Tuesday, 22 March 2022

வட துருவத்தில் வேதாத்திரியம்

 

Ishan @ our house


Ishan @ our house

Ishan with me @ Temple of Consciousness 

இரண்டு ஆண்டுகளுக்குமுன் கனடா நாட்டிலிருந்து எனக்கு அலைபேசியில் அழைப்பு வந்திருந்தது. திரு இஷான் அப்துல்லா என்ற இலங்கைத் தமிழர்   தனக்கு மனவளக்கலை பயிலவேண்டும் என்று கேட்டதின்பேரில் கனடாவில் எனக்குத் தெரிந்த பல மனவளக்கலை அருள்நிதியர்களின் தொடர்பு முகவரிகளையும், அலைபேசி எண்களையும் அவருக்குத் தந்தேன். 

அப்போது அவர் " நான் கனடா நாட்டின் வடகிழக்கு அல்பெர்ட்டா மாவட்டத்தின் கோடியில் உள்ளேன். இங்கிருந்து நீங்கள் தெரிவித்த நபர்கள் எல்லோரும் கிட்டத்தட்ட 4000  கி.மீ. தொலைவில் உள்ளனர். நான் இருக்கும் பகுதி வடதுருவத்திற்கு அருகில் என எடுத்துக்கொள்ளலாம் " எனச் சொல்லி உதவி கேட்டார். அப்போது online வகுப்புகள் துவக்கப்பட்டிருந்ததால் அதில் அவரைச் சேரச் சொல்லி தகவல்கள் கொடுத்தேன்.  மிகவும் ஆர்வமாக மண்வளக்களைப் பயிற்சிகளைத் தெரிந்துகொண்டு online யிலேயே  அகத்தாய்வு பயிற்சிகளையும் நிறைவு செய்துவிட்டு practical வகுப்புகளுக்காக பத்து நாட்களுக்குமுன் திருச்சி வந்திருந்தார். இங்கு எல்லா practical வகுப்புகளையும் நிறைவு செய்தார். you tube மூலமாகவும் மகரிஷி அவர்களின் உரைகளைக் கேட்டு தேர்ந்த மனவளக்கலைஞராகவே மாறிவிட்டார். 

கடந்த வாரம் ஆழியாருக்குச் சென்று ஐந்து நாட்கள் அடிப்படைப் பயிற்சிகளை முறையாகவும் கற்றுக் கொண்டார். 

இஸ்லாம் வகுப்பினராக இருந்தாலும் மகரிஷி அவரை ஆட்கொண்டுவிட்டார் என்பதை அவரது சொல்லிலும், செயலிலும் கண்டேன்.

நேற்று நடைபெற்ற திருச்சி மண்டலத்தின் 25 வது கிராமிய சேவைத் திட்ட துவக்க விழாவிற்கு அவரை அழைத்து சென்றோம். மிகுந்த மன நிறைவோடு இன்று காலை ஸ்ரீலங்கா சென்று சில நாட்கள் அங்கிருந்துவிட்டு கனடா செல்வதாக கூறினார்.

வடதுருவத்தில் அருகில் அவர் வாழும் இடத்தில் பொதுவாக மைனஸ் 50 டிகிரி செல்ஷியஸிலிருந்து மைனஸ் 65 டிகிரி வரை தட்பநிலை இருக்குமாம். சூரியன் ஒன்றிரண்டு மாதங்கள்தான் பார்க்கமுடியுமாம்.. இப்படிப்பட்ட இடத்தில் அவர் ஒரு தவமையம் துவக்க இருப்பது மிகப் பெரிய சாதனை. அவரை வாழ்த்தி வழியனுப்பினோம். 

அடுத்து அண்டார்டிகாவில் அறிவுத் திருக்கோயில்!

Ishan@our house

Ishan with Mala @ Trichy Zone's 25th Village 

Ishan honoured by VSP Director @ 25th Village


No comments:

Post a Comment