Tuesday, 24 May 2022

சுயமுன்னேற்ற நூல்கள் சொல்வதென்ன ?

 


1. உங்களுடைய இலட்சியக் கனவு எது என்று முடிவு செய்யுங்கள்.

உங்களின் வெற்றியும், மகிழ்ச்சியும் உங்கள் கைகளில்தான். வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டிருப்பதுதான் ஒவ்வொரு வெற்றியாளரும் வெற்றிபெரும் ரகசியமாகும்.

2. திட்டமிடுங்கள்

இலக்கை நிர்ணயிப்பதால் 100 / 100 வெற்றி பெறலாம். வெற்றியை அடைய செயல்முறைத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

3. தடைக்கற்கள்

உங்களுடைய இலட்சிய கனவு நிறைவேற, உங்களூடைய உடனடி தேவைகளை தியாகம் செய்யத் தயாராக இருக்கிறீர்களா?

4. வலிமையான அஸ்திவாரத்தின் மேல் உங்கள் இலட்சியக் கனவை கட்டுங்கள்.

உங்கள் இலட்சியக் கனவு பாதியிலேயே, பெட்ரோல் இல்லாத கார் போல நின்று விடக்கூடாது. வெற்றி என்பது சாதிக்க வெண்டும் என்று இதயத்தில் கொழுத்து விட்டு எரியும் அக்னியின் பிரதிபலிப்பாகும்.

5. சீரான வேகத்தைக் கடைபிடியுங்கள்

வெற்றியை நோக்கிச் செல்லும் பாதையில் மனதைக் கவரக்கூடிய பல சாலை நிறுத்தங்களால் கவரப்படுகிறீர்கள்.

6. பிரம்மாண்டமாக சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்

நான் நூறு சதவீதம் தலைவனாக தகுதி உடையவன் என்று கணிக்காதிருக்கும் வரையில் உங்களால் முதலிடத்தை அடைய முடியாது.

7. தகுதியுடையவராக, மனிதராக உங்களை ஆக்குங்கள்

நம்முடைய லட்சியக் கனவை அடைவதற்கு தகுதியுள்ளவராக நம்மே ஆக்கிக் கொள்வது மிக முக்கயமானது ஆகும்.

8. உங்கள் இலட்சியக் கனவின் உன்னத்மானவைகளை அகங்காரம் அழிந்துவிடாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள். வெற்றிப் பெருமிதத்தில் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனோபாவத்தை விட்டு விடாதீர்கள். பணிவே வளர்க்கும் மதி நுட்பத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இல்லையேல், வெற்றியின் உச்சியை ஒருபோதும் அடைய முடியாது.

9. உங்கள் மனதை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும்

நம்முடைய எதிர் யார்? நம்முடைய மனம்தான். உங்கள் ஆசை உங்கள் மனவுறுதியுடன் தொடர்பில்லாமல் இருக்கும் வரை உங்களால் ஒருபோதும் சாதிக்க முடியாது.

10. உங்கள் வெற்றிக்கு வழி வகுத்து சுவை கூட்டக்கூடிய விசேஷமான உட்பொருட்களைக் கண்டுபிடியுங்கள்.


No comments:

Post a Comment