Saturday, 19 March 2022

நம்பிக்கை

@ White House in front of Kennedy's portrait


அமெரிக்க ஜனாதிபதியாகப் புகழுடன் விளங்கியவர் ஜான் எஃப் கென்னடி.

அவர் வெள்ளை மாளிகையில் தம்மைக் கான வந்திருக்கும் பார்வையாளர்களுடன் நாள் தோறும் சில நிமிடங்கள் செலவிடுவார்

.தம்மை பார்க்க வந்திருந்த இளைஞர்கள்,பள்ளி மாணவர்களுடன் சிறிது நேரம் பேசுவார்.

ஒருநாள் பளிச்சென்ற புன்னகையுடன் இருந்த மாணவன் கன்னத்தைத் தட்டி, "உன் எதிர்கால லட்சியம் என்ன?" என்றார் கென்னடி.




"இன்று நீங்கள் இருக்கும் இடத்தில் நாளை நான் இருக்கவேண்டும்.இதுதான் என் இலட்சியம்" என்று அசராமல் பதில் சொன்னான் அந்தச் சிறுவன்.

விழிகளை உயர்த்திவிட்டு "நல்லது" என்று வாழ்த்திவிட்டுகென்னடி நகர்ந்தார்.




அமெரிக்க ஜனாதிபதி ஆவதுதான் லட்சியம் என்ற அந்தச் சிறுவன் பிற்காலத்தில் அப்படியே ஆனான்.அவர் வேறுயாருமல்ல...... அவர்தான் புகழ்பெற்ற பில்கிளிண்டன்.

No comments:

Post a Comment