Thursday, 29 January 2026

அன்பு பரிசு

 

 

இந்த கதை ஒரு கற்பனை கதை. காமெடிக்காக நினைத்து சிரிச்சுட்டு போயிடணும். செய்முறையில் ஈடுபடணும்னு தோணும் பல ஆண்களுக்கு! ஆனால் விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பேற்காது. ( ஆமாம்! பொறுப்பு துறப்பு போட்டுடுவோம்! இல்லாட்டி எந்த மக்களாவது, விவகாரத்தை கெளப்பி விட போவுதுங்க!☺️☺️)

ஒரு பணக்கார மாமனார், மாமியார். சொத்து முழுவதும் மாமியார் பெயரில். மூன்று மகள்கள். திருமணம் ஆகி விட்டது.

மாமியாருக்கு, தன் மருமகன்கள் தன் மேல் எவ்வளவு பாசம்(?) வைத்து இருக்கிறார்கள் என தெரிந்து கொள்ள ஆசை. முதல் மருமகனை அழைத்து, கொண்டு, பக்கத்தில் இருந்த ஆற்றில் போட்டிங் போனாள். தவறி தண்ணீரில் விழுந்த மாதிரி நடிக்க, மருமகன் பதறி போய், காப்பாற்றி, முதலுதவி செய்து, பத்திரமாக வீட்டில் விட்டான்.

அடுத்த நாள் அவன் வீட்டு வாசலில், பிராண்ட் ந்யூ கார், அன்பு மருமகனுக்கு, பரிசு! என்ற ஸ்டிக்கருடன் நின்று இருந்தது.

சில நாட்கள் கழித்து, இரண்டாவது மருமகனுடன் போட்டிங். இப்போதும் தவறி தண்ணீரில் விழுவது போல நடிக்க, இரண்டாவது மருமகனும் காப்பாற்றி, புத்தம் புது லேட்டஸ்ட் மாடல் காரை, பரிசாக மாமியாரிடம் இருந்து பெற்று கொள்கிறார்.

இன்னும் சில நாட்கள் கழித்து, மூன்றாவது மருமகனுடன் போட்டிங் செல்கிறார். வழக்கம் போல விழுந்து தத்தளிக்க, மருமகனுக்கு அதிர்ச்சி கலந்த ஆனந்தம். செத்து தொலை! பெண்ணையா பெற்று வச்சிருக்க? உன்னை மாதிரியே ராட்சசி மாதிரி! இது போன்ற இன்னொரு சந்தர்ப்பம் வரட்டும்! அவளையும், இங்கேயே தள்ளி, உனக்கு துணையாக அனுப்பறேன்னு! வீட்டுக்கு திரும்பிட்டான்.

மறுநாள் காலை! புத்தம் புது இம்போர்டட் கார் மூன்றாவது, மருமகனின் வீட்டு வாசலில்! மாமனாரின் அன்பு பரிசு! என்ற வாசகங்களுடன்!


மூன்று சட்னி

 நீதிபதி - வண்டு முருகன் ! உங்கள் கட்சிக்காரரின் குற்றச்சாட்டு என்ன!

கணம் நீதிபதி அவர்களே! என் வீட்டுக்காரர் ஆசையா தோசை சாப்பிட உட்கார்ந்து இருக்கார்! தோசைக்கு தொட்டுக்க என்ன என்று கேட்டு இருக்கார்! என் கட்சிக்காரர்!

அதற்கு அவர் மனைவி சொல்லி இருக்காங்க மூன்று வகையான சட்னி என்று! சொல்லி இருக்காங்க

நீதிபதி - ஒரு தோசைக்கு மூன்று சட்னி நல்லது தானே! இதில் என்ன புகார்!

நோ! யுவர் ஆனர் இங்க தான் அவங்க சூட்சமத்தை நீங்க புரிந்து கொள்ளணும்! அந்த மூன்று சட்னி!

நேற்று அரைத்த சட்னி!

அதற்கு முன்தினம் அரைத்த சட்னி!

அப்புறம் போன வாரம் அரைத்த சட்னி!

கொஞ்சம் என் கட்சிக்காரர் உஷாரா இல்லை என்றால் சட்னி அவர் கிட்னியை காலி செய்து இருக்கும் யுவர் ஆனர்!

மரபணு மாற்றப்படாத இயற்கை உணவு


 

விமர்சனத்திற்கு மூன்று காரணங்கள்


 

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - மூதுரை

 "கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே"

என்ற வரிகள் தான்.சிறுவயதில் பள்ளியில் இந்த வரியை படித்த நியாபகம்.

ஒளவையார் அருளிச்சென்ற மூதுரை நூட்பாவில் உள்ள இந்த வெண்பாவை முழுமையாக இந்த பதிவில் விளக்க கடமைப்பட்டுள்ளேன்.

வெண்பா:

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்

நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்.

பதவுரை:

அட்டாலும் - காய்ச்சினாலும் (அடுதல் - காய்ச்சுதல்)

பால் சுவையில் - பால் தன் சுவையிலிருந்து

குன்றாது - குறையாது

அளவளாய் - மனம் கலந்து

நட்டாலும் - நட்பு செய்தாலும்

நண்பு அல்லார் - அன்பு இல்லாதவர்

நண்பு அல்லர் - நண்பர் ஆகார்

கெட்டாலும் -வறுமை நிலை அடைந்தாலும் (செல்வ நிலை கெட்டாலும்)

மேன்மக்கள் - குணத்தில் உயர்ந்தவர்கள்

மேன்மக்களே - குணத்தில் உயர்ந்த மேன்மக்களாகவே இருப்பர்

சங்கு சுட்டாலும் - சங்கை தீயில் சுட்டாலும்

வெண்மை தரும் - வெண்மை நிறத்தையே கொண்டிருக்கும்.

பொருளுரை:

எவ்வளவு காய்ச்சினாலும் பால் தன் சுவையிலிருந்து குறையாது. சங்கினை எவ்வளவு தீயில் சுட்டாலும் தனது தன்மையான வெண்நிறம் மாறாது. அதுபோல், தன் செல்வ நிலை கெட்டு வறுமை நிலையை அடைந்தாலும் மேன்மை குணம் கொண்ட உயர்ந்தவர்கள், குணத்தில் உயர்ந்த மேன்மக்களாகவே இருப்பர்; எவ்வளவு மனம் கலந்து நட்பு கொண்டாலும் அன்பு இல்லாதவர்கள் நண்பர்களாக மாட்டார்கள்.

பழமொழி நானூறு





 

சுபாஷித ரத்னாவளி