அம்மாவின் நினைவு வரும்போதெல்லாம் அம்மாவின் டைரியை கையில் வைத்துக்கொண்டு சிறிது நேரம் அமர்ந்திருப்பேன். கண்களிலிருந்து நீர் வழிந்தாலும் அந்த நேரம் அளவில்லா ஆற்றலை, அமைதியைத் தரும்.
அம்மா பற்றி பத்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய பதிவு கீழே உள்ள linkல்
அதில் குறிப்பிட்டிருக்கும் என் மகன் ஸ்ரீராமிற்காக அம்மா எழுதிய டைரியில் கீழ் கண்டவாறு குறிப்பிட்டிருந்தேன் :
"ஸ்ரீராமுக்கு கல்யாணம் நடக்கும்போது தான் இருக்கமாட்டேன் என்று உணர்ந்து ஒரு பெரிய டைரி முழுதும் வரப்போகும் ஸ்ரீராம் மனைவிக்காக குடும்ப வரலாறு, உறவு முறைகள், பண்டிகைகளுக்கு படைக்கும் முறைகள், வீட்டுக் குறிப்புகள், கோலங்கள் என தன கைப் பட எழுதி கொடுத்திருக்கின்றார்கள்."
இன்னும் அவனிடம் இந்த டைரி சேர்ப்பிக்கப்படவில்லை. விரைவில் அவனிடம் இதனைத் தர இருக்கின்றேன். அதற்குள் இந்த டைரியில் இருக்கும் உபயோகமுள்ள வீட்டுக் குறிப்புகள், மருத்துவ குறிப்புகள் போன்றவற்றை இங்கு பதிவிட விரும்புகின்றேன்.
அம்மாவின் டைரியிலிருந்து ஒரு sample பக்கம் -
(தான் பிறந்ததிலிருந்து தன் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளை எழுதி வைத்துள்ளார்கள். என் பெரியண்ணா, பெரியக்கா மற்றும் சின்னண்ணா பிறப்பு பற்றிய விவரங்களை இதில் காணலாம். ஸ்ரீராமிற்காக அவனது ஐந்தாம் வயதில், அம்மா தன்னுடைய 74ம் வயதில் ( 1988ம் ஆண்டு ) அம்மா இந்த டைரியை எழுதியுள்ளார்கள் )
அம்மாவின் எழுத்து எப்போதுமே தெளிவாக, அடித்தல், திருத்தம் இன்றி இருக்கும். ஆனால் முற்றுப்புள்ளிகள் ஒரு வாக்கியத்தில் பல இடங்களில் இருக்கும்.
இந்த டைரியில் உள்ள அனைத்தையுமே பதிவிட ஆசை - அவ்வப்போது
முக்கியமானவற்றை பதிவிடுகின்றேன்.
No comments:
Post a Comment