Wednesday 6 July 2022

உணவு மருத்துவம்


 1.       கொத்தமல்லி கீரை -    மூளை,மூக்கு சம்பந்தமான சகல

                                                         வியாதியையும் குணமாக்கும்.                                                            

2.       செவ்வாழைப்பழம் -    கல்லீரல் வீக்கம், மூத்திரவியாதியை
                                                       குணமாக்கும்.

3.       பச்சை வாழைப்பழம் -    உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்

4.       ரஸ்தாளி வாழைப்பழம் -    கண் மற்றும் உடலுக்கு வழுவை தரும்.

5.       பேயன் வாழைப்பழம் -    வெப்பத்தைக் குறைக்கும்.

6.       கற்பூர வாழை -    கண்ணிற்குக் குளிர்ச்சி தரும்.

7.       நாவல்பழம் -    நீரிழிவை நீக்கும்.

8.       நேந்திரம் பழம்  -    இரும்புச் சத்தினை உடலுக்குக் கொடுக்கும்.

9.       கொய்யா -    சர்க்கரை வியாதியுள்ளவர்களுக்கு நல்லது.

10.   பப்பாளி -    மூல வியாதிகாரர்களுக்கு நல்லது.

11.   மாம்பழம் -    ரத்த அழுத்தம் சீராகும்.


12.   ஆப்பிள் -    மலச்சிக்கலை போக்கும்.

13.   திராட்சை -    இரத்த அழுத்தத்திற்கு நல்லது.

14.   எலுமிச்சை -    மலச்சிக்கலை போக்கும்.

15.   செர்ரி -    கருப்பை வியாதிகளுக்கு நல்லது.

16.   மாதுளம்பழச்சாறு - பால் சேர்த்து குடிக்க இரும்பு சத்து கிடைக்கும

17.   கேழ்வரகு -    கேழ்வரகு கூழ் செய்து பருகினால் பித்தம் தணியும்                                                 

18.   வெந்தயம் -    கல்லீரல்வீக்கம், இருமல், வயிற்றுவலி
                                     குணமாகும். மற்றும் இரவில் நீரில்
                                     ஊறவைத்து காலையில் உண்டால் உடல் பருக்கும்.

19.   இஞ்சி -    மென்று தின்றால் குரல்கம்மல் சரியாகி விடும்.


20.   சின்ன வெங்காயம் -    பசுவெண்ணையுடன் கலந்து சாப்பிட   
                                                       மூல வியாதி குணமாகும்.

21.   பூண்டு -   பூண்டை சுட்டு சாப்பிட்டு நீர் குடித்தால்
                           இருதய நோய்க்கு நல்லது.

22.   வாழைப்பூ -    விந்துவை அதிகரிக்கச் செய்யும் மற்றும்
                                    சீதபேதி, ரத்த மூலம் கட்டுப்படுத்தும்.

23.   நெல்லிக்கனி -    உடல் அசதியைப் போக்கி உடலுக்கு
                                           புத்துணர்ச்சியை அளிக்கும்.

24.   மிளகு -    பூச்சிகடிகளுக்கு மிளகு சாப்பிடுவதால்               
                            உடலில் உள்ள நஞ்சு அழிந்து விடும்.

25.   முள்ளங்கி -    கபம், இருமல் ஆகியவை தீரும்.

No comments:

Post a Comment