இந்த கதை ஒரு கற்பனை கதை. காமெடிக்காக நினைத்து சிரிச்சுட்டு போயிடணும். செய்முறையில் ஈடுபடணும்னு தோணும் பல ஆண்களுக்கு! ஆனால் விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பேற்காது. ( ஆமாம்! பொறுப்பு துறப்பு போட்டுடுவோம்! இல்லாட்டி எந்த மக்களாவது, விவகாரத்தை கெளப்பி விட போவுதுங்க!☺️☺️)
ஒரு பணக்கார மாமனார், மாமியார். சொத்து முழுவதும் மாமியார் பெயரில். மூன்று மகள்கள். திருமணம் ஆகி விட்டது.
மாமியாருக்கு, தன் மருமகன்கள் தன் மேல் எவ்வளவு பாசம்(?) வைத்து இருக்கிறார்கள் என தெரிந்து கொள்ள ஆசை. முதல் மருமகனை அழைத்து, கொண்டு, பக்கத்தில் இருந்த ஆற்றில் போட்டிங் போனாள். தவறி தண்ணீரில் விழுந்த மாதிரி நடிக்க, மருமகன் பதறி போய், காப்பாற்றி, முதலுதவி செய்து, பத்திரமாக வீட்டில் விட்டான்.
அடுத்த நாள் அவன் வீட்டு வாசலில், பிராண்ட் ந்யூ கார், அன்பு மருமகனுக்கு, பரிசு! என்ற ஸ்டிக்கருடன் நின்று இருந்தது.
சில நாட்கள் கழித்து, இரண்டாவது மருமகனுடன் போட்டிங். இப்போதும் தவறி தண்ணீரில் விழுவது போல நடிக்க, இரண்டாவது மருமகனும் காப்பாற்றி, புத்தம் புது லேட்டஸ்ட் மாடல் காரை, பரிசாக மாமியாரிடம் இருந்து பெற்று கொள்கிறார்.
இன்னும் சில நாட்கள் கழித்து, மூன்றாவது மருமகனுடன் போட்டிங் செல்கிறார். வழக்கம் போல விழுந்து தத்தளிக்க, மருமகனுக்கு அதிர்ச்சி கலந்த ஆனந்தம். செத்து தொலை! பெண்ணையா பெற்று வச்சிருக்க? உன்னை மாதிரியே ராட்சசி மாதிரி! இது போன்ற இன்னொரு சந்தர்ப்பம் வரட்டும்! அவளையும், இங்கேயே தள்ளி, உனக்கு துணையாக அனுப்பறேன்னு! வீட்டுக்கு திரும்பிட்டான்.
மறுநாள் காலை! புத்தம் புது இம்போர்டட் கார் மூன்றாவது, மருமகனின் வீட்டு வாசலில்! மாமனாரின் அன்பு பரிசு! என்ற வாசகங்களுடன்!
No comments:
Post a Comment