Thursday, 29 January 2026

எப்படி எல்லாம் சாப்பிடக்கூடாது










ஆசாரக் கோவை எனும் நூல் எப்படி எல்லாம் சாப்பிடக்கூடாது என ஒரு பட்டியல் தருகிறது.

"கிடந்து உண்ணார், நின்று உண்ணார்,

வெள்ளிடையும் உண்ணார்,

சிறந்து மிக உண்ணார், கட்டில்மேல் உண்ணார்,

இறந்து, ஒன்றும் தின்னற்க, நின்று!"

கிடந்து உண்ணார் = படுத்துக்கொண்டு சாப்பிடக்கூடாது

நின்று உண்ணார் = நின்றுக்கொண்டு சாப்பிடக்கூடாது

வெள்ளிடையும் உண்ணார் = வெட்ட வெளியில் இருந்து சாப்பிடக்கூடாது

சிறந்து மிக உண்ணார் = நன்றாக இருக்கிறது என்பதற்காக,நிறைய சாப்பிடக்கூடாது

கட்டில்மேல் உண்ணார் = படுக்கையின்மேல் அமர்ந்து சாப்பிடக் கூடாது

இறந்து = ஒரு, முறை இல்லாமல் (நேரம் காலம் பார்க்காமல்)

ஒன்றும் தின்னற்க,நின்று! = ஒன்றும் சாப்பிடக் கூடாது

மொத்தத்தில் உட்கார்ந்து, அளவோடு, நேரம் காலம் அறிந்து, சரியான இடத்தில் இருந்து உணவு உண்ண வேண்டும்..

MEMES OF THE DAY ( 29-01-2026 )

















 

உணர்வுசார் நுண்ணறிவு EQ

உணர்வுசார் நுண்ணறிவு பற்றி நண்பர் இன்னொரு பதிலில் அழகாக எடுத்துரைத்திருக்கிறார்.

இதை பற்றிய ஒரு ஜென் கதை ஒன்று படித்தேன். இது உணர்வு சார் நுண்ணறிவுக்கான விளக்கமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

இரண்டு ஜென் துறவிகள் காடு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது குறுக்கே ஆறு ஒன்று ஓடி கொண்டு இருந்தது. அதன் அருகில் பெண் நின்று கொண்டிருந்தார்.

ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருந்தது. அதை கடக்க என்ன செய்வதென்று யோசித்து கொண்டிருந்த பொழுது ஜென் துறவிகள் வருவதை பார்த்தார்.

என்னை எப்படியாவது அக்கரையில் விட்டு விடுங்கள் என்று உதவி கேட்டார்.

துறவிகளில் ஒருவர் பெண்ணிற்கு உதவி செய்ய யோசித்த பொது இன்னொரு துறவி அந்த பெண்ணை தூக்கி கொண்டு ஆற்றின் மறுபக்கத்தில் விட்டு விட்டார்.

உடனே அருகில் இருந்த இன்னொரு துறவி நமக்கு சொல்லி கொடுத்த ஆன்மிக பயிற்சியில் பெண்களுடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ள கூடாது என்று போதித்தார்கள் அல்லவா என்று கோபத்துடன் கேட்டார்.

உடனே அந்த துறவியின் இடத்தில் வேறு யாராவது இருந்தால் கோபமோ அல்லது தப்பு செய்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சிக்கு ஆளாகியிருப்பார்கள் .

ஆனால் அந்த துறவி பொறுமையாக நான் எப்பொழுதோ அவரை மனதில் இருந்து இறக்கி வைத்து விட்டேன். நீங்கள் மட்டும் தான் இன்னும் அதை பற்றியே நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கூறினார்.

உணர்ச்சிவசப்படாமல் சூழ்நிலையை கையாள வேண்டும் என்ற அறிவுரையை ஜென் துறவி நமக்கு போதிக்கிறார். அதோடு மட்டும் அல்லாமல் உதவி என்று கேட்கும் பொழுது மனு தர்மம் படி உதவியும் செய்ய வேண்டும் அதோடு துறவறம் பூண்டவர்கள் பெண்ணை பற்றிய எண்ணம் வளர்க்க கூடாது என்பதற்காக ஆற்றை கடந்த பின் மனதில் இருந்து இறக்கியும் வைத்துவிட்டார்.

கோபத்தையும் வெறுப்பையும் கூட நெடு நாள் மனதில் வைத்து கொள்கிறார்கள். அதையும் மனதில் இருந்து உரிய நேரத்தில் இறக்கி வைத்துவிட்டால் மனம் லேசாகிவிடும்.

தேள் கடியை விட...


 

எதார்த்தம் - நா முத்துக்குமார்

 எதார்த்தத்தை பேசும் கவிதைகள் இருக்கின்றனவா ?

நா.முத்துக்குமார் அவர்களின் கவிதை ஒரு sample

🍀மழை பெய்யா நாட்களிலும்

மஞ்சள் குடையோடு வரும்

ரோஜாப்பூ மிஸ்

வகுப்பின் முதல் நாளன்று

முன்பொரு முறை

எங்களிடம் கேட்டார்

"படிச்சு முடிச்சதும்

என்ன ஆகப் போறீங்க?"

_______

முதல் பெஞ்சை

யாருக்கும் விட்டுத் தராத

கவிதாவும் வனிதாவும்

"டாக்டர்" என்றார்கள்

கோரஸாக

இன்று

கல்யாணம் முடிந்து

குழந்தைகள் பெற்று

ரேஷன் கடை

வரிசையில்

கவிதாவையும்;

கூந்தலில் செருகிய

சீப்புடன்

குழந்தைகளை

பள்ளிக்கு வழியனுப்பும்

வனிதாவையும்

எப்போதாவது

பார்க்க நேர்கிறது.

________

"இன்ஜினியர் ஆகப்போகிறேன்"

என்ற எல்.சுரேஷ்குமார்

பாதியில் கோட்டடித்து

பட்டுத் தறி

நெய்யப் போய்விட்டான்.

_______

"எங்க அப்பாவுடைய

இரும்புக் கடையைப்

பாத்துப்பேன்"

கடைசி பென்ச்

சி.என்.ராஜேஷ்

சொன்னபோது

எல்லோரும் சிரித்தார்கள்.

இன்றவன்

நியூஜெர்சியில்

மருத்துவராகப்

பணியாற்றிக்கொண்டே

நுண் உயிரியலை

ஆராய்கிறான்.

_______

"பிளைட் ஓட்டுவேன்"

என்று சொல்லி

ஆச்சரியங்களில்

எங்களைத் தள்ளிய

அகஸ்டின் செல்லபாபு

டி.ன்.பி.ஸ்.சி. எழுதி

கடைநிலை

ஊழியனானான்.

____-___

"அணுசக்தி

விஞ்ஞானியாவேன்"

என்ற நான்

திரைப் பாடல்கள்

எழுதிக் கொண்டிருக்கிறேன்.

-_______

வாழ்க்கையின் காற்று

எல்லாரையும்

திசைமாற்றிப் போட,

"வாத்தியாராவேன்"

என்று சொன்ன

குண்டு சுரேஷ் மட்டும்

நாங்கள் படித்த

அதே பள்ளியில்

ஆசிரியராகப்

பணியாற்றுகிறான்.

"நெனைச்ச வேலையே

செய்யற,

எப்படியிருக்கு மாப்ளே?"

என்றேன்.

சாக்பீஸ் துகள்

படிந்த விரல்களால்

என் கையைப்

பிடித்துக்கொண்டு

"படிச்சு முடிச்சதும்

என்ன ஆகப் போறீங்க?

என்று மட்டும்

என் மாணவர்களிடம்

நான் கேட்பதே இல்லை! "

என்றான்.

கல்யாணத்துக்கு காசு மட்டும் குடுங்க...

 இன்று.

பெண்கள் இருவர்.

கல்யாணம் பன்ணனும் பணம் குடுங்க என ஒரு குயர் நோட்டுடன் வநத இரு பெண்கள்.

பாப்பா. ..எங்க பக்கம் ரெண்டு மூனு மாப்பிள்ளை இருக்காங்க..

ஒருத்தர் பேங்குல மேனேஜர்..தங்கமான பையன் என்ன கோசாலை பக்கம் அடிக்கடி போகும்.

இல்லீங்க வேணாம்.கல்யாணத்துக்கு காசு மட்டும் குடுங்க ..

இன்னொரு தம்பி அரிசிகடை வைச்சிருக்கு..எந்த கெட்ட பழக்கமும் இல்லாத பையன்.

இல்லீங்க வேணாம்.

கல்யாணத்துக்கு காசு மட்டும் குடுங்க

இன்னொரு சாமி ஸ்ரீரங்கமே கதியா கிடக்கும்.

இன்னொரு சார் ஏர்போர்ட்ல வயரிங் வேலை பாக்குறார்..

இல்லீங்க வேணாம்.

கல்யாணத்துக்கு காசு மட்டும் குடுங்க

பொட்டு தங்கம் போட வேணாம். கட்டுன புடவை சுடிதாரோடா வந்தாலே போதும் ..என்ன ஒகேவா.?

இல்லீங்க வேணாம்.

கல்யாணத்துக்கு காசு மட்டும் குடுங்க ..

கல்யாண செலவு கூட நீங்க பார்த்துக்க வேணாம்..எல்லாம் நம்மளே.

எங்க அம்மாவ விட்டுட்டு வர முடியாதுங்க.

உங்க அம்மாவையும் நல்லா வைச்சிகுவாங்கம்மா.. உனக்கு சம்மதம்னா சொல்லு அடுத்த முகூர்த்ததிலேயே கல்யாணம் முடிச்சிடலாம்..

இல்லீங்க வேணாம்

கல்யாணத்துக்கு காசு மட்டும் குடுங்க..

என்னம்மா சொன்னதையே சொல்லிட்டிருக்க..

நீ ஏன் தெரு தெருவா அலையறே ..கல்யாணத்துக்கு தானே காசு கேக்கறே..நாங்க கல்யாணமே பண்ணி வைக்கிறோமே.

வேணாங்க.

ஏம்மா..?

எங்க ஊட்டுகாருக்கு தெரிஞ்சா திட்டுவாரு..நான் கிளம்பறேன்.

அடி குந்தாணிகளா...

அன்பு பரிசு

 

 

இந்த கதை ஒரு கற்பனை கதை. காமெடிக்காக நினைத்து சிரிச்சுட்டு போயிடணும். செய்முறையில் ஈடுபடணும்னு தோணும் பல ஆண்களுக்கு! ஆனால் விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பேற்காது. ( ஆமாம்! பொறுப்பு துறப்பு போட்டுடுவோம்! இல்லாட்டி எந்த மக்களாவது, விவகாரத்தை கெளப்பி விட போவுதுங்க!☺️☺️)

ஒரு பணக்கார மாமனார், மாமியார். சொத்து முழுவதும் மாமியார் பெயரில். மூன்று மகள்கள். திருமணம் ஆகி விட்டது.

மாமியாருக்கு, தன் மருமகன்கள் தன் மேல் எவ்வளவு பாசம்(?) வைத்து இருக்கிறார்கள் என தெரிந்து கொள்ள ஆசை. முதல் மருமகனை அழைத்து, கொண்டு, பக்கத்தில் இருந்த ஆற்றில் போட்டிங் போனாள். தவறி தண்ணீரில் விழுந்த மாதிரி நடிக்க, மருமகன் பதறி போய், காப்பாற்றி, முதலுதவி செய்து, பத்திரமாக வீட்டில் விட்டான்.

அடுத்த நாள் அவன் வீட்டு வாசலில், பிராண்ட் ந்யூ கார், அன்பு மருமகனுக்கு, பரிசு! என்ற ஸ்டிக்கருடன் நின்று இருந்தது.

சில நாட்கள் கழித்து, இரண்டாவது மருமகனுடன் போட்டிங். இப்போதும் தவறி தண்ணீரில் விழுவது போல நடிக்க, இரண்டாவது மருமகனும் காப்பாற்றி, புத்தம் புது லேட்டஸ்ட் மாடல் காரை, பரிசாக மாமியாரிடம் இருந்து பெற்று கொள்கிறார்.

இன்னும் சில நாட்கள் கழித்து, மூன்றாவது மருமகனுடன் போட்டிங் செல்கிறார். வழக்கம் போல விழுந்து தத்தளிக்க, மருமகனுக்கு அதிர்ச்சி கலந்த ஆனந்தம். செத்து தொலை! பெண்ணையா பெற்று வச்சிருக்க? உன்னை மாதிரியே ராட்சசி மாதிரி! இது போன்ற இன்னொரு சந்தர்ப்பம் வரட்டும்! அவளையும், இங்கேயே தள்ளி, உனக்கு துணையாக அனுப்பறேன்னு! வீட்டுக்கு திரும்பிட்டான்.

மறுநாள் காலை! புத்தம் புது இம்போர்டட் கார் மூன்றாவது, மருமகனின் வீட்டு வாசலில்! மாமனாரின் அன்பு பரிசு! என்ற வாசகங்களுடன்!