Monday, 9 May 2022

வெற்றி பெற

 வெற்றி பெற முயற்சி செய்'' (Motivate to win)

 என்ற நூலின் ஆசிரியர் ரிச்சர்டு டென்னி

 "நொண்டிச்சமாதானங்களைத் தவிர்த்துத் தீவிர முயற்சிகளை மேற்கொள். வெற்றி நிச்சயம்என்கிறார்.

 அவர் மேலும் தமது நூலில் வெற்றியாளனின் மனோபாவமும்தோல்வியாளரின் அவநம்பிக்கைச் சிந்தனைகளும் பின்வரும் குறிப்பிட்ட வகைகளில் வேறுபடுகின்றன என்கிறார்.

1. வெற்றி பெற்றவன் தவறு செய்தால், ""நான் தவறு செய்தேன்'' என்றான். தோல்வியாளன் "" அது என் பிழை அல்லா'' என்கிறான்.

2. வெற்றியாளன் கடுமையாக உழைக்கிறான். நிறைய நேரமும் இருக்கிறது. தோல்வியாளன் எப்போதும் தான் பிசியாக இருப்பதாகச் சொல்லி தோல்வி காண்கிறான்.

3. வெற்றியாளன் பிரச்னையின் நடுவில் மத்தியில் செல்கிறான். தோல்வியாளன் நகராமல் பிரச்னையைச் சுற்றி நின்று கொண்டிருக்கிறான்.

4. வெற்றியாளன் தவறு நேர்ந்ததற்கு வருந்துகிறான். தவறைத் தவிர்க்கிறான். தோல்வியாளன் தவற்றுக்கு "சாரி சொல்கிறான். ஆனால் மீண்டும் அதே தவறைச் செய்கிறான்.

5. எது குறித்துப் போராட வேண்டும். எந்த விஷயத்தில் சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்று அறிந்தவன் வெற்றியாளன். சமாதானம் செய்து கொள்ள வேண்டிய இடத்தில் சண்டையும்சண்டை செய்ய வேண்டிய விஷயத்தில் ஒதுங்கி நின்று இழப்பும் ஏற்படுத்திக் கொள்வது தோல்வியாளனன் வழக்கம்.

ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் போராட்டம்தான் - சரியான விஷயங்களுக்குக்காகப் போராடுவதும்அற்ப விஷயங்களில் நேரத்தை வீணாக்காமல் இருப்பதும் முக்கியம்.
6. வெற்றியாளன் சொல்வான் ; ""நான் திறமையானவன்ஆனால் இன்னும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்'' தோல்வியளாளன் சொல்வான் "" நான் மற்றவர்களை விட ஒன்று மோசமானவன் இல்லை'' .

7. வெற்றியாளன் இன்னும் முன்னேறிச் செல்ல நினைக்கிறான். தோல்வியாளன் தனக்குக் கீழே உள்ளவர்களைப் பார்த்துக் கர்வம் கொள்கிறான்.

8. வெற்றியாளன் தன் மேலதிகாரிகளை மதிக்கிறான். அவர்களிடமிருந்து பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ள விரும்புகிறான். தோல்வியாளன் தன் மேலதிகாரிகளை வெறுக்கிறான். அவர்களிடம் தவறு கண்டுபிடிக்க முனைகிறான்.

9. வெற்றியாளன் சொல்கிறான்: "" இந்த வேலையைச் செய்து முடிக்க ஒரு நல்ல வழி இருக்கக்கூடும். தோல்வியாளன் சொல்கிறான். ""ஏன் மாற்ற வேண்டும்'? அப்படித்தான் இது வரையில் எல்லோரும் செய்து வந்திருக்கிறார்கள்''

வெற்றிதோல்வி என்பவை அவரவர் நல்ல மனப்பான்மையையும்சிந்தனைத் தெளிவையும் போட்டிகளில் முன்னதாக வர வேண்டும் என்கிற தணியாத ஆர்வத்தையும் பொறுத்து அமைகின்றன.

No comments:

Post a Comment