கஜ்ஜாயம் செய்முறை
மாவிளக்கு செய்முறைக்கு நன்றி கூறிய சில நண்பர்கள் அப்படியே கஜ்ஜாயம் செய்வது எப்படி எனக் கேட்டிருக்கின்றார்கள். அம்மா அதையும் டைரியில் எழுதியுள்ளார்கள்.
தேவை:
அரிசி - 1 படி
வெல்லம் - அதிக பட்சம் முக்கால் கிலோ
ஏலக்காய் - சிறிது
எண்ணெய் - கடலை அல்லது நெய் - அரை கிலோ
அரிசியை ஊறவைத்து வெல்லத்துடன் சேர்த்து நைசாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஏலக்காயை போடி செய்து சேர்க்க வேண்டும். வாணலியில் நெய் அல்லது எண்ணெய் காய்ந்து பிறகு சிறிது சிறிதாக மாவை ஊற்றி பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்துவிட வேண்டும்.
you tube லும் இதன் ரெசிபி பல இருக்கின்றது.
கோதுமை, ரவா போன்றவற்றில் கஜ்ஜாயம் செய்வது பற்றி நிறைய பதிவுகள் உள்ளன.
No comments:
Post a Comment