர பிரிக்குதடி
மழைத் தண்ணி ஊறி
மண்சுவரு சரியுதடி.
நாடு நடுங்குதையா
நல்லமழை போதுமையா
வெத வெதக்க வேணும்
வெயில் கொண்டு வாருமையா.
மழையும் வெறிக்க
மசமசன்னு வெயிலடிக்க
மூலையில வச்சிருந்த
மூட்டையைப் போய் நான் பிரிக்க
வெதச் சோளம் நனஞ்சிருச்சே
வெட்டியா பூத்திருச்சே
மொளைக்காத படிக்கு
மொளைகட்டிப் போயிடிச்சே
ஏர் புடிக்கும் சாதிக்கு
இதேதான் தலையெழுத்தா?
விதிமுடிஞ்ச ஆளுக்கே
வெவசாயம் எழுதிருக்கா?
காஞ்சு கெடக்குதேன்னு
கடவுளுக்கு மனு செஞ்சா
பேஞ்சுக் கெடுத் திருச்சே
பெருமாளே என்ன பண்ண?
- கவிஞர் வைரமுத்து
வெள்ளத்தில் சென்னை வெள்ளம்
வடியாதென்பது வல்லவன் வகுத்தடா – வர்ணா
எம்மிடம் அருள் செய்யடா…
குடியேற இடம்தேடி
கூடாத செயல்செய்து
ஏரிகள் தூர்த்தோமடா – வர்ணா
இயற்கையிடம் தோற்றோமடா…
கால்வாய்க்கு வழியில்லை
நீர்போகப் பாதையில்லை
வீடுகள் மிதக்குதடா – நீயும்
தண்டித்தல் அறமல்லடா…
மழைவெள்ளம் வடியாமல்
மனம்நொந்த மக்களுக்கு
தாயுள்ளம் காட்டிடடா – வர்ணா
ரேஷனில் மழைபெய்யடா…
– சுரேஷ் காமாட்சி
Labels:
chennai
Monday, 7 December 2015
சென்னை மழை....2
கடுமையான சென்னை மழையால்
பாதிக்கப்பட்ட மக்கள் மழையை கோர்ட்டில்
கொண்டு சென்று நிறுத்தினால்,
மழை ‘பராசக்தி’ சிவாஜி பாணியில்
பேசியிருந்தால் எப்படி பேசியிருக்கும் என்று சிறிய
கற்பனை....
.
.
சிங்காரச் சென்னை. விசித்திரம் நிறைந்த
பல மழைகளைச் சந்தித்திருக்கிறது. புதுமையான
பல வெள்ளங்களைக் கண்டிருக்கிறது.
ஆகவே, நான் புதுமையான மழையும் அல்ல.
அடித்து வெளுக்கும் நான்
சர்வசாதாரண மழையும் அல்ல. இயற்கையோட
இயற்கையாக சராசரியாக வந்து போகி்ன்ற
வரப்பிரசாதம் நான்.
சென்னையிலே கனமழை
பொழிந்தேன். வெள்ளத்தை
விளைவித்தேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன்
இப்படியெல்லாம். நீங்கள்
எதிர்பார்ப்பீர்கள் நான்
இதையெல்லாம் மறுக்கப் போகிறேன் என்று.
இல்லை நிச்சயமாக இல்லை. கனமழை
பொழிந்தேன். உங்களை
வெள்ளத்தில் மிதக்க விட வேண்டும்
என்பதற்காக அல்ல. ஏரிகள், குளங்கள்
யுனிவர்சிட்டிகளாகவும்,
அபார்ட்மென்ட்டுகளாக மாறி விட்டதே
என்பதற்காக. வெள்ளத்தில் மிதக்க
விட்டேன். நீங்களெல்லாம் படகில்
ஒய்யாரமாக பயணம் செய்து
செல்பி எடுக்க வேண்டும் என்பதற்காக
அல்ல. நான் செல்ல வேண்டிய
இடங்களையெல்லாம் நயவஞ்சகர்கள்
ஆக்ரமித்து விட்டார்கள் என்பதற்காக.
உனக்கேன் இவ்வளவு அக்கறை. இயற்கையில்
யாருக்குமே இல்லாத அக்கறை என்று
கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநலம்
என்பீர்கள். என் சுயநலத்தில்
பொதுநலமும் கலந்திருக்கிறது.
உங்களிடம் இவ்வளவு திட்டு வாங்கிக்
கொண்டும் மீண்டும் மீண்டும்
பொழிந்து கொண்டிருக்கின்ற
ேனே என்னைப் போல.
என்னைக் குற்றவாளி குற்றவாளி
என்கின்றீர்களே.. இந்த குற்றவாளியின்
வாழக்கைப் பாதையில் சற்று தூரம் பின்னோக்கி
நடந்து பார்த்தால், நான் ஓடி வந்த
சென்னையின் ஏரி, குளங்கள் எவ்வளவு
என்று கணக்குப் பார்க்க முடியும்.
ஓடி வர பாதைகள் இல்லை என் வழியில்.
பிளாட்டுகள் நிறைந்திருக்கின்றன. ஏரிகளை விட்டு
வெளியேறியதில்லை நான். ஆனால்,
பிளாட்டுளை இப்போது தாண்டியிருக்கிறேன்.
சென்னை மக்களே.... என்னை திட்டுவதற்கு
முன்பாக நான் கூறுவதை தயவு செய்து
கேளுங்கள்.
மடிப்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை
இத்திருவிடத்திேல இருந்தவன் நான். இருக்க
ஒரு ஏரியா. இப்போது இருப்பது ஒரு ஏரியா.
இயற்கையின் தலையெழுத்துக்கு நான்
என்ன விதிவிலக்கா?
வக்கீல்: யார் செய்த தவறுக்காக நீ
கனமழை பொழிந்து விட்டு, நீயே
வக்கீலாக வாதாடுகிறாய்.
மழை: யார் வழக்கிற்குமில்லை. இதுவும் என்
வழக்குதான். என் சுயநலத்தில் கலந்துள்ள
பொதுநலவழக்கு. ஏரிகளையும்,
குளங்களை அழித்து விட்டு வீடுககள்,
அபார்ட்மென்ட், யுனிவர்சிட்டிகள் கட்டிய
ஆக்கிரமிப்பாளர்களுக்கு நான் புத்திய
புகட்ட நான் கனமழை பொழிந்ததில்
என்ன தவறு.
நான் கனமழை பொழிந்தது ஒரு
குற்றம். வெள்ளத்தில் மிதக்க விட்டது ஒரு
குற்றம். இத்தனைக் குற்றங்களுக்கும் யார்
காரணம்? என்னை சென்னை முழுவதும்
சுற்றித் திரிய விட்டது யார் குற்றம்?
இயற்கையின் குற்றமா? இல்லை இயற்கையை
ஓரங்கட்டி ஓராயிரம் ஏரிகள், குளங்களை
தூர்த்து வீடு கட்டிய மக்களின் குற்றமா?
ஏரிகள், குளங்களிலெல்லாம்
யுனிவர்சிட்டிகள் கட்டியது யார் குற்றம்? என்
குற்றமா? அல்லது நான் வரவே மாட்டேன்
என்று நினைத்து தூர்த்திய கயவர்கள் குற்றமா?
இக்குற்றங்கள் களையப்படும் வரை மழைகளும்,
ரமணர்களும் குறையப்போவதில்லை. இதுதான்
எனது பயணத்தில் எந்தப் பககம்
புரட்டிப்பார்த்தாலும் காணப்படும் பாடப்
பகுத்தறிவு,..
Labels:
chennai
Subscribe to:
Posts (Atom)









