Monday, 14 March 2022

சிலேடை

 


அடி நந்தி சேர்தலால் ஆகம் வெளுத்துக்
கொடியும் ஒரு பக்கத்தில் கொண்டு — வடிவுடையமாசுணத்தைப் பூண்டு வளைத்தழும்பு பெற்றதனால்பூசுணிக்காய் ஈசனைப் போன்று.


பொருள்

 பூசணிக்காய்க்கு அடியில் காம்பு உடையது. 

மேல் பாகம் வெள்ளை நிற சாம்பல் பூசப்பட்டது போல இருக்கும். 

கொடியில் படர்வது. வளைந்த தழும்புகளுடன் அதன் உடல் இருக்கும்.

(மாசுணம்=சாம்பல்).

சிவன் தன் கால்களை நந்தியின் மீது (காளைவாகனம்) வைத்திருப்பார். 

திரு நீறு பூசி உடல் வெளுப்பாகக் காணப்படுவார். 

பூங்கொடி போன்ற உமை அம்மையை ஒருபுறம் வைத்திருப்பவர். 

வளைந்த பாம்பை (மாசுணம்=பாம்பு) அணிந்தவர். 

அம்மையின் வளைத் தழும்பை உடலில் தாங்கியவர். 

ஆகையால் பூசணிக்காயும் சிவனும் ஒன்றே!!

No comments:

Post a Comment