Wednesday 25 May 2022

அம்மாவின் டைரியிலிருந்து ...... 6

 

பூஜைக்கு உரிய மலர்கள் எவை?

விஷ்ணு சம்பந்தப்பட்ட தெய்வங்களுக்கு மட்டும் துளசி தளத்தால் பூஜை செய்யலாம். சிவன் சம்பந்தப்பட்ட ஈஸ்வரர்களுக்கு வில்வார்ச்சனை விசேஷம்.


தும்பை, வெள்ளெருக்கு, கொன்றை, ஊமத்தை கொண்டு அர்ச்சிக்கலாம். 

விநாயகர் சதுர்த்தி தவிர மற்ற நாட்களில் பிள்ளையாருக்கு துளசி கூடாது.

சிவனுக்குத் தாழம்பூ கூடாது.

விஷ்ணுவுக்கு அட்சதையால் அர்ச்சனை கூடாது.

லட்சுமிக்குத் தும்பை கூடாது.

சரஸ்வதிக்கு பவளமல்லி கூடாது.

துளுக்க சாமந்திப்பூ அர்ச்சனைக்கு ஏற்றதல்ல.

மலரை இதழ் இதழாக அர்ச்சனை செய்யக்கூடாது.

வாடிப்போன, அழுகிப்போன, பூச்சி கடித்த, முடி, புழு கொண்ட, காய்ந்த, நுகர்ந்த, தரையில் விழுந்த மலர்களை அர்ச்சனைக்கு உபயோகிக்கக் கூடாது. ஒருமுறை சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை எடுத்து மீண்டும் அர்ச்சனை செய்யக்கூடாது. ஆனால் துளசி, வில்வம் ஆகியவற்றை மீண்டும் உபயோகிக்கலாம். அன்று மலர்ந்த பூக்களை அன்றே உபயோகிக்க வேண்டும். விதிவிலக்கு தாமரை போன்ற நீரில் தோன்றும் மலர்கள். செண்பக மொட்டு தவிர, மற்ற மலர்களின் மொட்டுக்கள் பூஜைக்கு உகந்தவை அல்ல.

துளசி, மகிழம், செண்பகம், தாமரை, வில்வம், மருக்கொழுந்து, மருதாணி, அருகு, நாயுருவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலைகள் பூஜைக்கு உரியவை

No comments:

Post a Comment