Wednesday 13 July 2022

இசை மருத்துவம்

 


கர்நாடக சங்கீதத்தில் சொல்லப்படும் இராகங்களின் மூலம் பலதரப்பட்ட நோய்களைக் குணப்படுத்தமுடியும். மேலும், இராகங்கள் பல உணர்ச்சிகளையும் தோன்ற வல்லது. 

சிந்து பைரவி, ரீதிகௌளை கருணை 

முகாரி, ரேவதி, சிவரஞ்சனி சோகம் 

ஹம்சத்வனி வீரம் 

மத்தியமாவதி, சஹானா மன அமைதி 

கானடா, பாகேஸ்ஸ்ரீ பக்தி 

நீலாம்பரி தாலாட்டு (தூக்கம் வர) 

ரகரப்பிரியா மன உறுதி, மன அமைதி 

சிவரஞ்சனி Intellectual excellent 

புன்னாகவராளி, சஹானா 

அதீத ஆத்திரத்தைப் போக்கும், இங்கு சில இராகங்களும் குணப்படுத்தக்கூடிய நோய்களும் கீழ்கண்டவாறு :: 

இராகம்                                         நோய்கள் 

பைரவி்                     ஆஸ்துமா, சுவாசம் சம்பந்தமான நோய்கள்,                                    T.B, புற்றுநோய், 

ஹிந்தோளம்             வாதம், low blood pressure 

சாரங்கா                   பித்தம் 

பிலஹரி,தர்பாரி      மன அழுத்தம் 

ஆகிர்பைரவி, தோடி        High blood pressure 

பாகேஸ்ஸ்ரீ, தர்பாரி     Insomnia, தூக்கம் வராமை 

தோடி                         தலைவலி, anxiety 

ஆகிர்பயிரவி             அஜீரணம்


இசையில் நல்ல ஆழ்ந்த அறிவுள்ள அலோபதி டாக்டர்கள், இசை மருத்துவத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். அமிர்தவர்ஷினி ராகம் மழையை வரவழைக்கும் தன்மை கொண்டது என நம்பப் படுகிறது. இந்த ராகம் உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது என ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. தண்ணீரோடு தொடர்புடைய ராகமாக இருப்பதால், சிறுநீரகப் பிரச்னைகளுக்கும் சிறந்த தீர்வாக இந்த ராகம் உள்ளது. தவிர மனம் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஹம்சத்வனி, பீம்பிளாஸ், இருதய நோய்களைக் குணப்படுத்த சந்திர கவுன்ஸ், மன அழுத்தத்தினால் ஏற்படும் நீரழிவைக் கட்டுப்படுத்த பகாடி, ஜகன் மோகினி என மியூசிக் தெரபியில் ராகங்கள் பட்டியலிடப்படுகின்றன.

No comments:

Post a Comment