Monday 18 July 2022

கலப்படம்



வர்ணம் சேர்க்க மரத் தூளையோசெங்கற் பொடியையோமிளகாய் தூளில் கலந்து விடுகின்றனர். சிறிது மிளகாய்த் தூளை எடுத்து எரிக்க வேண்டும். அதில்சாம்பல் இருந்தால் கலப்படமானது.

நாம் உண்ணும் உணவில், 22 சதவீதம் கலப்படம் செய்யப்பட்டவை என்று கூறப்படுகிறது.
என்னதான் பரிசோதிக்கப்பட்டு அரசாங்க முத்திரை குத்தப்பட்டாலும்கலப்படத்தைத் தடுக்க முடிவதில்லை. இதற்காகநாம் வாங்கும் உணவுப் பொருட்களைரசாயனப் பரிசோதனைக் கூடத்துக்காஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு மாதமும் கொண்டு செல்ல முடியும்?
நாமே அவற்றைச் சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம். இதற்குஹைட்ரோ குளோரிக் அமிலம்நைட்ரிக் அமிலம்டிங்க்சர் அயோடின்வெள்ளை பிளாட்டிங் பேப்பர் ஆகியவையே போதுமானது.

நெய் அல்லது வெண்ணெயில் வனஸ்பதி கலப்படம் செய்யப்பட்டிருப்பின்வெண்ணெய் அல்லது உருக்கிய நெய் ஒரு தேக்கரண்டி எடுத்துஅதில் ஒரு சிட்டிகை சர்க்கரையையும்ஐந்து துளி ஹைட்ரோ குளோரிக் அமிலத்தையும் சேர்க்கவும். வனஸ்பதி கலக்கப்பட்டிருந்தால்அமிலம் ரோஸ் அல்லது சிவப்பு நிறமாக மாறும்.
வெண்ணெய்நெய்யில் சிறிதளவு எடுத்து டிங்க்சர் அயோடினை சில துளிகள் அதனுடன் கலந்தால்கலப்படமிருப்பின் கலவை வயலட் நிறமாக மாறும். வெண்ணெயிலோநெய்யிலோ கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டு கொள்ளலாம்.
வர்ணம் சேர்க்க மரத் தூளையோசெங்கற் பொடியையோமிளகாய் தூளில் கலந்து விடுகின்றனர். சிறிது மிளகாய்த் தூளை எடுத்து எரிக்க வேண்டும். அதில்சாம்பல் இருந்தால் கலப்படமானது.

காபித் தூளில் புளியங்கொட்டையின் தோல்களையும் சேர்த்து அரைத்து கலப்படம் செய்கின்றனர். ஒரு குவளை தண்ணீரில் சிறிதளவு காபித் தூளைப் போட்டால் சுத்தமானது நீரில் மிதக்கும். புளியங்கொட்டைத் தோல் குவளையின் அடியில் படியும். இதேபோல்சர்க்கரையில் ரவை கலப்படம் செய்வதையும் கண்டறியலாம். இத்தகைய பொருட்களை ஆகாரங்களில் சேர்த்து உட்கொள்வதானால்சில அபாயகரமான நோய்க்கு ஆளாக நேரிடும். இதுபோன்ற உணவுப் பொருட்களைத் தவிர்ப்பதற்கு, சகோதர, சகோதரிகள் தாங்களே சிரமம் பாராதுமசாலா பொடிகளையும் மற்றும் தேவையானவற்றையும் தயாரித்துக் கொள்ளலாம். இதனால்ஆரோக்கியத்தைக் காப்பாற்றிஆபத்தை தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment