Friday 15 July 2022

ப்ளம்ஸ் - புருன்ஸ்

ப்ளம்ஸ் என்பது பார்ப்பதற்கு அழகான,மற்றும் சுவை மிகுந்த ஒரு கனி.இதனை பச்சையாகவும், உலர்கனியாகவும் உண்ணலாம். இதில் உள்ள நன்மைகள் பலருக்கு தெரிவதில்லை. உலர்ந்த ப்ளம்ஸ் பழத்தை, புருன்ஸ் பழம் என்பர். இதில் வைட்டமின் சி, கே, ஏ மற்றும் நார்ச்சத்து அடங்கியுள்ளது. ப்ளம்சில் பொதுவாக ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக இருக்கிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உறுப்புகளில் உள்ள ஆக்ஸிஜனை சிதைத்து, சூப்பர் ஆக்சைடு எதிர்மின் அயனியாக மாற்றுகிறது. இது உடலில் உள்ள கொழுப்புகளால் ஏற்படும் ஆக்ஸிஜன் இழப்பை தடுக்கிறது

உலகம் முழுவதும் ப்ளம்ஸ் வகைகள் இரண்டாயிரத்தை தாண்டுகிறது. ப்ளம்ஸ் சம்பந்தமாக பலவிதமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அவை அனைத்தும் ப்ளம்சில் அடங்கியுள்ள எண்ணற்ற நன்மைகளை பட்டியலிடுகின்றன. உலர்ந்த ப்ளம்சில் தாமிரம் மற்றும் போரான் போன்ற சத்துகள் அடங்கி உள்ளன. இவை எலும்பு துளை நோய் (எலும்பு மெலிதல்) வராமல் தடுக்க உதவுகிறது. மேலும் இதில் இனுலின் என்ற நார்சத்து பொருள் அடங்கி உள்ளது. இது செரிமான பாதையில் அமில தன்மையை சுரக்கும் குடல் வாய் பாக்டீரியாவை அளிக்கும் சக்தி கொண்டது. b


பிளம்சில் அதிக அளவிலான தாது பொருள்கள் அடங்கி உள்ளன. அவை உயர் இரத்த அழுத்தத்தை சரிசெய்யவும், பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பை குறைக்கவும் பயன்படுகிறது. சில ப்ளம்ஸ் பழங்களில் அந்தோசயணி என்ற நிறமி உள்ளது. இது மனித உடலில் உள்ள உறுப்புகளில் புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது. ப்ளம்ஸ் மற்றும் புரூன்ஸ் இரண்டுமே இரும்புச்சத்தை உள்வாங்கக் கூடிய சக்தியை உடலுக்கு அளிக்கிறது. மேலும் ப்ளம்ஸில் வைட்டமின் பி மற்றும் அதன் கூட்டு சத்துகளான வைட்டமின் பி6, நியாசின், ஃபீனோலிக் அமிலம் போன்றவை உள்ளன. இவை புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளின் வளர்ச்சிதை மாற்றத்தில் பெரும்பங்கு வகிக்கிறது.

செரிமானத்தில் ப்ளம்சின் பங்கு 

ப்ருன்ஸ் என்றழைக்கபடும் உலர்ந்த ப்ளம்சில் நார்சத்து அதிக அளவில் உள்ளது. இதனால் எளிய செரிமானத்திற்கு ப்ளம்ஸ் உதவுகிறது. மேலும் இதில் உள்ள சோர்பிடல், இசடின் போன்றவை செரிமான மண்டலம் நன்கு செயல்பட வழிவகுப்பதோடு, மலச்சிக்கலையும் தடை செய்கிறது. 

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் 

உடல் நலத்திற்கு தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ப்ளம்சில் கொட்டி கிடக்கின்றன. பாலி ஃபீனோலிக் கூட்டு சேர்மங்களான லூட்டின், கிரிப்டோசாந்தைன் மற்றும் ஜியா சாந்தைன் போன்றவை உறுப்புகளில் உருவாகும் மிகை ஆக்ஸிஜனை குறைக்கிறது. இது ஆர்.ஒ.ஸ் என்ற கூட்டு சேர்மத்தினால் உண்டாகும் நோய்களை தடுக்கிறது

No comments:

Post a Comment