Tuesday 24 May 2022

மணத்தக்காளி -தேரையர்




 “மந்தாக்கின சோபை வாந்தி யழல் போக்கிடும் 

மிளகுத்தக்காளி அல்லது மத்தக்காளி”





த்தக்காளிக் கீரையின் காய்கள் மிளகை ஒத்தவையாகக் கானப்படுவதால் அதனை மிளகுத்தக்காளி என்றும் அழைப்பர். இத்தக்காளிச் செடி மமுள்தால் மத்தக்காளி என்றும் திருமத்துக்கு தக்க உடல்நிலை யாளியை யொத்ததாக்கும் தன்மை தரக்கூடிய வல்லமை யுள்ளதால் இக் கீரையை மக்க தக்க யாளி மத்தக்காளி யாக்கிவிட்டது.
இக்கீரையின் மருத்துவ பாகம் பற்றி தேரையர் பதார்த்தகுண சிந்தாமணியில்

“மந்தாக்கின சோவை வாந்தி யாழல.; வாயு வெப்பம்
விந்து நோய் பாண்டொதிர் விக்கல் - முந்து
வளருமத்தோச நோய் மாறும் கைப்பான
மினகுத் தக்காளியிலை மெய்” என்று ஒருபாடலிலும் அடுத்து

காய்க்குக் கபம் தீரும் காரிகையே யவ் வினைக்கு
வாய்க்கிரந்தி வேக்காடு மாறும்காண் - தீக்குள்
உணக்கிடு வற்றலுறு பிணியாக்கு கூறும்
மனத்தக் காளிக்குள்ள வாறு”

வெப்பத்தினால் உண்டாகும் நோய்களுக்கு இது அருமந்தாகும் என்பதை தேரையர் எவ்வளவு அழகாக வெண்பாவில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக வெப்பகாலத்திலே ஏற்படக்கூடிய வாய்ப்புண்ணுக்கு மனத்தக்காளி இலையை மென்று விழுங்கி விட்டால் குணமாகிவிடும்.

இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த  சித்தர்கள் இன்றைய உலகுக்கு பொருத்தமானதை எப்படி உணர்ந்திருந்தனர் என்பதை அறிவியல் ஆராய்கின்றது என்னும் போது நமக்கெல்லாம் ஒருபுறம் பெருமையும் இன்னுமோர் புறம் வியப்பாகவும் இருக்கின்றது. தமிழ் மருத்துவ உலகத்தில் சித்தர்கள்  விஞ்ஞானத்தின் மெய்ஞானியாக இருந்திருக்கின்றனர். என்பது இங்கு கண்கூடு.

No comments:

Post a Comment