பல நண்பர்கள் கிராமீய சேவைத் திட்டத்தைப் பற்றி விரிவாக தெரிவிக்க சொல்லியிருந்தால் இந்த பதிவு :
நமது தேசத் தந்தை மஹாத்மா காந்தி அவர்கள் இந்தியாவின் ஆன்மா கிராமங்களிலே இருக்கின்றது என்கிறார். சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுவதற்குமுன் அவர் இந்தியா முழுதும் பயணம் செய்தார். அவர் கிராமம்தோறும் ஆசிரமங்கள் அமைத்து கிராம மக்களுக்கு உதவ பெரிதும் விரும்பினார். அவரால் இரண்டே இரண்டு ஆசிரமங்கள்தான் உருவாக்கப்பட்டன. ஒன்று சபர்மதி மற்றது வார்தா. இந்திய விடுதலைக்காக முழுதும் தன்னை ஒப்படைத்ததால் அவர் கனவு இரண்டே இரண்டு கிராமங்களில் மாத்திரம்தான் செயல்படுத்தப்பட்டது.
மகரிஷி அவர்கள் தனி மனித அமைதிதான் உலக அமைதிக்கு வழிகோலும் என்ற முடிவில் உலக மக்கள் அனைவருக்கும் ஏற்றவகையில் மனவளக்கலை பயிற்சிகளை நெறிப்படுத்தி அமைத்தார்கள். கிராம மக்களுக்கு இந்த பயிற்சிகள் சென்றடையவேண்டும் என்ற அவரது இலக்கு கடந்த 2012ம் ஆண்டு துவக்கப்பட்டு இன்று 235 கிராமங்களில் பயிற்சிகள் தரப்பட்டு இந்த கிராமங்கள் அமைதியான மற்றும் ஆரோக்கியமான கிராமங்களாகத் திகழ்கின்றன.
கிராமிய சேவைத்திட்டத்தின் இலக்கு
சுற்றுப்புற சுகாதாரம்
நோயற்ற வாழ்வு
முதியோரை பாதுகாத்தல்
குடும்ப அமைதி
சமுதாய விழிப்புணர்வு
கல்வியில் மேன்மை
மனிதநேயம்
மத நல்லிணக்கம்
அமைதியான கிராமம்
No comments:
Post a Comment