Tuesday, 31 May 2022

ராமாயண குட்டிக் கதைகள் .....1

 

ராவணனை ராமன் வென்றதும், வானரப்படைகள் இலங்கையிலிருந்து புறப்படத் தயாராயினர். படைவீரர்கள் எல்லாரும் இருக்கிறார்களா என்று சரி பார்க்கும்படி சேனாதிபதியிடம் ராமர் உத்தரவிட்டார். ஒரு வானரம் மட்டும் காணாமல் போயிருப்பது தெரிந்தது.


“சுவாமி.... வசந்தன் என்னும் வானரம் மட்டும் எங்கு சென்றது என்று தெரியவில்லை” என்றார் சேனாதிபதி.

ஆஞ்சநேயரை அழைத்த ராமர், “காணாமல் போன வசந்தனைக் கண்டுபிடிப்பது உன் பொறுப்பு” என்றார்.

ஆஞ்சநேயர் எங்கு தேடியும் வசந்தன் தென்படவில்லை. இறுதியாக எமலோகத்தில் வசந்தன் இருப்பது தெரிய வந்தது.

எமலோகம் சென்ற ஆஞ்சநேயர், “எமதர்மா... வசந்தன் எப்படி இங்கு வந்தான்?” என்று கேட்டார். 

எமதர்மன் பணிவுடன், “சுவாமி... கோபம் கொள்ளாதீர்கள். பூலோகத்தில் உள்ள அனைவரும் உமது புகழைக் கேட்டு மகிழ்கிறார்கள். அதைக் கேட்கும் ஆசை எனக்கும் வந்தது. நான் பூலோகம் வந்தால், என் பார்வை பலத்தால் பலரும் எமலோகம் வர வேண்டிய சூழல் உண்டாகி விடும். அதனால் வசந்தனை மட்டும் வரவழைத்து, உமது அருமை பெருமையைக் கேட்டு மகிழ்ந்தேன்,” என்ற எமன் அவனை விடுவித்தான். ஆஞ்சநேயர் வசந்தனுடன் பூலோகம் வந்து சேர்ந்தார். வானரங்கள் மகிழ்ச்சியில் குதித்தனர்.

No comments:

Post a Comment