Mala, Amma & Sri |
முதலில் அம்மாவின் டைரியிலிருக்கும் சில விசேட சமையல் குறிப்புகளை பதிவிட்டுவிட்டு மற்றவைகளை தெரிவிக்கின்றேன்.
அல்கா பலகாரம் என்பது எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டவே திட்டாது...சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம்...அலுக்கவே அலுக்காது என்பதால் இந்த பெயர்.
பிள்ளைப் பேற்றிற்காக அம்மா வீட்டிற்கு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்காக உறவினர்கள் இதை செய்து கொடுப்பார்கள்.
இதை செய்வதற்கு தேவையானப் பொருட்கள் :
ஜீனி - 1 கிலோ
தேங்காய் - 1
புழுங்கல் அரிசி - 250 கிராம்
ஏலக்காய், நெய் - தேவையான அளவு
செய்முறை :
புழுங்கல் அரிசியை நன்றாக ஊறவைத்து தேங்காய்த் துருவலுடன் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு ஆதி கனமானப் பாத்திரத்தில் இந்த கலவையைவிட்டு ஜீனியைச் சேர்த்து விடாமல் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். அல்வா பதத்திற்கு வந்தவுடன் நெய் ஊற்றி இறக்கி ஏலக்காய் பொடி சேர்க்க வேண்டும். ஒரு தட்டில் நெய் தடவி நன்கு எந்திருக்கும் இந்த கலவையை ஊற்றி பரவலாகத் தட்டிவிட வேண்டும்.
இதனை பிறகு வட்டமாகவோ அல்லது நமக்கு பிடித்த வடிவில் வெட்டி சாப்பிட்டு மகிழலாம்.
No comments:
Post a Comment