Saturday 9 July 2022

கிவி பழம்

சிட்ரஸ் வகை பழங்களுள் கிவி பழம் மிகவும் சுவையானதாக இல்லாவிட்டாலும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. கிவிப் பழம் இனிப்பு மற்றும் புளிப்புச் சுவை கலந்தது. இதனால் தான் இது பல்வேறு கேக்குகளில் டாப்பிங்காக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பலருக்கு இந்த கிவி பழத்தை கடைகளில் பார்த்தும் வாங்காமல் இருப்பர். இதற்கு அந்த பழத்தின் மகிமை தெரியாதது தான். கிவி பழம் பார்ப்பதற்கு சாப்பிட தோன்றாது. அதேப் போல் இது அனைவருக்குமே பிடிக்கும் பழமாகவும் இருக்காது. ஆனால் இந்த பழத்தை சாப்பிட்டால் நாம் நினைத்திராத அளவில் நன்மைகளைப் பெறலாம்.

கனிமச்சத்துக்கள் கிவி பழத்தில் முக்கிய கனிமச்சத்துக்களான போரான், குளோரைடு, காப்பர், குரோமியம், ஃப்ளூரைடு, அயோடின், இரும்புச்சத்து, மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், சோடியம், ஜிங்க் போன்றவை அடங்கியுள்ளது. இந்த அனைத்து சத்துக்களும் உடலின் மென்மையான செயல்பாட்டிற்கு அவசியமானவைகளாகும்.

கால்சியம் கிவி பழத்தில் எலும்புகளின் வளர்ச்சிக்கும், பற்களின் ஆரோக்கியத்திற்கும் தேவையான கால்சியம் வளமான அளவில் நிறைந்துள்ளது. அதுவும் 69 கிராம் எடை கொண்ட ஒரு கிவி பழத்தில் சுமார் 23.46 மிகி கால்சியம் நிறைந்துள்ளது.

கிவி பழத்தில் செரடோனின் அதிக அளவில் உள்ளது. இது செரிமானம் மற்றும் இதயத்தின் செயல்பாட்டிற்கு அவசியமானவைகளாகும். கிவி பழத்தை ஒருவர் சாப்பிட்டால், அது இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்திற்கு உதவுவதோடு, புத்துணர்ச்சியுடனும் இருக்கச் செய்யும். இவை அனைத்திற்கும் இதில் உள்ள செரடோனின் தான் காரணம்.

வைட்டமின்கள் கிவி பழத்தில் காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான நீரில் கரையக்கூடிய மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் உள்ளன. மேலும் கிவியில் அனைத்து வகையான வைட்டமின்களும் உள்ளன. அதில் வைட்டமின் ஏ, பி, சி, டி, ஈ மற்றும் கே போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆய்வு ஒன்றில் ஒரு கிவி பழத்தில் ஒரு ஆரஞ்சு பழத்தில் இருக்கும் அளவில் வைட்டமின் சி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொழுப்பு அமிலங்கள் பல்வேறு செயல்பாடுகளுக்கு அவசியமானவை. கிவி பழத்தில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், மோனோஅன் சாச்சுரேட்டட் கொழுப்புகள், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் போன்றவை உள்ளது. இந்த அனைத்து கொழுப்பு அமிலங்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்று செயல்படும்.

கிவிப் பழத்தில் உள்ள செரடோனின் தூக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுப்பதோடு, புத்துணர்ச்சியுடன் இருக்க உதவி புரியும். எனவே தூக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திப்பவர்கள், தினமும் ஒரு கிவி பழத்தை சாப்பிட நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

கிவி பழம் இரத்தத்தை மெலிதாக்கி, உடல் முழுவதும் சிறப்பாக ஓடச் செய்யும். மேலும் கிவி பழத்தை சாப்பிட்டால், உடலால் இரும்புச்சத்தை உறிஞ்சும் திறன் அதிகரித்து, இரத்த சோகை வரும் அபாயம் தடுக்கப்படும். ஏனெனில் இரும்புச்சத்து தான் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு மிகவும் முக்கியமான சத்தாகும்.


No comments:

Post a Comment