28-3-2022
அருட்தந்தையின் உலக
அமைதி வேள்வி தினம்.
"ஆன்மீகம்"
உடல் மன நல வாழ்வுக்கு
கடவுளை(தெய்வத்தை)
அறிந்து வணங்குவது ஆனமீகம்.
அறியாமல் வணங்குவது பக்தி.
கடவுளுக்கு உருவமில்லை என்பதையும் அதுதான் அனைத்தையும் ஆக்கும்
அறிவாகவும், இயக்கும் ஆற்றலாகவும், எக்காலத்திலும் நிலைத்து ஊனக்கண்
பார்வைக்கு மறைவாகவும்
உள்ளது என்று அனைத்து
மதங்களும் கூறுகின்றன.
ஊனக்கண் பார்வைக்கு மறைவாக உள்ள தெய்வநிலையை அறிந்ததும்,
அதுவே உடல் நலத்திற்குக் காரணமான உயிர்ச்சக்தியாகவும்,
மன நலத்திற்குக் காரணமான அறிவாகவும் செயல்படுவது
தெளிவாக விளங்கிவிடும்.
அக்கடவுளை வணங்கும்
மனிதன், உடலை சீராக இயக்குவதற்குத் தேவையான
சக்தியையும் மனதை சீராக இயக்குவதற்குத் தேவையான
நல்லறிவையும் கடவுள்
அருளாகப் பெற்று விடுகிறான்.
தனக்கும் பிறருக்கும் துன்பம்
விளைவிக்காமலும்,
தனக்கும் பிறருக்கு துன்பம் போக்கியும் வாழும்
அன்பும் மனிதனுக்கு மலர்ந்துவிடும்.
உடலில் நோயும், மனதில்
பொருள், புகழ், செல்வாக்கு
மற்றும் புலனின்ப ஆசையும்
அற்று மனிதகுலம்
அமைதியாக வாழும்.
அமைதியான வாழ்வுக்கு
தெய்வத்தை அறிந்து வணங்கும் ஆன்மீகம் தழைக்கவேண்டும்.
"தெய்வநிலை அறியாமல்
திகைக்கும் மக்கட்கெல்லாம் தெளிவாக இறையுணர”
அருட்தந்தை வேதாத்திரி
மகரிஷி அவர்களால்
வடிவமைக்கப்பட்டுள்ள
எளியமுறை யோகக்கலையே
“மனவளக்கலை"(SKY).
இன்று (28-3-2022)
அருட்தந்தை அவர்களின்
உடல் மறைந்த நாள்.
இந்நாளில் ஆசானின்
வழியில் மக்களுக்கு ஆன்மீக
அறிவு விளக்கேற்றும்
அருட்தொண்டினை
தொடர்ந்து ஆற்றிட முனைவோம்.
To see old post click here
வாழ்க வேதாத்திரியம்! வளர்க அருட்தொண்டு ! வாழ்க வளமுடன் !
No comments:
Post a Comment