Tuesday, 6 December 2022
Monday, 5 December 2022
யதார்த்தங்கள்
சாவியை நான் தொலைத்துவிட்டு, தண்டனையை பூட்டுக்குக் கொடுத்தேன்…
*வாசிக்காமல் வைத்திருப்பது, ஒரு புத்தகத்துக்குச் செய்யப்படும் மிகப் பெரிய வன்முறை!!
*எல்லாரையும் நம்புங்க, துரோகம் பழகிடும்.
யாரையுமே கண்டுக்காதீங்க, தன்னம்பிக்கை தானா வந்துடும் !!
*விசா இல்லாம வியட்நாம் வரைக்கும் கூடப் போயிடலாம்.
ஆனா , வேலை இல்லாம சொந்தக்காரன் வூட்டுக்கு மட்டும் போக முடியாது !!!!
*உயர உயரத்தான் நமக்கு மேல் எத்தனை பேர் உள்ளனர் என்று புரிகிறது!!
*பொருத்தமில்லாத ஜோடிகள் செருப்பாகக்கூட இருக்க முடியாது !!
*ஒவ்வொரு கைபேசியிலும் இருக்கின்றன, தொடர்புகொள்ள முடியாத ,ஆனாலும் அழித்துவிட மனமில்லாத எண்கள்!
*நேற்று வைத்த வாட்டர் பாட்டிலில் இருக்கும் தண்ணீர் மீது வரும் சந்தேகம், ஒரு வாரமாயிருக்கும் வாட்டர் கேன் தண்ணீர் மீது வருவது இல்லை!!
*சதுரங்கத்தில் கூட ‘மந்திரிகள்’ நேர் வழியில் பயணிப்பதில்லை!!
*‘சரியாக் கேட்க மாட்டேங்குது, அப்புறமாப் பேசுறேன்’ என்பது மட்டும் சரியாக் கேட்டுவிடுகிறது!
*சிறு வயதில் ஆம்லெட் ஆக முடியாமல் தப்பித்த முட்டைகள்தான் வளர்ந்தவுடன் தந்தூரி சிக்கன் ஆகிறது!
*ஆடுகள் ஆடுகின்றன! கோழிகள் குதிக்கின்றன! பல வீட்டின் குழம்புச சட்டியில் இன்று
Sunday, 4 December 2022
சோமாலியாவில் விழுந்த விண்கல்
சோமாலியாவில் விழுந்த ஒரு விண்கல்லை (Somalia meteorite) இரண்டாக வெட்டிப்பார்த்த ஆராய்ச்சியாளர்களுக்கு, அதனுள் ஒன்றல்ல, மொத்தம் இரண்டு அதிர்ச்சிகள் காத்திருந்தது!
அதென்ன அதிர்ச்சி? அந்த விண்கல்லிற்குள் அப்படி என்ன இருந்தது? இதோ விவரங்கள்
2 மீட்டர் அகலம்..
14 டன் எடை!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் கடந்த 2020 ஆம் ஆண்டில், கிழக்கு ஆப்பிரிக்காவில் (East Africa) உள்ள சோமாலியாவில் சுமார் 14 டன் எடையுள்ள ஒரு விண்கல் விழுந்தது.
சுமார் 2 மீட்டர் அகலம் கொண்ட அந்த விண்கல் (Meteorite) ஆனது, இதுவரை பூமியில் வந்து விழுந்த 9-வது மிகப்பெரிய விண்வெளி பாறை ஆகும். அதை ஆராய்ச்சி செய்யும் நோக்கத்தின் கீழ் விஞ்ஞானிகள் அதை வெட்டி உள்ளனர்!
காத்திருந்த "வேற்றுகிரக" சமாச்சாரம்! சோமாலியாவில் விழுந்த விண்கல்லை வெட்டி ஆராய்ச்சி செய்த போது அதில் 2 "வேற்றுகிரக" தாதுக்கள் ("Alien" Minerals) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேற்றுகிரக என்றதுமே ஏலியன் உலகத்தில் இருந்து வந்த தாதுக்கள் / கனிமங்கள்என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். சோமாலிய விண்கல்லிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு தாதுக்களும் / கனிமங்களுமே, இதுவரையிலாக பூமியில் கண்டுபிடிக்கப்படாத மினரல்கள் (New Minerals) ஆகும். எனவே தான் விஞ்ஞானிகள் அதை வேற்றுகிரக" தாதுக்கள் அல்லது கனிமங்கள் என்று குறிப்பிடுகின்றன!
ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சோதனைகளின் முடிவில், அதனுள் 2 புதிய தாதுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த புதிய தாதுக்களுக்கு - எலாலைட் (Elaliite) மற்றும் எல்கின்ஸ்டன்டோனைட் (Elkinstantonite) என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்னொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால், இந்த விண்கல்லில் இருந்து சாத்தியமான மூன்றாவது கனிமத்தை கண்டுபிடிக்கும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.


















